24.12.14

கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிரான நமது ஆர்ப்பாட்டம்!

22.12.2014 அன்று மத்திய அரசு, அந்த ஆபத்தான மசோதாவை மக்களவையில் நிறைவேற்றி இருக்கிறது. கிராம வங்கிகளில் இருக்கும் அரசின் பங்குகளை 51 சதவீதத்திற்கு குறைத்து, மீதியை தனியார்கள் கைகளில் கொடுக்கும் நடவடிக்கை இது. கிராம வங்கிகளின் முதலீட்டை அதிகரிக்கப் போகிறோம் என்று அறிவிப்போடு இந்த பாதகத்தை செய்யத் துணிந்திருக்கிறது மோடியின் அரசு.


ஊழலில் சிக்கி, மக்களை வாட்டி வதைத்த காங்கிரஸ் அரசை மக்கள் நிராகரித்து, பெரும் எதிர்பார்ப்போடு பா.ஜ.க அரசை அதிகாரத்தில் அமர்த்தினார்கள். பேய்க்கு பயந்து பிசாசிடம் சிக்கிக்கொண்ட கதை நடந்துவிட்டது.

பதவியில் அமர்ந்ததிலிருந்து மக்களுக்கு விரோதமாகவும், பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மூர்க்கத்தனமாக ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது மோடியின் அரசு.

நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு மூடு விழா, சுய உதவிக் குழுக்கள் கலைப்பு, மானியங்கள் வெட்டு, சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை குறைந்தாலும், இங்கு குறைக்காத பிடிவாதம், காப்பீட்டுத் துறையில் தனியார், ரெயில்வேயில் தனியார் என ஒவ்வொரு நாளும் சாதாரண மக்களுக்கு எதிரான ஆட்சி செய்யும் மோடியின் அரசு இப்போது கிராம வங்கிகளிலும், அதன் எதிர்காலத்திலும் கைவைத்திருக்கிறது.

மூன்றேகால் லட்சம் கோடி பிசினஸ் உள்ள கிராம வங்களை, 2500 கோடிக்கு மேல் சென்ற வருடம் நிகர லாபம் ஈட்டும் கிராம வங்கிகளை தனியாருக்குக் கொடுப்பதற்கு ஏதுவாக மக்களவையில், RRB Act amendment bill ஐ நிறவேற்றி விட்டது. இன்னும் இராஜ்ய சபையில் நிறைவேற வேண்டியது இருக்கிறது.

நமது உழைப்பில் வளர்ந்த கிராம வங்கிகளை, நமது சேவையில் அடைந்த லாபத்தை முதலாளிகளுக்கு எடுத்துக் கொடுக்கும் அயோக்கியத்தனமான செயல் இது.

சாதாரண மக்களிடமிருந்து கிராம வங்கிகளை விலக்கி வைக்க அரசு முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. தொழிலாளர்கள் நலன்களும், உரிமைகளும் பறி போகும். இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் மெல்ல மெல்ல நீர்த்துப் போகும். கிராம வங்கிகள் அதன் அர்த்தத்தை இழந்து, முதலாளிகளின் கைகளில் சிக்கி, சீரழியும்.

நமது அகில இந்திய சங்கம் AIRRBEA இதனை உடனடியாக கண்டித்து, 23.12.2014 அன்று இந்தியாவெங்கும் உள்ள அனைத்து கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்துமாறு அழைப்பு விடுத்தது.

பாண்டியன் கிராம வங்கியில், AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களான PGBWUவும், PGBOUவும்  23.12.2014 அன்று காலையில் நமது தோழர்களுக்கு அழைப்பு விடுத்தன. மிகக் குறைந்த அவகாசம்தான். ஆனாலும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள், விருதுநகரில்  PGB தலைமையலுவலகத்தின் முன் குவிந்துவிட்டனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைய தலைமுறையினர் என்பதுதான் உற்சாகமான செய்தி.

PGBWUவின் உதவிப் பொதுச் செயலாளர் தோழர்.அருண்பிரகாஷ் சிங்கின் ஆக்ரோஷமான கோஷங்களோடு ஆர்ப்பாட்டம் துவங்கியது. PGBWUவின் செயல் தலைவர் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். AIRRBEA-TN  தலைவர் தோழர். கிருஷ்ணன், PGBOU  உதவித்தலைவர் தோழர்.போஸ் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் தோழர்.முத்துவிஜயன், பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம், PGBEAவின் இணைச்செயலாலர் தோழர்.விவேகனந்தன், பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ், BEFI விருதுநகர் மாவட்டச் செயலாளர் தோழர் மாரிக்கனி ஆகியோர் மத்திய அரசைச் சாடியும், போராட்டத்தை வாழ்த்தியும் பேசினார்கள். இறுதியில் PGBOU  செயற்குழு உறுப்பினர் தோழர்.காமராஜ் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் காட்சிகள் இங்கே:


தோழர்கள்

கோஷமிடும் PGBWU உதவிப்பொதுச்செயலாளர்
தோழர் அருண் பிரகாஷ் சிங்

தோழர்கள்

தலைமை தாங்கிய PGBWU  செயல் தலைவர்
தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன்

AIRRBE-TN தலைவர் தோழர்.கிருஷ்ணன்

PGBOU  உதவித்தலைவர் தோழர் போஸ்பாண்டியன்

தோழர்கள்

PGBWU இணைச்செயலாளர் தோழர்.விவேகனந்தன்

PGBOU சார்பில் தோழர்.முத்துவிஜயன்

PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம்

PGBWU  பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்

தோழர்கள்

தோழர்கள்

”மத்திய அரசே! கிராம வங்கி ஊழியர்கள்நாங்கள் தொடர்ந்து போராடுவோம்” 
 -தோழர்.மாதவராஜ்

தோழர்கள்

BEFI-TN  மாவட்டசெயலாளர் தோழர்.மாரிக்கனி

நன்றி கூறும் PGBOU செயற்குழு உறுப்பினர் தோழர்.காமராஜ்

தோழர்கள்

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!