இங்கு திருமணங்கள், பிறந்த நாட்கள், பணி ஓய்வு நாட்கள், பணி நிறைவு விழாக்கள் போன்ற ’PGBEAN' குடும்ப நிகழ்வுகளை 18.6.2013 முதல் தொகுக்க ஆரம்பித்திருக்கிறோம்.
இது போல விபரங்களை, தகவல்களை தோழர்கள் pgbea.vnr@gmail முகவரிக்கு தெரிவித்தால், அந்த குறிப்பிட்ட தேதியில் பதிய முடியும். 18.6.2013 க்கு முந்தைய தேதிகள் பற்றிய தகவல்களையும் தரலாம். தாங்களே கூட பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் இ-மெயில் (gmail ஆக இருத்தல் வேண்டும்) முகவரி தந்தால், அவர்கள் எப்படி தாங்களே தகவல்களை இந்த காலண்டரில் பதிவு செய்வது என்பதை தெரிவிக்கிறோம்.
இவற்றை மொத்தமாக திரும்பிப் பார்க்கும்போது, PGB என்னும் குடும்பத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய குறிப்புகளாய் அவை காணக் கிடைக்கும்.
நமது குடும்பங்களில் அனேகமாக நாம்தான் அரசு வேலை பார்க்கும் முதல் தலைமுறையச் சேர்ந்தவர்களாக இருப்போம். கிராமிய வங்கிகள்தான் இந்த வாய்ப்பினையும், வாழ்க்கையையும் நமக்கு கொடுத்து இருக்கிறது.
நமது உரிமைகளை நிலைநாட்டி, நமது சலுகைகளை பெற்று மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்த உழைப்பின் சொந்தக்காரர்கள் நாம். சமூக அந்தஸ்தும், பாதுகாப்பான வாழ்வும், கனவும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் நாம் பெற்றது ஒரு வரலாறு.இங்கு பணிபுரியும் நாம் எல்லோருமே ஒரு குடும்பமாக இருந்து, சகலருக்கும் சொல்ல வேண்டிய கதை இது.
அதற்காகவே PGB Family என்னும் இந்தப் பகுதி. இங்கு நம் சந்தோஷங்கள், சாதனைகள், வாழ்வின் மைல்கல்கள், துயரங்கள் என எல்லாவற்றையும் பகிர்வோம்.
இது நமது குடும்பத்தின் ஆல்பம்!