சுற்றறிக்கை: 1/2013 நாள்: 07.10.2013
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
ஒரு சிறிய கால அவகாசத்துக்குப் பின்னர் இந்த சுற்றறிக்கை எழுதப்படுகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் இரண்டு மிக முக்கிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. ஒன்று, கல்கத்தாவில் நடைபெற்ற நமது அகில இந்திய மாநாடு. இன்னொன்று விழுப்புரத்தில் நடைபெற்ற நமது மாநில மாநாடு.
அகில இந்திய மாநாடு:
நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் மாநாடு, செப்டம்பர் 7, 8, 9 தேதிகளில் கல்கத்தாவில் நடைபெற்றது. மொத்தம் 1400 பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 28 தோழர்கள் கலந்துகொண்டனர். மறைந்த நமது மகத்தான தலைவர் தோழர்.திலிப்குமார் முகர்ஜி அவர்களின் நினைவைப் போற்றும் விதமாகவும், அவரது கனவுகளையும் லட்சியங்களையும் நெஞ்சில் ஏந்தி நமது பயணத்தைத் தொடரும் விதமாகவும் இந்த மாநாடு அமைந்திருந்தது. நமது சங்கங்களிலிருந்து தோழர்கள் அறிவுடை நம்பி (PGBOU), ராஜா கார்த்திகேயன் (PGBEA) ஆகியோர் பிரதிநிதிகள் விவாதங்களில் கலந்துகொண்டனர். புதிதாக பணிக்குச் சேரும் Office Assistantகளுக்கு இரண்டு graduation increment கொடுக்கப்படாமல் நிறுத்தி வைத்திருப்பது, தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம், Office Assistant (multi purpose), Office Attendant (multi purpose) என designate செய்து இருப்பதற்கு எதிராகவும், ஒழுங்கு நடவடிக்கைகளில் CVC தலையீடுகள் பற்றியும், ஓய்வு பெறும் வேளையில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்து ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி வைப்பது குறித்தும் அகில இந்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.
உற்சாகமும், எழுச்சியும் மிக்க இந்த மாநாட்டின் இறுதியில் Presidentஆக தோழர்.ராஜீவன் (கேரளா), Secretary General ஆக தோழர்.சையதுகான் (மே.வங்காளம்) தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து தோழர்.மாதவராஜ் (pandyan GBEA) Joint Secretary ஆகவும், தோழர்.T.கிருஷ்ணன் (Pandyan GBOU) central committee memberஆகவும், தோழர்.ஆனந்த் (Pallavan GBEU) Central committee memberஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். All India women sub committeeக்கு தோழர்.வரலட்சுமி (எட்டையபுரம்) அவர்களும் General council memberகளாக தோழர்கள் அறிவுடை நம்பியும், ராஜா கார்த்திகேயனும், தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
மாநில மாநாடு:
AIRRBEA TN and Puduvai - யின் மாநில மாநாடு விழுப்புரத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. மொத்தம் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்த மாநாட்டிற்கு தோழர்.பிச்சைமுத்து தலைமை தாங்கினார். தோழர்.சோலைமாணிக்கம் வரவேற்றுப் பேசினார். BEFI -TN மாநிலச் செயலாளர் தோழர். சி.பி.கிருஷ்ணன் துவக்கி வைத்து, வங்கித்துறை எதிர்கொண்டு இருக்கும் சவால்களை எடுத்துரைத்தார். NFRRBOவின் பொதுச்செயலாளர் தோழர்.வெங்கடேஸ்வர ரெட்டி தனது சிறப்புரையில், கிராம வங்கிகளின் amalgamation, pension, promotions, recruitment, graduation increments to new recruits குறித்து விளக்கமாகப் பேசினார்.
