4.8.11

புதிதாக பணியில் சேர்பவர்களிடம் 5 years Bond வாங்குவதா? PGBEA - PGBOUவின் ஆட்சேபம்!!

புதிய பணி நியமனமான கிளரிக்கலின் முதல் Batchற்கான session ஆரம்பமாகிவிட்டது.  3ம் தேதி record verification அனைவருக்கும் நடந்து முடிந்திருக்கிறது.  4,5,6 தேதிகளில் training நடக்க இருக்கிறது. இன்று மொத்தம் அழைக்கப்பட்டவர்களில் 15 பேருக்கு மேல் வரவில்லை.

நமது வெப்சைட்டில் புதிய பணி நியமனம் ஆனவர்களுக்காக, நாம் மூன்று பகுதிகளாக அவர்களுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்திருந்தோம். போனில், எஸ்.எம்.எஸ்ஸில் விளக்கங்கள் கேட்ட பலருக்கும் தொழிற்சங்க ரீதியாக நமது ஆலோசனைகளையும்,   சொல்லி இருந்தோம்.

இன்று காலையில் நாம் தலைமையலுவலகம் சென்று புதிய தோழர்களை வரவேற்று,  நம்மை அறிமுகம் செய்துகொண்டோம். “சார் உங்க வெப் சைட் மூலமாகத்தான் நிறைய தெரிந்துகொண்டோம்” என்றார்கள். சிறு சந்தோஷமும், ஒரு திருப்தியும் இருந்தது.

தொழிற்சங்க ஞானமும்,  பார்வையும் இல்லாத Pandyan Grama Bank Workers Union  என்னும் சங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களின் வழக்கமான பாணியிலேயே இருந்தன. ஏற்கனவே வீடுகளுக்குச் சென்று அறிமுகமாகிக்கொண்டதில் மிகுந்த நெருக்கம் கொண்டவர்கள் போல புதிய தோழர்களிடம் பேசினார்கள்.  அவர்களின் போலியான நடவடிக்கைகள் குறித்தும், பொய்யான வேஷங்கள் குறித்தும் புதியவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அப்போதுதான் உள்ளே certificate verificationக்காக சென்ற புதிய தோழர்களில் சிலர் வந்து தங்களது ஆதங்கங்களையும்,பயத்தையும் வெளிப்படுத்திக் கொண்டு இருந்தனர். நாம் விசாரித்த போது,  நிர்வாகத்தரப்பில் தங்களிடம் five years bondஒன்றில் கையெழுத்து வாங்குவதாகவும், experience certificateன் ஒரிஜினலை வாங்கி வைத்துக் கொள்வதாகவும் சொன்னார்கள். நாம் அவர்களுக்கு தைரியம் சொன்னோம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இதுபோலநடந்த புதிய பணிநியமனத்தின் போதே நிர்வாகம் இந்த Five years bond ஒன்று வாங்கியது. நாம் நிர்வாகத்திடம் அது சரியல்ல, fundalmental rights க்கு எதிரானது என தெரிவித்தோம்.  Staff Service Regulationல் குறிப்பிடப்படாத விதிகளை கடைப்பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டோம். நிர்வாகம் தனது நிலையில் பிடிவாதமாக இருந்தது. நாம் நிர்வாகத்திற்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்டு உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளுக்கும் அப்போது கடிதம் எழுதி முறையிட்டோம்.
அந்தக் கடிதத்தின் நகல்:


Pandyan Grama Bank Employees Association
(Affi: AIRRBEA & BEFI )
Pandyan Grama Bank Officers Union
(Affi: AIRRBEA )
              -------------------
To

The chairman 
Pandyan Grama Bank
Administrative office 
2-70-1 collectorate complex 
Virudhunagar


Respected Sir,


Agreement compulsorily obtained from newly recruited clerks and probationary officers in violation of staff service Regulation 2001-Reg

With reference to the caption we submit to state the following for your kind perusal and favorable consideration.


In the recent past clerks and probationary officers were recruited by the bank and they were posted at various places. When they are working in accordance with Pandyan Grama Bank staff service Regulation – 2001,  we come to know that the bank had compulsorily obtained one stamped agreement violating the service Regulation-2001.


One clause of that agreement compels the employees to serve the bank for a minimum period of five years from the date of joining. But section 10 of Pandyan Grama Bank staff service Regulation -2001 permits its employees termination of service, by 3 months notice in the case of officers and one month notice in the case of employees.


Another clause of that agreement compels the employees to serve the bank for a continuous period of another five years on completion of any training programmed attended by them at Indian Overseas Bank/other out side agency.The training programme may be even a single day programme. But the  concerned employee had to repay the entire pay and allowance drawn during the training period and the expenses incurred by the bank or sponsor bank for deputing  the employee for training. These clauses also arbitrarily violate the sec.10 of staff service regulation-2001.


Here we submit to state that the Pandyan Grama Bank staff service regulation-2001 rule were framed by the Board of Directors of Pandyan Grama Bank in exercise of powers conferred by section 30 of the Regional Rural Bank Act.1976 (21.of 1976 central Act) after consultation with the Indian Overseas Bank the National Bank for Agricultural and Rural Development and with the previous sanction of the central Government. Because of these reasons stated above the chairman of Pandyan Grama Bank had no authority to violate the service regulation arbitrarily.


