23.6.11

22.6.2011 - தலைமையலுவலகம் முன்பாக வாயிற்கூட்டம்!


திட்டமிட்டபடி, 22.6.2011 மாலை 6 மணிக்கு தலைமையலுவலகம் முன்பு நமது PGBEA, PGBOU சங்கங்களின் வாயிற்கூட்டம் நடந்தது.

ஜூலை 7 ம்தேதி, அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான, இந்த வாயிற்கூட்டத்துக்கும், IR  சர்க்குலர் போட்டு நிர்வாகம் ‘wage cut'  என்று சட்ட விரோதமாக மிரட்டிய போதிலும், கடுமையான ஆள் பற்றாக்குறையும் பணிச்சுமையும் மிக்க நெருக்கடியிலும், 80க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்தனர்.

PGBOU  தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் கோஷங்கள் முழக்கி, தலைமையேற்று நடத்தினார். ஊழல் மிகுந்த காங்கிரஸ் அரசு வங்கித்துறையை தனியார் மயமாக்க துடிப்பதையும், அதற்கான சட்ட திருத்த மசோதக்களை கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். வங்கித்துறையில் இனி, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஊதிய உயர்வு இல்லாமல் செய்ய கண்டேவால் கமிட்டி அறிக்கையின் அம்சங்கள் இருப்பதை விளக்கி, ஆபத்துக்களை தெளிவுபடுத்தினார். PGBEA உதவிப்பொதுச்செயலாளர், வங்கித்துறையில் ஒரு புதிய தலைமுறை வர இருக்கும் சூழலில், அரசு, deunionise பண்ண முயற்சிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது என அறைகூவல் விடுத்தார். PGBOU  பொதுச்செயலாளர். தோழர்.சங்கரலிங்கம், நமது ஒற்றுமையாலும், உறுதியாலும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் என்றார்.

இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் , காமராஜர் மாவட்டத் தலைவர்.தோழர்.மாரிக்கனி, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தின் 20 அம்சக் கோரிக்கைகளை விளக்கினார். இறுதியாக PGBEA  தலைவர்.தோழர்.மாதவராஜ் நிறைவுரையாற்றினார். வங்கித்துறையில் 7 லட்சம் பணியிடங்கள் இருப்பதையும், அரசும், நிர்வாகங்களும் outsourcing  மூலமாகவும், Business  correspondents  மூலமாகவும் அதனை சரிசெய்து, உழைப்புச்சுரண்டல் செய்ய முயற்சிப்பதை அம்பலப்படுத்தினார்.  working hours ஐ கூட்ட அரசு திட்டமிடுவதையும் சாடினார். பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் நாம் இழந்து போகக்கூடாது , அதற்காகவே இந்த வேலைநிறுத்தம் என்பதை எடுத்துரைத்தார்.

கோஷங்கள் முழங்க, வாயிற்கூட்டம், எழுச்சியோடு.... நிறைவடைந்தது.

பார்க்க: புகைப்படங்கள்