7.1.15

Graduation increments to Newly recruited Clerks....

கிராம வங்கி ஊழியர்களுக்கு, வணிக வங்கியின் ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்னும் நீதி கிடைக்க நாம் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. 1992லிருந்து, நமக்கு வணிக வங்கி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில்தான், வணிக வங்கியில் வழங்கப்பட்டு வரும் இரண்டு graduation incremnetகளை நமது வங்கியில் உள்ள கிளரிக்கல் தோழர்களும் பெற்று வந்தனர்.

இதனைக் கெடுக்கும் விதமாக, 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், நபார்டிலிருந்து மத்திய அரசின் நிதியமைச்சகத்தின் வங்கித்துறைக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில், “இப்போது கிளரிக்கல் பதவிக்கு குறைந்த பட்ச  தகுதி கிராஜுவேட்டாக இருப்பதால் இந்த இரண்டு இண்கிரிமெண்ட்களும் கொடுக்கலாமா” என்று கேட்கப்பட்டு இருந்தது. வங்கித்துறையிலிருந்து இதற்கு பதில் எழுதப்படவில்லை.

”மத்திய அரசின் வங்கித்துறையிலிருந்து பதில் வந்த பிறகு, கிராம வங்கிகள் புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு இரண்டு graduation increments கொடுப்பது குறித்து முடிவு செய்யலாம், அதுவரை காத்திருக்கவும்” என சூது நிறைந்த ஒரு கடிதத்தை கிராம வங்கி நிர்வாகங்களுக்கு நபார்டு ஒரு கடிதம் எழுதியது.

இந்தக் கடிதத்தை பல கிராம வங்கி நிர்வாகங்கள் கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் கிராம வங்கிகளுக்கு இரண்டு graduation increments கொடுக்கப்பட வேண்டும் என்று தெளிவாக மத்திய அரசின் வங்கித்துறையிலிருந்து ஏற்கனவே 2010ம் ஆண்டே ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன் மீதான இன்னொரு ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. நபார்டுக்கு அதிகாரம் இல்லை. எனவே மத்திய அரசு  எழுத்து பூர்வமாக இன்னொரு ஆணை பிறப்பிக்கும் வரை கொடுக்கலாம் என அந்த கிராம வங்கி நிர்வாகங்கள் மிகச் சரியாக முடிவெடுத்தன. தமிழ்நாட்டில் பல்லவன், புதுவை கிராம வங்கி நிர்வாகங்கள் இரண்டு graduation incementகளை இன்று வரை கொடுத்துக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இதனை 2013ம் ஆண்டிலிருந்து பணிக்குச் சேர்ந்த கிளர்க்குகளுக்கு கொடுக்க மறுத்து விட்டது.

இதனை நாம் எதிர்த்து மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடுத்துள்ளோம். வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

அதே வேளையில், நமது அகில இந்திய சங்கமான AIRRBEA தொடர்ந்து Graduation Increments குறித்து, மத்திய நிதியமைச்சகத்துடனும், நபார்டுடனும் பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. 24.9.2014 அன்று மும்பையில் நடந்த Joint Consulatative Committee Meetingல் இந்த பிரச்சினையை எழுப்பியது AIRRBEA. (பார்க்க:AIRRBEA agenda Notes for JCC meeting on 24.09.2014). அப்போது, வணிக வங்கிகளில் graduation increments தொடர்ந்து கொடுக்கப்படுவதால், கிராம வங்கிகளிலும் அதனை கொடுப்பதில் தடையில்லை என நிதியமைச்சக அதிகாரிகள் சொன்னார்கள். அதன் அடிப்படையில், AIRRBEA தலைவர்கள் மீண்டும் நிதியமைச்சக அதிகாரிகளை சந்தித்து, JCC முடிவு குறித்து நபார்டுக்கு அறிவுறுத்துமாறு வேண்டினார்கள். நிதியமைச்சகமும் சென்ற டிசமபர் மாதத்தில் கடிதம் எழுதியது.

