28.7.11

புதிதாய் பணியில் சேர இருப்பவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களும், நமது விளக்கங்களும் (பகுதி-3)

புதிதாகப் பணிக்குச் சேர்பவர்களுக்கு விளக்கங்களாக இதுவரை நாம் இரண்டு (முதல்பகுதி, இரண்டாவது பகுதி) பகுதிகள் வெளியிட்டு இருந்தோம். ‘பணித் தன்மைகள்’ குறித்து இருக்கும் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கான விளக்கங்களை அடுத்த பகுதியாக வெளியிடுகிறோம் என சொல்லியிருந்தோம்.

இதற்கிடையில், நம் புதிய தோழர்களுக்கு, குறிப்பாக கிளரிக்கலுக்கு பணியில் சேரும் முறை சம்பந்தமாக சில சந்தேகங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவைகளை தெளிவுபடுத்தும் பொருட்டு இந்தப்பகுதியை வெளியிடுகிறோம்.

“எங்களுக்கு training முடிந்தவுடன் உடனே பணியில் சேர வேண்டியிருக்குமா, அல்லது இடையில் gap  இருக்குமா?”

Training  முடிந்தவுடன் உடனடியாகச் சேர வேண்டியிருக்கும்.

கிளரிக்கல் தோழர்களுக்கு இரண்டு batch ஆக training  கொடுக்கப்படுகிறது. முதல் Batchக்கு ஆகஸ்ட் 3ம் தேதி தலைமையலுவலகத்தில் record verification. தொடர்ந்து 4, 5, 6 தேதிகளில் training நடக்கிறது.  6ம் தேதி training முடிவில், அவரவர்க்கான கிளைகள் அறிவிக்கப்படும்.  அடுத்த நாள் காலையில், அவர்கள் அந்தந்த கிளைகளில் duty join பண்ண வேண்டும். ஆனால் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால், திங்கட்கிழமை 8 ம் தேதி அவர்கள் join பண்ணவேண்டும்.

இரண்டாவது Batchக்கு 8ம் தேதி record verification நடைபெறும். 9,10,11  தேதிகளில் training இருக்கும். 11ம் தேதி training  இறுதியில் அவரவர்களுக்கான கிளைகள் அறிவிக்கப்படும். அவர்கள் 12ம் தேதி காலையில், தங்களுக்கான கிளைகளில்  duty join பண்ண வேண்டும். எனவே அவர்கள் அதற்கான முன் தயாரிப்புகளோடு வரவேண்டியது அவசியம்.


“சில நாட்கள் கழித்து கிளைகளில் join பண்ண வேண்டுமென்றால், permission  தருவார்களா?”

முடிந்தவரையில் அடுத்த நாளே join பண்ணுங்கள். ஒருநாள் கழித்து join செய்தாலும் உங்களுக்குரிய seniority  பாதிக்கப்படும். அது promotion  முதற்கொண்டு பல பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்துவதாக இருக்கும்.

தவிர்க்க முடியாத சூழலில், ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்களாய் இருப்பின் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி permission  கேட்க வேண்டும்.  கால அவகாசம் கொடுப்பதற்கான காரணங்களாய் இருந்தால் மட்டுமே நிர்வாகம் அனுமதிக்கும்.

உதாரணமாக, தாங்கள் இன்னொரு நிறுவனத்தில் இப்போது வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்தக் கம்பெனியிலிருந்து relieve  ஆக வேண்டுமென்றாலோ, அங்கிருந்து Relieving certificate  வாங்க அவகாசம் தேவைப்பட்டாலோ, அதை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வமாக உடனடியாக தெரிவிக்க வேண்டும். Medical reasons இருந்தாலும் தெரிவிக்கலாம்.


"Nativity certificate  கொண்டு வரச்சொல்லி இருக்கிறார்கள். ஆனால் residential certificate தான் தருகிறார்கள். என்ன செய்ய?”

Nativity cerificate  என்பது தங்களது permanent addressற்காக கேட்கப்படுவது. Residential certificate என்பது தங்களது தற்போதைய residenceஐ குறிப்பது. இதுதான் வித்தியாசம்.

விசாரித்த வரையில், சில மாவட்டங்களில், சில நகரங்களில் residential certificate என்றே குறிப்பிட்டு தருகிறார்கள். அதுபோன்ற சந்தர்ப்பங்களில்,  “ He/ She is permanently residing at..."  என்று குறிப்பிடுவதாக certificate  வாங்க வேண்டும் .

