16.7.12

ஆபிஸர்களுக்கு டிரான்ஸ்பர் உண்டா இல்லையா?



இதுதான் இப்போது பாண்டியன் கிராம வங்கியில் அதிகமாகப் பேசப்படுகிற விஷயமாக இருக்கிறது.

கடுமையாக நிலவும் கிளரிக்கல் பற்றாக்குறையால், clerks to officers பிரமோஷன், எழுத்துத் தேர்வு முடிந்ததோடு அந்தரத்தில் நிற்கிறது. மொத்தமுள்ள 300 கிளரிக்கலில் 70 பேருக்கும் மேலே பிரமோஷன் ஆனால், மீதமுள்ள 225 கிளரிக்கலை வைத்து 215 கிளைகளை நடத்துவது என்பது கற்பனைகூட செய்ய முடியாத பயங்கரம். இனி Recruitmentக்கு IBPS எழுத்துத் தேர்வு முடிந்து, பிறகு நமது வங்கியில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, புதிதாக நம் வங்கியில் பணிக்குச் சேர்ப்வர்கள் காலடி எடுத்து வைக்கும்போது அனேகமாக நவமபர் ஆகிவிடும். அதையொட்டித்தான் பிரமோஷன், டிரான்ஸ்பர் எல்லாம் கிளரிக்கலுக்கு சாத்தியம்.

ஆபிஸர்களுக்கு அப்படி இல்லை. பிரமோஷனில் நேர்முகத் தேர்வு எல்லாம் நடத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது.  ‘இதோ’, ‘அதோ’ என நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற வருடம் கிளரிக்கலிலிருந்து பிரமோஷன் பெற்று தொலைதூரக் கிளைகளில் பணிபுரிபவர்களும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட டிரான்ஸ்பர்களில் பல வருடங்களாக அவதிப்படுபவர்களும், மருத்துவக் காரணங்களுக்காக  மாறுதல் வேண்டுபவர்களும் என பலர் காத்திருக்கின்றனர். PGBOU தொடர்ந்து நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தது. இறுதியாக இரண்டு வாரத்துக்கு முன்பு, டிரான்ஸ்பர் கமிட்டியைக் கூட்டி, அனைத்து ஆபிஸர்கள் சங்கங்களோடு பேசி டிரான்ஸ்பரை இறுதி செய்யப் போவதாக முஸ்தீபு செய்தது நிர்வாகம். நாமும், ‘இந்த வாரம் போடுவார்கள்’, ‘அடுத்த வாரம் போடுவார்கள்’ என நம்பியிருந்தோம்.

இப்போது திரும்பவும் நிர்வாகம் குட்டையை குழப்ப ஆரம்பித்திருக்கிறது. வங்கியில் system generated NPA ஒரு பெரும் சவாலாக முன்வந்திருப்பதாகவும், அனைவரும் கடுமையாக முயற்சித்தால் மட்டுமே இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியும் என நிர்வாகம்  பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கிறது. அனைத்துச் சங்கப் பிரதிநிதிகளையும் 12.7.2012 அன்று, இந்த இக்கட்டான தருணத்தில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என சேர்மன் பேசினார். அதே நாளன்று, டிரான்ஸ்பர் கமிட்டி,  அலுவலர் சங்கங்களை தனித்தனியே  அழைத்து, “செப்டம்பருக்குள் system generated NPAவை சரிசெய்து விடலாம். அதுவரை டிரான்ஸ்பர்களை ஒத்தி வைக்கலாம். இந்த நேரத்தில் டிரான்ஸ்பர் போடுவது சரியாக இருக்காது.  நமக்கு ஒவ்வொரு நாளும் முக்கியம். டிரான்ஸ்பர்களில் இடம் பெயர்வதில் ஏற்படும் காலங்கள் இந்த முக்கியமான நேரத்தை வீணாக்கிவிடும். நிர்வாகத்தின் முயற்சிகளை டிரான்ஸ்பர்கள் பாதிக்கும்.” என பேசினார்கள்.

நிர்வாகத்தின் இந்தப் பார்வையை PGBOU  ஒப்புக்கொள்ளவில்லை. “ஒருவர், தான் போகப் போகிற கிளையில்  பணி செய்வதற்கும், தான் இருக்கப் போகிற கிளையில் உளப்பூர்வமாக ஈடுபட்டு பணி செய்வதற்கும் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. ஆபிஸர்கள் பெரும் எதிர்பார்ப்போடு டிரான்ஸ்பருக்குக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி தள்ளிப்போடுவது சரியல்ல. அவர்களின் உற்சாகம் வடிந்து, வேண்டா வெறுப்பான ஒரு மனோநிலையை ஏற்படுத்தும். ஆக டிரான்ஸ்பர்களை ஒத்திப் போடுவது எந்த வகையிலும் system generated NPA வைக் குறைக்க உதவாது” என எடுத்துரைத்தோம். இப்படியொரு கருத்தை நம் சங்கம் மட்டுமே முன்வைத்திருப்பதாகவும் தெரிய வருகிறது.

நிர்வாகம் நமது கருத்துக்களையும் பரிசீலீத்து ஒன்றிரண்டு நாட்களுக்குள் முடிவெடுப்பதாகச் சொல்லியிருக்கிறது. நல்ல முடிவெடுக்கட்டும். விரைவாக எடுக்கட்டும். ஒத்துழைப்பு என்பது  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நிகழும் பரிமாற்றம். நிர்வாகம் அதை எப்போதுமே ஒருவழிப் பாதையாகவே நினைத்துக்கொண்டு இருக்கிறது.

நிர்வாகம் தவறான முடிவெடுக்குமானால், வங்கியில்  ‘system generated NPA’ குறித்த பேச்சாய் இருக்காது.  ’ஆபிஸர்களுக்கு டிரான்ஸ்பர் உண்டா இல்லையா?’ என்கிற கேள்விகளாய்த்தான் எழும்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!