தோழர்.T.கிருஷ்ணன் (PGBOU) தலைவராகவும், தோழர்.மாதவராஜ் (PGBEA) பொதுச்செயலாளராகவும், தோழர்.சங்கரலிங்கம் (PGBOU) பொருளாளராகவும், தோழர்.சுரேஷ் (Pallavan GBEU) joint secretary ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஐ.ஓ.பி பொதுமேலாளரோடு பேச்சு வார்த்தை:
அக்டோபர் 3ம் தேதி சென்னையில், நமது ஸ்பான்ஸர் வங்கியில், கிராம வங்கிகளை கவனிக்கும் பொறுப்பிலிருக்கும் பொது மேலாளர் திரு.பாலச்சந்தர் அவர்களை, NFRRBO பொதுச்செயலாளர் தோழர்.வெங்கடேஸ்வரரெட்டி அவர்களோடு தோழர்கள் சோலைமாணிக்கமும், மாதவராஜும் சென்று சந்தித்தனர். ஐ.ஓ.பி பொதுமேலாளர் அவர்கள், ஆந்திராவில் தோழர்.வெங்கடேஸ்வரரெட்டி பணிபுரிந்து கொண்டு இருக்கும் பகுதியிலேயே பல வருடங்கள் பணிபுரிந்து இருந்ததால் இந்த சந்திப்பு நல்ல அறிமுகமாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருந்தது. நமது வங்கியில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். புதிய தோழர்களுக்கு இரண்டு கிராஜுவேட் இன்கிரிமெண்ட்கள், reimbursement of medical expenses, transfer Policy, mounting Disciplinary proceedings, inhuman middle management in PGB என முக்கிய விஷயங்கள் குறித்துப் பேசப்பட்டது. சாதமான சூழல்கள் ஏற்படும் என்கிற நம்பிக்கை தந்த சந்திப்பு இது.
டிரான்ஸ்பர்கள்:
முதலில் ஒன்றைச் சொல்ல வேண்டும். டிரான்ஸ்பர்களில் இந்த நிர்வாகம் கடைப்பிடிக்கும் நடைமுறைகள் அருவருப்பாகவும், அவமதிப்பாகவும் இருக்கின்றன. நடுராத்திரியில் போடுவது, விடிகாலையில் போடுவது என அடிக்கும் லூட்டிகள் எரிச்சலையேத் தருகின்றன. ஒரெயொரு டிரான்ஸ்பர், அவ்வப்போது இரண்டு டிரான்ஸ்பர்கள், திடிரென ஆறு டிரான்ஸ்பர்கள் என போடுவது ஒருபுறம். ‘இதோ மொத்தமாக போடுகிறோம், இன்று மொத்தமாகப் போடுகிறோம்' என நாட்கள் கடத்தப்படுவது இன்னொரு புறம். மேலும் டிரான்ஸ்பர்களில் முறையான நியதிகளும், வரையறைகளும் கடைப்பிடிக்கப்படவில்லை. ஒரு முறையான பாலிசி இல்லாததன் விளைவே இது.
ஆபிஸர்கள் டிரான்ஸ்பர்களில் பாதிப்புகள் சரிசெய்யப்படாதது மட்டுமின்றி, performanceக்கும் மதிப்பில்லாமல் இருக்கிறது. வங்கியின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டும், ஆபிசர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இந்த டிரான்ஸ்பர்கள் இல்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறோம். டிரான்ஸ்பர்கள் என்ற பேரில் புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் தோழர்களை பந்தாடுவதும், பயமுறுத்துவதும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
மிகப்பெரும் கால தாமதத்திற்குப் பிறகு போடப்பட்ட கிளரிக்கல் டிரான்ஸ்பர்களிலும் பாதிப்புகள் பாதிப்புகளாகவே நீடிக்கின்றன. கைக்குழந்தைகளோடு பல பெண் தோழர்கள் தொலைதூரங்களில் அவதிப்படுகின்றனர். ஒவ்வொரு நாட்களும் அவர்களுக்கு துயரமாகவும், கொடுமையாகவும் இருக்கின்றன. அவர்களது வலியும் வேதனையும் நிர்வாகத்துக்கு எட்டவில்லை. பதவி உயர்வு பெற்ற கடைநிலைத் தோழர்கள், பணி ஓய்வு பெற இருக்கும் தோழர்கள், மருத்துவ ரீதியாக பாதிக்கப்பட்ட தோழர்கள் என பலர் தொலைதூரங்களில் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அவர்களுக்கு சாதகமான டிரான்ஸ்பர்கள் வழங்கப்பட வேண்டும் என நாம் வலியுறுத்தினோம். சங்கங்களிடம் லிஸ்ட் வாங்கி, இன்று வரை டிரான்ஸ்பர்களை போடாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது நிர்வாகம்.
காத்திருக்க வைத்து, பிரச்சனைகளை திசைதிருப்பும் தந்திரமாக டிரான்ஸ்பர்களை நிர்வாகம் கையாளுவதாகவே நாம் கருதுகிறோம்.
