3.1.15

வருக 2015 வருக!

ஆங்கிலப் புத்தாண்டு 2015 பிறக்கிறது.

இந்த தருணத்தில் கடந்தகாலத்தின் நினைவுகளும், எதிர்காலத்தின் கனவுகளும் நிரம்பி நிற்கின்றன.


மிகுந்த எதிர்பார்ப்போடு நாம் சென்ற வருடத்தின் நாட்களை பென்ஷனுக்காக கடந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு வாய்தா நடக்கும்போதும் தோழர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

10வது இருதரப்பு ஒப்பந்தத்திற்காக வங்கி ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கினர். வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. நாமும்  கலந்துகொண்டோம்.

காங்கிரஸ் அரசுக்கும், பா.ஜ.க அரசுக்கும் கொள்கையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை 2014 நமக்கு தெளிவாகச் சொல்லிவிட்டது. காங்கிரஸை விடவும் மிக மோசமான, ஆபத்தான அரசு என்னும் உண்மையை உணர்த்தியிருக்கிறது.

தொழிலாளர் நலச் சட்டங்களை துக்கி எறிவதற்கு பா.ஜ.க அரசு முடிவு செய்து இருக்கிறது. காப்பீட்டுத்துறை, ரெயில்வே என தொடர்ந்து கிராம வங்கிகளையும் தனியார் மயமாக்க பா.ஜ.க அரசு மூர்க்கத்தனமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

நமது வங்கியில், தலைமையலுவலகத்தில் தாமதமும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் மலிந்து கிடந்தன. இதனை எதிர்த்து அனைத்துச் சங்கங்களுடன் இணைந்து நாம் இயக்கம் ஆரம்பித்தோம்.

கிளைகளில் வேலைப்பளுவும், ஆள் பற்றாக்குறையும் அலைக்கழிக்க, நிர்வாகமோ புதிய பணி நியமனம், பதவி உயர்வு கொடுப்பதில் பெரும் காலதாமதம் செய்தது. இதனைக் கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

2014ம் ஆண்டில், எதிர்பார்ப்புகளோடும், எதிர்ப்புகளோடும் நாம் நாட்களை கடந்து வந்திருக்கிறோம்.

இவைகளுக்கு மத்தியில்தான் இந்த அதிசயம் நடந்தது.

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என PGBEAவும், PGBWUவும் சங்கமித்து,  AIRRBEA வோடு இணைந்து, PGBWU என்னும் பெயரில் 2014ம் ஆண்டில் நாம் ஒன்றாக ஒன்றானோம்!.

இந்த ஒற்றுமையால், 2015ல் நாம் பல வெற்றிகளை ஈட்டுவோம். புதிதாய் பணிக்குச் சேரும் கிளர்க்குகளுக்கு இரண்டு  graduation increments பெறுவோம். தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குவோம்.வணிக வங்கிகு இணையான பென்ஷனை பெறுவோம்..10 வது இருதரப்பு ஓப்பந்தப்படி ஊதிய உயர்வு பெறுவோம்!

வருக 2015, வருக!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!