23.6.11

பாண்டியன் கிராம வங்கியில் புதிய பணி நியமனம்!

நமது பாண்டியன் கிராம வங்கியில் கிளரிக்கல் மற்றும் ஆபிஸர்களுக்கான புதிய பணி நியமனப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

15.6.2011 அன்று, முதற்கட்ட நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

இதில் ஆபிஸர்களுக்குரிய 85 போஸ்ட்களுக்கு 37 பேரே, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தனர். அவர்களிலும் 29 பேரே, நேர்முகத்தேர்வில் பங்கு பெற்றனர்.;

எழுத்தர்களுக்கு 15.6.2011, 16.6.2011, 17.6.2011, 18.6.2011, 20.6.2011 ஆகிய நாட்களில் நேர்முகத் தேர்வு, விருதுநகரில் உள்ள தலைமையலுவலகத்தில் வைத்து நடைபெறுகிறது.

ஜூன் இறுதி வாரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில், புதியவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!