4.8.11

புதிதாக பணியில் சேர்பவர்களிடம் Five years bond வாங்கவில்லை! -நிர்வாகத்தின் விளக்கம்

புதிதாக பணியில் சேரும் ஆபிஸர்கள் மற்றும், ஆபிஸ் அசிஸ்டெண்ட்களிடம் ஐந்து வருடம் இங்கு வேலை பார்க்க வேண்டும் என்னும் ஷரத்துடன் ஒரு bondல் கையெழுத்து வாங்குவதாகக் கேள்விப்பட்டோம்.  அதுகுறித்து உடனடியாக நிர்வாகத்துடன் பேசுவது என்றும், அப்படி வாங்கும் பட்சத்தில் lawyer notice அனுப்புவது என்றும் தீர்மானித்திருந்தோம். அதன் அடிப்படையில், இன்று PGBEA  சார்பில் அதன் தலைவர்கள் மாதவராஜ், சோலைமணிக்கம், சுப்பிரமணியன், அருண், சங்கர் ஆகியோரும் PGBOU சார்பில் அதன் தலைவர்கள் போஸ்பாண்டியன், சங்கரலிங்கம் ஆகியோரும் பாண்டியன் கிராம வங்கியின்  பொதுமேலாளர் திரு. சிதம்பரம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பொதுமேலாளர் அப்படியொரு ஷரத்து agreementல் இல்லையென்றும், புதிய தோழர்களிடம் வாங்கப்பட்ட agreement ஐப் பாருங்கள் எனவும் நம்மிடம் தந்தார். நாம் முழுமையாக வாசித்துப் பார்த்தோம்.  உண்மையில் அப்படியொரு ஷரத்து இல்லை.

ஒருவர் பணிக்குச் சேர்ந்த ஐந்து வருடங்களுக்குள் வங்கியிலிருந்து வெளியேறுவாரானால், அந்த ஐந்து வருடங்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் attend செய்த training expensesகளை repay செய்ய வேண்டும் என்னும் ஷரத்து மட்டுமே இருந்தது. அதைத்தான் தவறாக புரிந்துகொண்டு, புதிய தோழர்கள் நம்மிடம் பேசியிருக்க வேண்டும். எது எப்படியானாலும், ஒருவரது அடிப்படை உரிமைகளில் (fundamental rights) தலையிடுகிற ஷரத்து இல்லையென்பது சந்தோஷமான விஷயம். சென்ற முறை, நிர்வாகம் நிர்ப்பந்தித்த ஷரத்து கைவிடப்பட்டு இருக்கிறது. நமது குரல் நியாயங்களை நிலை நிறுத்தி இருக்கிறது.

இப்போதும்,அந்த training cost ஐ கூட, புதிதாக பணிக்குச் சேர்பவர்களிடம், அவர்கள் ஐந்து வருடத்திற்கு முன்பு வங்கியை விட்டு வெளியேறினால், வசூலிப்பது தவறு என்பதே எங்கள் கருத்து. இந்த வங்கிதான், அதன் தேவைக்காக புதியவர்களுக்கு training  கொடுக்கிறது. அதையே, புதியவர்களிடம் வசூலிப்பது சரியல்ல. இதுகுறித்தும் நம் சங்கங்கள் ( PGBEA & PGBOA) கேள்விகளை எழுப்பும். நியாயங்களையும், நீதியையும் நிலை நிறுத்த செயல்படும்.