ஜூன் 15 அன்று பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (Pandyan Grama Bank Employees Association) மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் (Pandyan Grama Bank Officers Union) சப் கமிட்டி கூடியது.
ஜூலை 7ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் குறித்த விவாதிக்கப்பட்டது.
அகில இந்திய அளவில், AIBEA, NCBE, AIBOC, BEFI ஆகிய சங்கங்கள், வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
நமது அகில இந்திய கிராமப்புற வங்கி ஊழியர்கள் சங்கம் (All India Regional Rural Bank Employees Association), தனக்குரிய சமூக தொலை நோக்குப் பார்வையுடன் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. எனவே நாமும் ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நமது சங்க சுற்றறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.
22.6.2011 அன்று தலைமையலுவலகம் முன்பாக இந்த வேலைநிறுத்தம் குறித்து மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
25.6.2011 அன்று திருநெல்வேலியிலும், 30.6.2011 அன்று மதுரையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பும் நடத்த இருக்கிறோம்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!