Hence we kindly request you to withdraw the impugned agreement immediately under notice to the concerned employee. Failure will force us to raise the issue in the appropriate forum.


Thanking you


Yours faithfully


(M.Solai Manickam)                                                   (P.S.Bose pandian)

General Secretary- PGBEA                                        General Secretary- PGBEA



CC


1. The chief General Manager

NABARD

Regional Office.

Mahathma Gandhi Road

Nungambalkkam

Chennai 


2. The General manager

RPCD

Reserve Bank Of India

Chennai



3 The finance Secretary

Banking division 
Finance department

North Block

New Delhi



4 The General Manager

RRB Division

Indian Overseas Bank

Mount Road

Chennai


Humbly submitted for immediate intervention and advice the bank to abide by the service regulation 2001 

GS-PGBEA                                                          GS-PGBOU


இதற்குப்பிறகு 2009ம் ஆண்டில் நாம் ஐ.ஓ.பி உயரதிகாரிகளை சந்தித்து நேரிலும் விளக்கினோம். “இப்படி வாங்குவது சரியல்ல, நிறுத்தச் சொல்கிறோம்” என நமக்கு ஐ.ஓ.பியிலிருந்து உறுதிமொழியும் தந்தார்கள். ஆனால் அதே கதைதான் தொடர்ந்திருக்கிறது.

நேற்று வந்து நம்மிடம் பேசிய புதிய தோழர்களிடம், இவைகளை விளக்கிச் சொல்லிவிட்டு, “இது அநியாயம். PGBEAவும், PGBOUவும் நிச்சயம் இதனை எதிர்த்து குரல் கொடுக்கும். சம்பந்தப்பட்டவர்களிடம் நமது தரப்பு நியாயங்களைச் சொல்லி வலியுறுத்தும். நிச்சயம் சரி செய்யும்” என நம்பிக்கையும், தைரியமும் அளித்திருக்கிறோம்.

Expereince certificate வாங்கி வைத்துக் கொள்வது சம்பந்தமாக,  department  அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் “கண்டிப்பாக திரும்பக் கொடுத்து விடுவோம்” என்றனர். திரும்பக் கொடுத்தும் விட்டனர்.

புதிய தோழர்களின் எதிர்காலம் குறித்த முக்கியப் பிரச்சினையத் தீர்க்க நாம் கவலைகொண்டு இருந்த போது, இன்னொரு சங்கமான Pandyan Grama Bank Workers Union அதுபற்றியெல்லாம் ஞானமும் அக்கறையுமில்லாமல் இல்லாமல், வந்திருந்த புதிய தோழர்களின் பெற்றோர்களுக்கு மதிய உணவு வரவழைத்துக் கொடுத்தார்கள். தாங்களும், தங்குமிடங்களை ஏற்பாடு செய்திருப்பதாகவும், அங்கு தங்கிக் கொள்ளலாம் என்று அவர்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்துவதிலேயே குறியாய் இருந்தார்கள். புதியவர்களும் அந்த போலியான அன்பைத் தட்ட முடியாமல் தலையசைத்துக் கொண்டு இருந்தனர்.

இந்த Five years Bond  ஷரத்தினோடு புதிய அலுவலர்கள்/ கிளர்க்குகளிடம் வாங்குவதை நிர்வாகம் உடனடியாக நிறுத்தவும், வாங்கியவைகளில் இருக்கும் ஆட்சேபகரமான ஷரத்துக்களை நீக்கவும் PGBEAவும், PGBOUவும் உறுதி பூண்டிருக்கின்றன. அதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுஇருக்கின்றன. புதிய தோழர்கள் எந்த அச்சமும் இல்லாமல் நம் வங்கியில்பணியில் சேர வேண்டும் என்பதே நமது விருப்பம்.

(இதுகுறித்து, 4.8.2011 அன்று நிர்வாகத்துடன் நமது PGBEAவும், PGBOUவும் பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் விபரங்களுக்கு : Five years bond இல்லை! -நிர்வாகத்தின் விளக்கம் படியுங்கள் )

3 comments:

  1. புதிதாக பணிக்குச் சேர்பவர்கள் நமது வங்கியிலேயே தொடர்ந்து பணி புரிய வேண்டும் என நிர்வாகம் இப்படியொரு ஷரத்தை fundamental rightsக்கு எதிராக சேர்த்திருக்கிறது.

    அவர்களிடம் இந்த வங்கியில் அவர்களது careerக்கு நல்ல scope இருப்பதையும், bright future இருப்பதையும், job securityயுடன் job satisfactionம் இருக்கிறது என்பதையும் எடுத்துச் சொல்லி, அவர்கள் தொடர்ந்து இங்கேயே பணிபுரிய உற்சாகமளிப்பதே சரியான நடைமுறையாக இருக்கும் என நாம் கருதுகிறோம்.

    அதைவிடுத்து, இப்படி நிர்ப்பந்தங்களை விதித்து கட்டாயப்படுத்துவது சரியான முறையல்ல.

    ReplyDelete
  2. @makkal nalan virumbi!

    இல்லை. PGBEA போன்ற ஒரு சங்கம் இருக்கும் வங்கியில் அதற்கு இடமே இல்லை!

    ReplyDelete

Comrades! Please share your views here!