Joint Forum of All Trade Unions in Pandyan Grama Bank
(PGBOU, PGBOA, PGBSEWA, PGBWU, PGBEA)
Virudhunagar
(PGBOU, PGBOA, PGBSEWA, PGBWU, PGBEA)
Virudhunagar
அருமைத்
தோழர்களே!
வணக்கம்.
நிர்வாகம்
அப்ரைசர்களுக்கு கிளை மாறுதல் செய்திருப்பது
குறித்து சென்ற சர்க்குலரில் நமது
நிலைபாட்டை தெரியப்படுத்தி இருந்தோம். அதிகாரபூர்வமற்ற முறையில், வாய்மொழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதை விமர்சித்து இருந்தோம். சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் எதிராக நிர்வாகம் கடைப்பிடித்து
வரும் நடைமுறை கண்டனத்திற்குரியது. இதனை
எதிர்த்து, `அப்ரைசர்களுக்கு கிளை மாறுதல்` குறித்து
எழுத்துபூர்வமாக நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,
அதுவரை புதிய அப்ரைசர்களை வைத்து
நகைக்கடன்கள் வழங்க
வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தோம்.
நமது அறைகூவலை ஏற்று, பல கிளைகளில்
புதிய அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில்,
நமது ஐந்து சங்கங்களின் பிரதிநிதிகளும்
மீண்டும் 23.11.2013 அன்று நிர்வாகத்தை சந்தித்து
பேசினோம். நமது வேண்டுகோளை ஏற்று
வங்கியின் சேர்மன், வங்கியின் நிர்வாகக்குழுவை 29.11.2013 அன்று ஐந்து சங்கங்களின்
பிரதிநிதிகளும் சேர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும், நமது நிலைபாட்டை நிர்வாகக்குழு
உறுப்பினர்களிடம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார்.
அதுவரை நிர்வாகம் வாய்மொழி உத்தரவாக தெரிவித்தபடி, வேறு அப்ரைசர்களை வைத்து
நகைக்கடன்கள் வழங்க ஒத்துழைக்க வேண்டுமெனவும்
கேட்டுக்கொண்டார்.
பல்வேறு
விஷயங்கள் குறித்து விவாதித்த பிறகு, வங்கியின் நலனை
கருத்தில் கொண்டு, 29.11.2013 வரையிலும், நமது கிளை மேலாளர்கள்
நிர்வாகத்துக்கு எழுத்து பூர்வ்மாக ஒரு கடிதம் எழுதிவிட்டு,
வேறு அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்குவார்கள்
என தெரிவித்திருக்கிறோம். கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்படுகிறது.
இந்தக் கடிதத்தை எழுதிவிட்டு, நமது மேலாளர்கள் 25.11.2013 அன்று முதல்
நிர்வாகத்தால் வாய்மொழி உத்தரவுப்படி அனுப்பப்பட்ட அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்கலாம்
என தெரிவித்துக் கொள்கிறோம்.
29.11.2013 அன்று
நிர்வாகக்குழுவை சந்தித்து நமது ஐந்து சங்கப்
பிரதிநிதிகளும், அப்ரைசர்களுக்கு இடமாற்றம் வேண்டாம் என்னும் நம்கருத்தை முன்வைத்து
விவாதிப்பது எனவும் முடிவு செய்திருக்கிறோம்.
29.11.2013 நிர்வாகக்குழுவை
சந்தித்து பேசியபிறகு, மேற்கொண்டு நாம் என்ன செய்வது
என்பதை முடிவு செய்து அறிவிக்கிறோம்.
கடித நகல்:
-------------------------------------------------------------------
From
Manager
Pandyan Grama Bank
_________________ Branch
_________________ Branch
To
The Regional Manager
Pandyan Grama Bank
Regional Office
______________________
Sir
Sub: Engagement of Appraisers
As per the oral/Telephonic instructions given by the
Regional Office, we
engage Sri. , regular
appraiser of the branch to appraise the jewels for the
jewel loans granted by our branch from 25.11.2013.
This is for your kind information and our records.
Thanking you
Yours faithfully
Branch Manager
Date:
Place
-------------------------------------------------------------------
தோழர்களே!
அப்ரைசர்கள்
பிரச்சினையில் நமது ஐந்து சங்கங்களும்
இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஆரம்பமே.
20.11.2013 அன்று
கூடிய நமது சங்கங்கள், இவ்வங்கியில் அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகள்
இருப்பதை விவாதித்தோம். முக்கியமாக தலைமையலுவலகத்தை புனரமைப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளில் காணப்படும்
ஒழுங்கீனங்கள், பணி ஓய்வு பெறுகிறவர்களிடம்
மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை அபகரிப்பது மற்றும்
லீவுகளில் நடத்தப்படும் கெடுபிடிகள் குறித்து ஒருமித்த கருத்து உருவாகியிருக்கிறது. விரைவில்
அவைகளை முன்வைத்து நமது ஒற்றுமையால் வென்றெடுப்பது
என முடிவு செய்திருக்கிறோம்.
விரிவான
செய்திகளுடனும், முடிவுகளுடனும் விரைவில்.
தோழமையுடன்
GS-PGBOU GS-PGBOA GS-PGB SEWA GS-PGBWU GS-PGBEA
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!