நமது வலைத்தளத்தின் மேலே "PGBEA' என இருக்கும் logoவுக்குக் கீழே, Home, About us, union Diary, Download, gallery, Family Events, transfers என பகுதிகள் வகைப்படுத்தப்படு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவைகளை கிளிக் செய்தால், அந்தந்த பகுதிகளில், இருக்கும் பதிவுகளைப் படிக்க முடியும்.
அதில் இருக்கும் 'union Diary' மற்றும் 'Family events' தான், நாம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் அந்த இரண்டு காலண்டர்கள்.
Union Diaryயில் நமது சங்கத்தின், அகில இந்திய சங்கத்தின் நடவடிக்கைகள் நாட்கள் வாரியாக தொகுக்கப்பட்டு இருக்கும். அவைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிகழ்வுகளை ‘கிளிக்’ செய்தால், அந்த நிகழ்வு குறித்த தகவல்களையும், விபரங்களையும் காணலாம்.
நமது சங்க வரலாற்றின், முக்கிய நாட்களை ஆரம்ப காலத்திலிருந்து தொகுப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன.
அடுத்தது...
Family Events என்னும் காலண்டர். இதில் திருமணங்கள், பிறந்த நாட்கள், பணி ஓய்வு நாட்கள், பணி நிறைவு விழாக்கள் போன்ற ’PGBEAN' குடும்ப நிகழ்வுகளை 18.6.2013 முதல் தொகுக்க ஆரம்பித்திருக்கிறோம்.
இது போல விபரங்களை, தகவல்களை தோழர்கள் pgbea.vnr@gmail முகவரிக்கு தெரிவித்தால், அந்த குறிப்பிட்ட தேதியில் பதிய முடியும். 18.6.2013 க்கு முந்தைய தேதிகள் பற்றிய தகவல்களையும் தரலாம். தாங்களே கூட பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் இ-மெயில் (gmail ஆக இருத்தல் வேண்டும்) முகவரி தந்தால், அவர்கள் எப்படி தாங்களே தகவல்களை இந்த காலண்டரில் பதிவு செய்வது என்பதை தெரிவிக்கிறோம்.
இவற்றை மொத்தமாக திரும்பிப் பார்க்கும்போது, PGB என்னும் குடும்பத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய குறிப்புகளாய் அவை காணக் கிடைக்கும்.
எனவே- இந்த இரண்டும் காலண்டர்கள் மட்டுமல்ல; நமது பொக்கிஷங்கள்!
எழுத எழுத் தீராத காலப்பெட்டகம்.காலண்டரின் பக்கங்கள் ஜொலிக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete