பாண்டியன் கிராம வங்கியில் புதிதாக Officerகளாகவும், Office Assistantகளாகவும் பணிக்குச் சேரவிருக்கும் அனைவருக்கும் Pandyan Grama Bank Employees Association (PGBEA) மற்றும் Pandyan Grama Bank Officers Union (PGBOU) சங்கங்களின் வாழ்த்துகள்.
Office Assistant (Clerical) களுக்கு 10,11,12 தேதிகளில் முதல் batch ஆகவும், 13,14,15 தேதிகளில் இரண்டாம் batch ஆகவும், 17,18,19 தேதிகளில் மூன்றாம் batchஆகவும், 20,21,22 தேதிகளில் நான்காம் batch ஆகவும் training தலைமையலுவலகத்தில் வைத்து கொடுக்கப்படும். ஒவ்வொரு batchலும் 30 பேர் இருப்பார்கள்.
Officer கள் நேரடியாக கிளையில் join பண்ண வேண்டியிருக்கும். அவர்களுக்கான் training பிறகு அறிவிக்கப்படும்.
பாண்டியன் கிராம வங்கியின் புதிய காற்று நீங்கள். இளம் இரத்தம் நீங்கள். எதிர்கால நம்பிக்கை நீங்கள். வாருங்கள்.
தாங்கள் இண்டர்வியூவிற்கு வந்த அன்று, உங்களை நாங்கள் முதலாவதாக வரவேற்றதும், வாழ்த்தியதும் நினைவிருக்கும் என நினைக்கிறோம்.
இந்த நேரத்தில் எங்களைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
புதிதாக பணிக்குச் சேர்பவர்களிடம், ஒரு லட்சம், இரண்டு லட்சம் என டெபாசிட் வாங்குவதும், bondல் கையெழுத்து வாங்குவதும் மற்ற வங்கிகளில் வழக்கமாய் இருக்கிறது. எங்கள் சங்கம் PGBEA அதற்கு எதிராக குரல் கொடுத்தும், அது வேண்டாம் என வலியுறுத்தியும் வருகிறது. இப்போது பாண்டியன் கிராம வங்கியில் அந்த வழக்கம் இல்லை. அதற்கு நாங்களும் ஒரு முக்கிய காரணம்.
நேர்மையையும், உண்மையையும், ஒற்றுமையையும் மட்டுமே வலியுறுத்துகிற சங்கம் PGBEA. இந்த வங்கியில் ஊழியர்களின் நலன்களையும், உரிமைகளையும் காக்க எப்போதும் முன்னிற்பது PGBEA. அகில இந்திய அளவிலும், பாண்டியன் கிராம வங்கியிலும் பெரும்பான்மையான ஊழியர்களின் மதிப்பிற்கும், நம்பிக்கைக்கும் உரிய சங்கம் PGBEA.
கிராம வங்கி ஊழியர்களுக்கு, வணிக வங்கி ஊழியர்களின் ஊதியத்தை வாங்கித் தந்தது எங்கள் அகில இந்திய சங்கம் சங்கம் AIRRBEA. அனைவருக்கும் பென்ஷன் கிடைக்கப் போராடி வருவதும் எங்கள் சங்கம் AIRRBEA.
உங்களுக்கான டிரான்ஸ்பர்களை சாதகமாக பெற்றுத் தரவும், பணிபுரியும் இடத்தில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் உங்களுக்கு ஆதரவாக வந்து நிற்கவும் PGBEA தயாராக இருக்கிறது. போகப் போக நீங்களே நிறைய தெரிந்து கொள்வீர்கள்.
நல்லது. இனி தாங்களும் எங்கள் 'PGB family'யில் ஒருவர். நமது சொந்த பந்தம் ஆரம்பிக்கிறது. எங்களோடு இணைகிறீர்கள். வாருங்கள்.
--------------------------------------------------------------
இதுகுறித்து மேலும் விளக்கங்கள், தெளிவுகள் பெறுவதற்கு
pgbea.vnr@gmail.com அல்லது
jothi.mraj@gmail.com
இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!