30.11.13

தோழர் சோலைமாணிக்கம் வங்கிப்பணியிலிருந்து விடைபெறுகிறார்!!


நமது அருமைத் தோழர் சோலைமாணிக்கம் இன்று வங்கிப்பணியிலிருந்து விடைபெறுகிறார். 1979ல் இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்து 34 ஆண்டு காலம் நம்மோடு பயணம் செய்து வந்திருக்கிறார். 1982லிருந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இரவு பகல் பாராது தனது பெரும்பாலான நாட்களை அர்ப்பணித்திருக்கிறார்.

எவ்வளவோ நிகழ்வுகள், சோதனையான காலக்கட்டங்கள், போராட்டங்கள், பயணங்கள் என கடந்த காலத்தின் ஒவ்வொரு நினைவுகளும் துளித்துளியாய் இந்த நேரத்தில் நனைத்துக்கொண்டு இருக்கிறது. வாழ்க்கையின் அர்த்தங்களை நமக்குச் சொல்லிக்கொண்டு இருக்கின்றன. உற்சாகமான, நகைச்சுவையான, ஆவேசமான அந்த மனிதரின் நடமாட்டம், இந்த வங்கியில் எழுப்பிய அதிர்வுகளும், அசைவுகளும் பெரும் அனுபவங்களாய் நம்முன் நிற்கின்றன.

இடதுசாரிக் கொள்கையில் அவருக்கிருந்த பிடிப்பும், பற்றும் ஒரு  துடிப்புமிக்க போராளியாய் அவரை வார்த்தது. எல்லோரும் சமம் என்னும் மகத்தான நியாயமே அவரை ஒரு வெப்பம் கொண்ட மனிதராய் உருவாக்கியது. தோழர்களின் அன்பைத்தவிர பெரிதாய் எதையும் அவர் சம்பாதிக்கவில்லை என்பதே உண்மை.

அவரது பணி ஓய்வு என்னும் நிகழ்வு நிம்மதியானதாய் இருக்க வேண்டும் என பலரும் விரும்பினர். அவர் மீது சாட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களால் அதிருப்தியான சூழல் ஏற்பட வேண்டாமென்று கருதினர். கடந்த இரண்டு மூன்று நாட்களாய் தொடர்ந்து தோழர்கள் ஆர்வத்தோடும், வேகத்தோடும் கேட்டுக்கொண்டு இருந்தனர். நாம் அவர்களிடம் அமைதி காக்குமாறு சொல்லி வந்தோம், நிர்வாகம் ஒரு நல்ல முடிவெடுத்து, ஒரு சந்தோஷமான, ஆரோக்கியமான நிலைமைக்கு வழிவகுத்திருக்கிறது. இந்த நேரத்தில் நிர்வாகத்திற்கு நன்றி சொல்லிக் கொள்வோம்.

தோழர் சோலைமாணிக்கத்திற்கு நம் பிரியா விடையைத் தெரிவித்துக் கொள்வோம்.


ரெட் சல்யூட், காம்ரேட் சோலைமாணிக்கம்....

6 comments:

  1. வாழ்த்துக்கள் சோலை அண்ணா/

    ReplyDelete
    Replies


    1. Vương Lâm cách không chụp một cái, nguyên thần Tào Nhất Đấu lập tức từ trong góc bị bắt trở lại. Tào Nhất Đấu ánh mắt vô cùng kinh hoàng, thét to:

      - Tiền bối, ta hiện giờ là khách của Thi Âm Tông. Nếu ngươi bắt ta để luyện chế pháp bảo, Thi Âm Tông nhất định sẽ không bỏ qua cho ngươi!!

      Vương Lâm khóe miệng cười lạnh, bình thản nói:

      - Ai nói ta muốn đem ngươi đi luyện chế pháp bảo, ngươi vẫn còn chưa đáng!

      Tào Nhất Đấu ngẩn ra, trong lòng thầm nhủ đối phương là Anh Biến lão quái, một Hóa Thần tu sĩ như mình thật dong tam mu lậu cho thuê nhà trọ cho thuê nhà trọ nhạc sàn cực mạnh tư vấn pháp luật qua điện thoại công ty luật ở hà nội số điện thoại tư vấn pháp luật dịch vụ thành lập doanh nghiệpsự không đáng để đối phương đến gây khó dễ, nếu như đối phương muốn bắt Hóa Thần nguyên thần thì cũng rất dễ dàng, không có khả năng người này đến là để bắt mình.

      - Tiền bối, ngươi… Ngài cần ta làm chuyện gì?

      Tào Nhất Đấu cố nén nỗi sợ trong lòng, cẩn thận hỏi.

      - Ngươi làm nô bộc của ta một trăm năm, trăm năm sau ta sẽ

      Delete
  2. Solai sir i am not bank employee but my heartly wishes for you . The maestro doesn't retire from every human
    by you tharan007

    ReplyDelete
  3. My heartiest wishes for you Uncle..I pray to God to bless your retirement life with showers of blessings and good health...Stenila, D/o Mr Antony Arulraj, Karur Vysya Bank.

    ReplyDelete

Comrades! Please share your views here!