25.6.11

EA-OU circular dt.12.02.2010

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
விருதுநகர்
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
7.2.2010 அன்று கூட்டப்பட்ட நமது அவசரப் பொதுக்குழு ஒரு உற்சாகமான, தெளிந்த மனநிலையை நமக்கு தந்திருந்தது. கடந்த ஒரு மாதகாலம் இந்த வங்கியில் நடந்து வரும் நிகழ்வுகளைத் தொகுத்து, நமது வழிகளை ஆராயும் முயற்சியாக அமைந்தது.
ஒரே ஒருநாள் அவகாசத்தில் தோழர்களுக்கு தெரியப்படுத்தினோம். ஆணால் 250க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்து ஒற்றுமையையும், உறுதியையும் காட்டி இருக்கின்றனர். பாண்டியன் கிராம வங்கி அலுவலர்கள் சங்கத் தலைவர் முத்துவிஜயன் அவர்களும், உதவிப் பொதுச்செயலாளர் தோழர்.நரேன் அவர்களும் மற்றும் சில அலுவலர் சங்கத் தோழர்களும் நம் அவசரப் பொதுக்குழுவில் பங்கேற்று ஆதரவைக் காட்டினர். BEFIயின் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர்.கே.கிருஷ்ணன் வழிகாட்டி, திசைகளை தீர்மானிக்க வருகை தந்திருந்தார்.
சஸ்பென்ஷன்கள், உயர்நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர்கள், சார்ஜ் ஷீட்கள் சமபளப்பிடித்தங்கள் இவைகளைத் தொடர்ந்து ஐ.ஓ.பி நிர்வாகத்துடன் அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் திலீப் குமார் முகர்ஜி அவர்களின் பேச்சுவார்த்தை என நடந்தவை யாவும் விளக்கப்பட்டது. வதந்திகளுக்கும், சந்தேகங்களுக்கும் இடமளிக்காமல் உண்மைகள் தெளிவுபடுத்தப்பபட்டன. ஒற்றுமையும், உறுதியுமே நமது பாதை என்பது தெளிவுபடுத்தப்பட்டது. மிக உற்சாகமான மனநிலையில் தோழர்கள் பொதுக்குழுவிலிருந்து, திரும்ப ஒரு அற்புதமான எழுச்சியாக இருந்தது.
இந்த நிலையில் 12.2.2010 அன்று ஐ.ஓ.பியின் பொதுமேலாளர் திரு மிஸ்ரா அவர்கள் நமது தலைமையலுவலகம் வருவதையறிந்து அவரை சந்திக்க அவகாசம் கேட்டோம். அன்று மாலை 4 மணிக்கு சந்திக்க வருமாறு அழைப்பு வந்தது. திரு.மிஸ்ரா அவர்களோடு நமது சேர்மன், இரு போதுமேலாளர்களும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை மிக சுமூகமாகவும், பரஸ்பரம் விஷயங்களை நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பகிர்ந்துகொள்வதாக இருந்தது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். நாம் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். நிர்வாகமும் சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறது. இருதரப்பிலும் மீண்டுமொருமுறை உட்கார்ந்து, பேசி, இந்த வங்கியில் தொழில் அமைதியைக் கொண்டு வருவது எனவும், போர்க்கால நடவடிக்கைகளாக வங்கிக்காக அனைவரும் ஒன்றிணைந்து மார்ச் மாதத்தில் பணியாற்றுவது எனவும் நம்பிக்கைகள் தெரிவிக்கப்பட்டன.
பேச்சுவார்த்தையை உன்னிப்பாக கவனித்தும், அவ்வப்போது சில தெளிவுகளைத் தந்தும் உடன் இருந்த ஐ.ஓ.பி பொதுமேலாளர் திரு.மிஸ்ரா அவர்களின் பங்கு சிறப்பானது. வங்கியின் வணிகம் குறித்து இவ்வளவு கவலையும், அக்கறையோடும் கொண்டிருக்கும் உங்களால் வங்கியை நன்றாகக் கொண்டு வரமுடியும் எனத் தாம் நம்புவதாக நம்மிடம் தெரிவித்தார். சேர்மன் அவர்களும் “நல்ல potential உள்ள வங்கி இது. இவர்கள் நினைத்தால் இந்த வங்கி பல சிகரங்களைத் தொடும்” என்றார். நம்மை உற்சாகப்படுத்தும் complimentகள் இவை.
நமது இரு சங்கத்தின் முன்னணித்தலைவர்களும் அகில இந்திய மாநாட்டிற்காக இராஜஸ்தான் செல்வதால் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தையை மார்ச் 1ம் தேதி வைத்துக்கொள்வது என குறிக்கப்பட்டு இருக்கிறது. மாநாட்டிற்கு செல்லும் தோழர்களின் லீவு சாங்ஷன் செய்யப்பட்டு, டெபுடேஷன் ஏற்பாடு செய்வதற்கும் பொதுமேலாளர்கள் தயாராக இருப்பத தெரிவித்தனர். மார்ச் 1ம் தேதி வரையிலும், சார்ஜ்ஷீட்களுக்கான பதிலைக் கொடுக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கவில்லை என்றும், பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோழர்களே! இது ஒரு நல்ல ஆரம்பமாகவும், நல்லெண்ண சமிக்ஞையாகவுமே நாம் புரிந்து கொள்கிறோம். நடப்பவை நன்றாகவே நடக்கும் என் நம்புகிறோம்.
அகில இந்திய மாநாட்டிற்குப் பின்னர் சந்திப்போம்…..