கிராம வங்கிகளை தனியார் மயமாக்க மத்தியில் பி.ஜே.பி அரசு ,முடிவு செய்ததை நமது அகில இந்திய சங்கம் AIRRBEA எதிர்த்து போராட்டங்களையும், இயக்கங்களையும் அறிவித்து இருந்தது.
அதன் முதற்கட்டமாக, டிசம்பர் 23ம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள கிராம வங்கி தலைமையலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக 2015 ஜனவரி 6ம் தேதி ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்தம் திட்டமிடப்பட்டது. இதன்பொருட்டு, ஊதிய உயர்வினை முன்வைத்து, வங்கித்துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த, ஜனவரி 7ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தம் தவிர, ஏனைய போராட்டங்களில், அதாவது, ஜனவரி 21-24 ஆகிய நான்கு நாள் வேலை நிறுத்தம் மற்றும் மார்ச் 16 முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தங்களில் கலந்துகொள்வது என AIRRBEAவின் மத்திய கமிட்டி முடிவு செய்தது.
அதன் அடிப்படையில், ஜனவரி 6ம் தேதிகான ஸ்ட்ரைக் நோட்டிஸ் மத்திய அரசுக்கும், அனைத்து கிராம வங்கி நிர்வாகங்களுக்கும் AIRRBEA சார்பில் அனுப்பப்பட்டது.
இதனிடையே, கிராம வங்கிகளில் அகில இந்திய அளவிலான சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, கிராம வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிராக போராட விருப்பம் தெரிவித்தன. எனவே ஒரு கூட்டு இயக்கம் நடத்துவது எனவும், அதற்கான அகில இந்திய அளவிலான கூட்டம் ஒன்றை ஜனவரி 15ம் தேதி டெல்லியில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
எனவே, AIRRBEA மட்டும் தனியாக போராடுவது என முடிவு செய்த, ஜனவரி 6ம் தேதி வேலைநிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. அதே வேளையில், ஊதிய உயர்வுக்கான ஜனவரி 7ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்வதற்கு, ஸ்டிரைக் நோட்டிஸ் கொடுக்க வேண்டிய 14 நாட்கள் கால அவகாசம் இல்லாததால், ஜனவரி7ம் தேதி வேலைநிறுத்தத்திலும் பங்கு பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆக, AIRRBEAவின் இணைப்புச் சங்கங்கள், ஜனவரி 6ம் தேதி வேலை நிறுத்தத்திலும் பங்கு பெறவில்லை. ஜனவரி 7ம் தேதி வேலை நிறுத்தத்திலும் பங்கு பெறவில்லை.
ஜனவரி 21-24 வேலைநிறுத்தத்திலும், மார்ச் 16 முதலான காலவரையறையற்ற வேலை நிறுத்தத்திலும் பங்கு கொள்கின்றன!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!