5.8.11

Pandyan Grama Bank Employees and Officersக்கு ஒரு எச்சரிக்கை: “ஜாக்கிரதை!”

ஒரு தொழிற்சங்கம் என்பது அதன் உறுப்பினர்களின் நலன் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஊழியர்களின் நலன்களுக்காக செயல்படுவதாக இருக்க வேண்டும்.  குறுகிய, சுய லாபங்களை கணக்கிடுவதாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது முதலாளிகளின் லாப வெறி கொண்டதாக மட்டுமே இருக்க முடியும். வியாபாரிகள்தாம் தங்க பொருட்களை விற்க மயக்கும் விளம்பரங்களைச் செய்வார்கள். ஜிகினாத்தனமான ஜோடனைகளில் ஈடுபடுவார்கள். மோசமான அரசியல்வாதிகள்தாம் பெரும்செலவு செய்து, ஒட்டுக்கு ரூ.1000/-, ரூ.500/- கொடுத்து விலை பேசுவார்கள்.  நாற்றமெடுக்கும் தங்கள் லட்சணங்களை மறைக்க செண்ட் அடிப்பது போல அவர்களது சொல்லும் செயலும் இருக்கும். ஆனால் பூக்கடைக்கு இந்த விளம்பரங்களும்,  பொய்யான ஜோடனைகளும் தேவையில்லை. பாண்டியன் கிராம வங்கியில் PGBEAவும், PGBOUவும் அப்படிப்பட்ட பூக்கடைகள் என்பதை பெருமையாகச் சொல்ல முடியும்.

PGBEAவுக்கும், PGBOUவுக்கும் சில நெறிகள் இருக்கின்றன.  நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் சொல்வதில்லை. சரி, தவறுகளை எந்தவித தயக்கமுமில்லாமல் பேசுபவர்கள். முகத்துக்கு நேரே உண்மைகளைச் சொல்பவர்கள். நியாயங்களுக்காக போராடுபவர்கள்.  நாளைய லட்சியங்களை விட்டுக்கொடுத்து, ‘இன்று இந்தக் காரியம் நடந்தால் சரி’என்று  நினைக்காதவர்கள். எப்போதும் ஒரே மாதிரியாகப் பேசவும், செயல்படவும் முயற்சிப்பவர்கள்.  பொய்யாக நடிக்கத் தெரியாதவர்கள்.

போராட்டங்களுக்காகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவும் வேண்டுமானால் PGBEA  மற்றும் PGBOU தலைவர்கள் இந்த நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டிருக்கலாம். ஆனால் வங்கிக்கும், வாடிக்கையாளர்களுக்கும் துரோகம் செய்தவர்கள் PGBEAவின், PGBOUவின் தலைவர்களாய் இருக்க முடியாது. அப்படி இருக்க ஒருபோதும் அதன் பெருமைக்குரிய உறுப்பினர்கள் அனுமதிக்க மாட்டார்கள். முறைகேடாக வங்கியை பயன்படுத்தி சம்பாதித்தவர்கள் என்று இந்த நிர்வாகங்களால் PGBEA மற்றும் PGBOUவின் தலைவர்களை நோக்கி சுண்டுவிரலைக்கூட நீட்ட முடியாது. அந்த பாரம்பரியம் PGBEAவுக்கும்,  PGBOUவுக்கு மட்டுமே இங்கு உண்டு.

வங்கியில் பணி புரிந்துகொண்டே, கந்துவட்டியால் சம்பாதித்தவர்கள் எங்கள் தலைவர்களாய் இருக்க முடியாது. தங்களுக்கு கமிஷன் கிடைக்க வேண்டுமென்று தங்கள் உறுப்பினர்களை multi level business ல் ஈடுபடுத்துபவர்கள் எங்கள் தலைவர்களாய் இருக்க முடியாது.  அரசு கொடுத்த debt reliefஐ முறைகேடாக பயன்படுத்தி அதில் ஆதாயம் தேட முடிந்தவர்கள் எங்கள் தலைவர்களாய் நிச்சயம் இருக்க முடியாது.

அவர்கள் யாரென்று கேட்கிறீர்களா? உங்களுக்கு RM wealth creations  என்றால் என்ன தெரியுமா? அங்கிருந்து ஆரம்பிப்போம். அதற்குமுன் PGB  employees மற்றும் officers  அனைவருக்கும் இப்போது சொல்லிக்கொள்வது ஒன்றுதான். “ஜாக்கிரதை!”

(தொடரும்)

இதுவா தொழிற்சங்கம்?  இவர்களா தொழிற்சங்கத் தலைவர்கள்? - இரண்டாம் பகுதிதான் இது.விரைவில் மூன்றாம் பகுதி!