26.11.13

PGBEA - PGBOU circular 5/2013 dated 25.11.2013


Pandyan Grama Bank Employees Association
Pandyan Grama Bank Officers Union

சுற்றறிக்கை எண் : 5/2013                    நாள்: 25.11.2013

அருமைத்தோழர்களே!

வணக்கம்.

பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டதுஅவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை  எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட நமது தோழர்கள் வருகையால் அரங்கம் நிறைந்து, உட்கார இடமில்லாமல் வெளியே நின்று, விழாவினை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். வங்கியின் சேர்மன் திரு.கார்த்திகேயன், அன்றைய தினம் முக்கிய அலுவல்கள் காரணமாக வர இயலாததைத் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். பொதுமேலாளர்களும் அனுப்பி இருந்தனர். அழைப்பிதழ்களில் இடம் பெறாவிட்டாலும், AIRRBEAவின் தலைவர் ராஜீவன் அவர்களும், Joint secretary  தோழர் மதனன் அவர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். AIRRBEAவின் vice-president நாகபூஷண் ராவ்விருதுநகர் மாவட்ட சி.பி.எம் செயலாளர்  தோழர்.சேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.பாலசுப்பிரமணியன், நமது அட்வகேட் தோழர்.கீதா மற்றும் CITU, BEFI, AIIEA சங்கத்தலைவர்களும், தோழர்களும் வந்திருந்தனர்.

கரிசல் குயில் திருவுடையான் பாடல்களோடு ஆரம்பித்த நிகழ்ச்சி, இசையின் வழியாக காலங்களை அசை போட வைத்தது. PGBEA தலைவர் தோழர்.சங்கரசீனிவாசன் தலைமை தாங்க, PGBOU  தலைவர் தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும், அவரது துணைவியாரையும் மேடைக்கு அழைத்து உட்கார வைத்த கணம், மொத்த அரங்கமும் அன்பின் மிகுதியால் ஆரவாரித்தது.

தோழர் சோலை மாணிக்கத்தை, அவரது பணிகளை  பலரும் நினைவுகூர்ந்து பேசினர்சமரசமற்ற அவரது போர்க்குணம்சலிப்பற்ற அவரது பயணம், எதிர்பார்ப்பற்ற அவரது நடவடிக்கைகள் அவரவர் அனுபவங்களால் முன்வைக்கப்பட்டன. குடும்ப  வாழ்வுக்கும், சங்க வாழ்வுக்குமிடையில் ஒரு தொழிற்சங்க முன்னணி ஊழியர்  கழித்த நாட்கள் சாதாரணமானவையல்ல. அது  ஒரு தனிமனிதனின் சாதாரண வாழ்வாக மட்டுமில்லாமல், ஒரு இயக்கத்தின் உயிர்த்துடிப்பு மிக்க காலமாகவும் இருந்ததை அறிய முடிந்தது.

தோழர்.சோலைமாணிக்கம் தனது ஏற்புரையில்தன்னை `first servant of PGBEA` என அறிமுகப்படுத்திக்கொண்டார்இந்த தொடர்  ஓட்டத்தில் தனது கரங்களில் இருந்து, தீபத்தை ஏந்திச் செல்ல இளைய கரங்கள் வந்துவிட்டன என்னும் சந்தோஷமும், திருப்தியும் தனக்கு இருப்பதாக நம்பிக்கையோடு குறிப்பிட்டார். வங்கியின் பணிகளிலிருந்து மட்டுமே விடைபெறுகிறேன், உங்களிடமிருந்து அல்ல, என்று சொல்லி `workers unity zindabad, working class unity zindabad' என்னும் தன் கம்பீரமான குரலால் கோஷங்கள் எழுப்ப, அனைவரும் அதைத் திருப்பிச் சொல்ல உணர்ச்சிப் பெருக்கில் நிறைந்திருந்தனர் அனைவரும். இது ஒரு காட்சி

இப்படி வங்கியில் பணிபுரியும் தோழர்களின் மனநிலையில், உயர்ந்து நிற்கும் தோழர் சோலைமாணிக்கத்தை அவமானப்படுத்தவும், களங்கப்படுத்தவும், தண்டனை வழங்கவும் துடித்துக் கொண்டு இருக்கிறது நிர்வாகம். அது இன்னொரு காட்சி.

தோழர் சோலைமணிக்கத்தைப் பழிவாங்கும் நோக்த்துடன் இந்த நிர்வாகம் 2010ம் ஆண்டு ஆரம்பித்த ஒழுங்கு நடவடிக்கைக்கு இன்னும் Final Order கொடுக்கவில்லை. இந்த நிலையில் தோழர்.சோலைமாணிக்கத்தின் சேமிப்புக்கணக்கை ஆராய்வதற்கு நிர்வாகம் ஆய்வாளர்கள் பலரை இறக்கிவிட்டு இருக்கிறது. நேர்மையான, நியாயமான, சமரசமற்ற ஒரு தொழிற்சங்கத்தலைவரின் பணி ஓய்வு என்பது நிம்மதியாக இருக்கக்கூடாது என நிர்வாகம் நினைக்கிறது. அவரது ஓய்வூதியச் சலுகைகளை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் தோழர்.சோலைமாணிக்கம் பக்கம் நிற்பதுவும், அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதும் அவசியம். பணி ஓய்வு விழாவில் பேசிய நமது அட்வகேட் கீதா அவர்கள் இதனை குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் இத்துடன் நாம் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு அனுப்ப வேண்டிய  கடிதத்தின் நகல் இந்த சுற்றறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தோழர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு கிளை வாரியாக உடனடியக அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Com.J.Mathavaraj
General Secretary - PGBEA
Pandyan Grama Bank
Soolakkarai Medu
Virudhunagar Dist

தோழர்களே, நமக்காக உழைத்த ஒரு தொழிற்சங்கத் தலைவரோடு நாம் நிற்கிறோம் என்பதை நிர்வாகத்துக்கு நாம் உணர்த்த வேண்டிய நேரம் இது. நிர்வாகத்தின் அராஜகமான, அநியாயமான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்த சுற்றறிக்கை படித்தவுடன் தாங்கள் செய்கிற முதல் வேலையாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிங்களில் தங்கள் கிளைகளில் உள்ள தோழர்கள் கையெழுத்திட்டு, தபாலில் அனுப்பி வைக்கிற காரியமாக இருக்கட்டும்.

நமது  கையெழுத்தின் வலிமையை உணர்த்துவோம்.
(தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்)

தோழமையுடன்


                                                                                                                                                                                 
(J.மாதவராஜ்)                                                                                       (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                                  பொதுச்செயலாளர் - PGBOU     
____________________________________________________________________________
கடித நகல்:


From

Name:
Post:
Roll no:
Pandyan Grama Bank
Branch:



To

The chairman
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar


Respected sir,

I would like to place on record the service rendered by Mr. Solai Manickan as the General Secretary and President of Pandyan Grama Bank Employees Association in the past years which enabled the smooth functioning of the Bank.  He was a leader who stood by his ideologies and principles and looked forward for the welfare of the employees and the Bank.  

I hereby urge the Management of the Pandyan Grama Bank to permit Mr. Solaimanickam, Vice President of Pandyan Grama Bank Employees Association who is due to retire from service on 30.11.2013, to retire peacefully and with the satisfaction of serving the Management, by withdrawing all the Disciplinary proceedings initiated against him and not to harass him further by initiating any fresh disciplinary proceedings.

Thanking you


Yours faithfully



( )


Date :
Place:
___________________________________________________________________________

தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்:




2 comments:

Comrades! Please share your views here!