24.1.15

முகங்கள் மாறினாலும், நிர்வாகத்தின் இதயம் மாறுவதில்லை!

2009ம் ஆண்டில், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்து அப்போது PGBEAவும், PGBOUவும் இயக்கங்களை ஆரம்பித்தது தோழர்களுக்கு நினைவிலிருக்கும். முதலில் தோழர்கள் காமராஜும், அண்டோ கால்பர்ட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

அதையொட்டி நாம் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தி அந்தத் தோழர்களை மீண்டும் வங்கியில் பணியாற்ற வைத்தோம். அப்போது நிர்வாகம் நம்மீது நடத்திய தாக்குதல்களில் ஒரு பகுதியாக PGBEAவின் பொதுச்செயலாளரும் தலைவருமாயிருந்த தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், மாதவராஜுக்கும் அதிகமான லீவு எடுத்து விட்டார்கள் என்னும் காரணத்தை முன்வைத்து சார்ஜ் ஷீட்கள் கொடுக்கப்பட்டன.

இந்த சார்ஜ் ஷீட்கள் இரண்டுமே முழுக்க முழுக்க தொழிற்சங்க விரோதமானதும் பழிவாங்கும் உள்நோக்கம் கொண்டதுமாகும். இந்தியாவில் வங்கி அரங்கில் முன்னணித் தலைவர்களுக்கு கொடுக்கப்படும் ‘special leave' நமக்கு கொடுக்கப்படுவதில்லை. எனவே தங்கள் சொந்த லீவுகளில்தான் நமது தலைவர்கள் தொழிற்சங்கப்பணி ஆற்ற வேண்டியியிருக்கிறது. சொந்த லீவுகளையும் தாண்டி, லீவு எடுக்க நேரும்போது அது Extr-ordinary Leave ஆகவும், Loss of Payஆகவும் மாறுகிறது. special leave கொடுக்கவில்லை என்றாலும், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் 2009ம் ஆண்டு வரை, இந்த Extr-ordinary leaveஐ தொழிற்சங்கத் தலைவர்களுக்கு அனுமதித்து வந்தது. 2009ம் ஆண்டில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்க வேண்டும் என்றும், அதன் தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்றும் இந்த சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டன.

தோழர்.சோலைமாணிக்கம் ரிடையர்டு ஆகும் தறுவாயில், இந்த சார்ஜ் ஷீட்டிற்கு ‘lowering one stage for two years' என்னும் தண்டனையைக் கொடுத்து, அப்பீல் செய்தால் ஓய்வூதியச் சலுகைகள் கொடுக்க முடியாது என்று மிரட்டியது. ஆனால் நாம் வழக்கறிஞரின் அறிவுரைப்படி செயல்பட்டு ஓய்வூதியச் சலுகைகளையும் பெற்றோம், அப்பீலும்செய்தோம். அந்த அப்பீல் இன்னும் நிலுவையிலிருக்கிறது.

அவருடன் சார்ஜ் ஷீட் வழங்கப்பட்ட தோழர்.மாதவராஜ்க்கு ஒழுங்கு நடவடிக்கையை முடிக்காமல் நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டு இருந்தது. குற்றச்சாட்டுகளை சுமத்திவிட்டு, அதை நிரூபீக்க முடியாமல் நிர்வாகம் தவித்தது என்பதுதான் உண்மை.

1.10.2005 லிருந்து  31.12.2009  வரையிலான காலத்தில், தோழர் மாதவராஜ் 116 நாட்கள் லீவு எடுத்து இருக்கிறார் என்பதும், Prior permission இல்லாமல், போதிய Leave credit இல்லாமல் இந்த லீவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதும் தான் முக்கியக் குற்றச்சாட்டு. இதனால் வங்கிப்பணி கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது என்பது அடுத்த குற்றச்சாட்டு.

"Charges should be definite and Clear. Charges should not be vague." இதுதான் ஒழுங்கு நடவடிக்கைகளின் ஆரம்ப விதி. மேற்கண்ட குற்றச்சாட்டில், இந்த ஆரம்ப விதிகள் கூட கடைப்பிடிக்கப்படவில்லை.