 “conduct certificateகளை இரண்டு respectable persons களிடம் வாங்கச் சொல்லி இருக்கிறார்கள். யாரிடம் வாங்கலாம்?”

சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற, மரியாதைக்குரியவர்களிடம் வாங்க வேண்டும். உதாரணமாக அவர் ஒரு விடுதலைப்போராட்டத்தில்பங்கு பெற்ற தியாகியாக இருக்கலாம். நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியராக இருக்கலாம். அரசு உயரதிகாரியாய் இருக்கலாம்.

“ex-service manக்கு ஊதியம் protect  செய்யப்பட்டதாக இருக்குமா?”

நிச்சயமாக. இங்கு ஒரு கிளரிக்கலுக்கு ஆரம்பத்தில் 14000/- ஊதியமாக இருக்கும். ஒரு Ex-service man  தனது பணியின் இறுதியில் 17000/- ஊதியமாக ஏற்கனவே பெற்றவராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு இங்கு ஆரம்ப ஊதியம் 17000/- ஆகத்தான் இருக்கும். இந்த pay protection ஒரு அரசு விதி. எனவே, Exservice man  அதற்குரிய சான்றுகள்/ஆவணங்களுடன் வாருங்கள்.

எங்கள் புதிய தோழர்களே, இந்தப் பகுதி தங்களுக்கு உபயோகமாக இருந்தாலும்,மேலும் விபரங்கள் தேவைப்பட்டலும் FEED-BACK மூலம் தெரிவியுங்கள்.

All the best!

9 comments:

  1. Feed Back: "sir actually po's training procedure is different than clerk.. they said " You will be given to the spot training for four weeks from aug 3rd at (branch address)".. and also they asked some documents like mark sheets, birth certificate, ssc, hsc certificate, testimonials, medical certificate.. etc.. (but they said at the time of joining duty, you will have to produce the above documents) .. so my doubt is where i will submit this document my training branch or head quarter (virudhunagar)..

    2) my next doubt is the they asked computer certificate which prescribed minimum computer literacy such as os, ms word etc.. but i dont have.. but i finished engineering so i have so many computer papers in my semester.. at the time of registration they only said u have computer certificate or u had to studied computer in ur education level.. so now my question is whether it is need or not? or it will affect my joining of bank..

    so my doubt is where is our record verification will be done(for po).. whether it is in head quarter or our alloted training branch..

    and another doubt our training (po) is started on aug 3.. if i join that training branch on aug 3rd will my seniority start on that day onwards? or after the end of the period of training (one month after)..

    try if u clear these doubts it will be very useful for me!! thank u"

    our clarifications:

    For Officers,
    1.the neccessary documents and certificates will be collected, checked by the Branch managers and will be sent to Head office.

    2.It is enough,if have basic computer knowledge in your studies.

    3.On the date of joining duty at the branch (ie. 3rd aug) your seniorty will be taken into account.

    ReplyDelete
  2. sir is there any prescribed format of physical fitness certificate required by bank? because each of us have got it in a different type of format. But designation of the doctor senior civil surgeon only(G.H).any format is acceptable? if not so kindly post the required format.

    ReplyDelete
  3. @jose!

    some prescribed format is available now with DTP centers. Anyhow, Doctors will know the contents of the fitness certificate. Don't worry.

    ReplyDelete
  4. Feedback:
    "Dear Sir,

    Good Day!

    You said that the training for clerks will be conducted in 2 batches. Is the 2nd batch in any disadvantage position on seniority basis? Thank You."


    our clarification:

    நிச்சயமாய். written test & interview ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் முதலில் seniority நிர்ணயிக்கப்படுகிரது. அதில் முதல் 69 பேருக்கு first batch training. அடுத்தவர்களுக்கு second batch training. First Batchக்கு joining date 3.8.2011. second batchக்கு joining date 8.8.2011.

    ReplyDelete
  5. How the vacancies of those who didnt join PGB will be filled?
    Is there any waiting list sir?

    ReplyDelete
  6. when can we expect the waiting list for office assistants sir?

    ReplyDelete
  7. whether waiting list will be announced this month sir?

    ReplyDelete

Comrades! Please share your views here!