அந்தக் கடிதத்தின் அடிப்படையில், நபார்டு அனைத்து கிராம வங்கிகளுக்கும் Graduation increments கொடுக்கச் சொல்லி கடிதம் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் , மாறாக  கீழ்க்கண்ட மூன்று விஷயங்களில் கருத்து கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது.

1.From what date these two increments are not being allowed.
2.Financial implication for extending the benefit.
3.Likely consequences for not extending the benefit.

நபார்டிலிருந்து வந்தக் கடிதம் குறித்து நிர்வாகத்திடம் நாம் பேசினோம். Graduation increment கொடுக்க வேண்டும் என சாதகமாக பதில் எழுதி இருப்பதாக நிர்வாகம் சொல்லி இருக்கிறது.

அதே வேளையில், நபார்டு இப்படி கடிதம் வேண்டிய அவசியமில்லை என, AIRRBEA, நபார்டுக்கு கீக்கண்ட கடிதத்தை எழுதி இருக்கிறது.

------------------------------------------------------------------------------------------------------------------------

All India Regional Rural Bank Employees Association
(A Coordinating Body of National Federation of RRB Officers &
 National Federation of RRB Employees)



Ref. No. 191                                                                                 Date: -02-01-2015

To

Smt. Snehlata Shrivastava
Additional Secretary
Department of Financial Services
Ministry of Finance
Government of India
Parliament Street
New Delhi – 110001
as-dfs@nic.in

Respected Madam,

Sub: - Two additional increments to Graduate Office Assistants in RRBs.

Ref: - NABARD letter no. NB.IDD.RRCBD/1124/316 (APPR)/2014-15 dated 02-12-           2014 addressed to the Chairman, all RRBs.

We beg to draw your kind attention to the above referred NABARD letter wherein it has been stated that Government of India has advised NABARD that to consider extending the benefit of two additional increments to newly recruit Graduate Office Assistant (Multipurpose), RRBs are required to furnish their opinion on –

          i.            From what date these two increments are not being allowed.
        ii.            Financial implication for extending the benefit.
      iii.            Likely consequences for not extending the benefit.

In this connection we like to point out that in terms of the NIT Award dated 30-04-1990 and successive orders of the Supreme Court dated 31-01-2001 and 07-03-2002, the GOI is duty bound to maintain Parity of Wage Structure of the RRB staff with those in NCBs/Sponsor Banks.

A good number of RRBs were paying these benefits as usual but some of them suddenly stopped paying the same on the plea that the minimum qualification for the post of Office Assistant is graduate.

We have already pointed out that the above logic is not at all relevant, because the practice and rule in NCBs/Sponsor Banks is same for recruitment of similar cadre of staff, and still the additional increments are allowed in terms of the provisions of Bipartite Settlement in the Banking Industry.

Under this situation the matter was discussed in the 4th JCC meeting held at NABARD, HO, Mumbai on 24-09-2014 in details and all present were very much convinced in favour of allowing this benefit uniformly in all RRBs and the same should be restored in case of RRBs who have suddenly stopped it.

We therefore request you Madam, to kindly see that necessary advice/instruction is percolated to all RRBs to allow this benefit in line with the direction of the NIT Award and also orders of the Hon’ble Supreme Court.

With regards

Yours faithfully

(A Sayeed Khan)
Secretary General

Copy for kind information and necessary action to: -
-          Sri A K Dogra, Deputy Secretary, DFS, MOF, GOI.
-          The Chief General Manager, IDD, NABARD, HO, Mumbai.


(A Sayeed Khan)
Secretary General
------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்களே!

ஆக, Graduation Increments  விஷயத்தில் இப்போது Postive ஆன அசைவுகள் ஏற்பட்டு இருக்கின்றன.
விரைவில் சாதகமான முடிவு வரும்.
நம்பிக்கையோடு எதிர்பார்ப்போம்!!

1 comment:

  1. Thank you sirs for your actions....... Expecting good results very soon........

    ReplyDelete

Comrades! Please share your views here!