116 நாட்கள் என்று பொத்தாம் பொதுவாகவும், குருட்டாம் போக்காகவும் சொல்லிவிட முடியாது. தேதி வாரியாக இந்த 116 நாட்களும் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். சார்ஜ் ஷீட்டில்  குறிப்பிடவில்லையென்றால், என்கொயரி நடக்கும்போது, தேதி வாரியான பட்டியலை அதற்குரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும். இது இரண்டுமே நடக்கவில்லை. நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட என்கொயரி ஆபிஸரே தனது findingsல் இதனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

“Detailed break-ups of leave availed by CSE have not been specifically given in the charge sheet. Also, I could not extract from the management exhibits produced by the Presenting Officer (Leave Statements and attendance register) the specific dates for which leave applications were not submitted."
ஆக, அடிப்படையான குற்றச்சாட்டுக்கு முதலில்  ஆதாரமில்லை. எந்தெந்த தேதிகளில் முறையற்று லீவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்தால்தான், அந்த தேதிகளில் முறையாகத்தான் லீவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பதை குற்றஞ்சாட்டப்பட்டவர் தெளிவுபடுத்த முடியும். ஆக, குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு, அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை எடுத்து உரைப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது.

லீவு லெட்டர் கொடுக்காமல், போதிய லீவு இல்லாமல் லீவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்பது குற்றச்சாட்டின் இன்னொரு பகுதி.

ஆனால் தோழர்.மாதவராஜ்க்கு போதிய லீவு இருப்பதாகவும், அவர் முறையாக லீவு லெட்டர் கொடுத்து வருவதாகவும், 8.4.2008 தேதியிட்ட PAD-ன் office Noteல் தெளிவாக எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. தோழர்.மாதவராஜ்  apply செய்த LFCஐ sanction செய்ய எழுதி வைக்கப்பட்ட office Note இது.

“From 1.10.2005 to 20.02.2008, the member had availed 114 days leave as per statement enclosed. He has submitted neccessary medical and fitness certificates. During the period from 1.10.2005 to 29.2.2008, he has worked for about 768 days (862-114) for which he is entitled for privilege leave for 70 days. As per our PAD circular No 46/05-06 dated 15.2.06, A staff member is eligible for 540(half) days sick leave for the entire service. But so far we credited 431 days. Hence he is eligible for 109 days sick leave".
இதனை  என்கொயரி நடக்கும்போது  தோழர்.மாதவராஜ் தரப்பு ஆவணமாக சமர்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. என்கொயரி ஆபிஸரும் ஒப்புக்கொண்டு, It speaks leave at CSE's credit that show a contradictory picture' என தனது findingsல் குறிப்பிடுகிறார்.

Prior Permission இல்லை என்று எந்தக் கிளை மேலாளரும் சொல்லவில்லை. எந்த Regional managerம் சொல்லவில்லை.

ஆக, லீவு எல்லாம் முறையாகத்தான் எடுக்கப்பட்டு இருக்கிறது.

வங்கிப்பணி முடங்கிவிட்டது என்று எந்த staffம் சொல்லவில்லை.அதற்கான ஆதாரங்களும் என்கொயரி நடக்கும்போது சமர்ப்பிக்கப்படவில்லை.

இத்தனை உண்மைகள் இருந்தும், குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டதாக நிர்வாகம் கண்ணை மூடிக்கொண்டு சொல்கிறது. தோழர்.மாதவராஜ் தரப்பில் முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரங்களையும் கணக்கிலெடுக்க நிர்வாகம் மறுக்கிறது.  "Lowering of one stage for two years" என்று punishmentஐ பிடிவாதமாக இன்று கொடுத்திருக்கிறது.

உண்மைகளை ஆதாரமாக வைத்து எடுக்கப்படாத நடவடிக்கை எப்படி ஒழுங்கு நடவடிக்கை ஆகும்? எந்த நியாயமும்  இல்லாமல்  வழங்கப்படும் நீதி எப்படி நேர்மையானதாய் இருக்க முடியும்?

தோழர்களே, அடிப்படையிலேயே தோழர்கள் சோலைமாணிக்கத்திற்கும், மாதவராஜ்க்கும் கொடுக்கப்பட்ட சார்ஜி ஷீட்கள் பழிவாங்கும்நோக்கம் கொண்டவை. அதனால்தான் நியாயங்களையும், உண்மைகளையும் விலக்கி தண்டனை வழங்குவதிலேயே நிர்வாகம் குறியாய் இருக்கிறது.

இதுதான் நிர்வாகம். முகங்கள் மாறினாலும், நிர்வாகத்தின் இதயம் மாறாது. அது வன்மமும், பழிவாங்கும் வெறியும் கொண்டது. அழுக்கும் அநியாயங்களும் நிறைந்தது.

ஆனால், தொழிலாளர்களின் முகமும், இதயமும் எப்போதும் ஒன்றுதான். அவர்கள் அநீதிகளை எதிர்த்து வெறுப்பையும், ஆத்திரத்தையும் கக்குவார்கள். அணி திரளுவார்கள். போராடுவார்கள்.

போராடுவோம்!

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!