5.8.11

இன்று அகில இந்திய வேலைநிறுத்தம்!


ஆகஸ்ட் 5,  வங்கி ஊழியர்களின் அகில இந்திய வேலை நிறுத்தம் இன்று நடைபெறுகிறது.

ஊதியம், பொருளாதார கோரிக்கைகளைத் தாண்டி, தேசம் காக்கவும், வங்கித் துறையை காக்கவும் இதோ நாடு முழுவதும் பலலட்சம் ஊழியர்கள் முன்வந்து இருக்கின்றனர். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக மட்டுமே செயல்படுகிற மத்திய அரசுக்கு வங்கி ஊழியர்கள் விருத்துள்ள எச்சரிக்கைஇது.

*பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும்,
*பென்ஷன் நிதியையும் தனியார்கள் கையாள அனுமதிக்கிற திட்டத்தை எதிர்த்தும்,
*இரு தரப்பு ஒப்பந்தங்களை காலாவதியாக்கும் சதிகளை எதிர்த்தும்,
* வங்கிகள் மற்றும் வங்கி ஊழியர்களின் நலன்களை குழிதோண்டி புதைக்கிற கண்டேவால் கமிட்டி அறிக்கையினை எதிர்த்தும்

இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஒரு 20 அம்சக் கோரிக்கைகளுடன் அறைகூவல் விடப்பட்டு இருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் எனற கோரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.

நமது எதிர்காலமும், வங்கிகளின் எதிர்காலமும், இந்த தேசத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது இந்த வேலை நிறுத்தத்தில். மகத்தான ஒரு காரியத்தில் நாம் ஈடுபடுகிறோம். வெற்றி நமதே!