அசையாத நிர்வாகமும், அலட்சியமான அதன் போக்குகளும்:
அதிக அளவில் இந்தக் காலக்கட்டத்தில் பதவி உயர்வுகள் நடைபெற்று இருந்தன. ஓரளவுக்கு நியாயமாகவும் அந்தப் பதவி உயர்வுகள் இருந்தன. நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகளோடு ஒரு இணக்கமான அணுகுமுறையை பேச்சுவார்த்தைகளில் காட்டினர். இவைகள் நல்ல சமிக்ஞைகளாய் தென்பட்டன. ஊழியர்கள் நலன்களில் அக்கறையும், வங்கியின் வளர்ச்சியில் ஆர்வமும் ஏற்படும் என நம்பினோம். பிரச்சினைகளை தீர்ப்பதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கால தாமதமும், முரண்பாடுகளும் நீடித்த போதிலும், பேச்சுவார்த்தைகளின் மூலம் சரி செய்துகொள்ள முடியும் என பொறுமையை கடைபிடித்தோம். ஆனால் நிலைமைகள் வேறாக இருக்கின்றன.
பெருமாள் மலை என்னும் ஒரே ஒரு கிளைக்கு hill and fuel allowance-ஐ நாம் வருடக்கணக்கில் கேட்டு வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு ஒப்புக்கொண்ட நிர்வாகம் இன்னும் நிறைவேற்றவில்லை. நீண்ட காலமாக நாம் கோரிக்கை வைத்து பேசி வந்த - ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளதுபோல் Staff Housing Loanம், Staff vehicle loanம் உயர்த்துவதற்கு வங்கியின் நிர்வாகக்குழுவில் ஒப்புக்கொள்ளப்பட்டு மாதங்கள் ஆகின்றன. இன்றுவரை சர்க்குலர்கள் போடப்படவில்லை. Transport allowance இப்போது ரூ.200/-ஆக வழங்கப்பட்டு வருகிறது. வணிக வங்கியில் உள்ளது போல் ரூ.275/-ஆக வழங்கப்பட வேண்டும் என நாம் பேசினோம். நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
லீவில் செல்பவர்களைக் கண்டால் இந்த நிர்வாகத்துக்கு வெறுப்பும், கோபமும்தான் வருகிறது. வேண்டுமென்றே லீவில் செல்கிறார்கள் என்றும், அடிக்கடி லீவில் செல்கிறார்கள் என்றும், முக்கியமான நேரத்தில் லீவில் செல்கிறார்கள் என்றும் கருகிறது நிர்வாகம். அவர்கள் எடுக்கும் லீவுக்குத் தடை போடுகிறது அல்லது சம்பளப்படித்தம் செய்கிறது. அப்படி சம்பளப்பிடித்தம் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மிக நீளமானது. அதுகுறித்து சங்கங்கள் தொடர்ந்து பேசி வந்த போதிலும், நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது.
அதுபோல் எந்த லீவும் உடனடியாக சாங்ஷன் செய்யப்படுவதில்லை. ஒரு மாதத்துக்கு முன்னரே விண்ணப்பம் செய்திருந்தாலும், கடைசி நாள் வரைக்கும் அந்த லீவு சாங்க்ஷன் செய்யப்படுமா என்று தெரியாமல் ஊழியர்களும், அலுவலர்களும் பதற்றத்தோடும் பரிதவிப்போடும் இருக்க வேண்டும். பிறகு சங்கத் தலைவர்கள் தலையிட்டுப் பேச வேண்டும் (பலமுறை கடிதம் வரவில்லை என்றுதான் டிபார்ட்மெண்டில் பதில் வரும்). டெபுடேஷனுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னதாகவே லீவு சாங்ஷன் செய்யப்பட்டு ஒரு நிம்மதியான, ஆசுவாசமான சூழலில் ஊழியர்களும், அலுவலர்களும் லீவில் சென்றால் என்ன கெட்டுவிடப் போகிறது?
இன்றைய காலக்கட்டத்தில், அதிக மார்க்குகள் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஒன்றிலிருந்து betterஆன இன்னொன்று என புதிய வேலைகளை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களில் பலர் நமது வங்கியிலிருந்து ராஜினாமா செய்வது நடக்கிறது. அப்படி ராஜினாமா செய்கிறவர்களை மிகக் கேவலமாகவும், அவமானப்படுத்தும் விதமாகவும் PAD-SM நடத்துகிறார். ஒட்டன்சத்திரம் கிளையில் பணிபுரிந்த புதிய தோழர்.ரத்தீஷ், இந்தியன் வங்கியில் வேலை கிடைத்தவுடன், நமது வங்கியில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார். PAD-SM அவரிடம் ‘உங்களுக்கு வேலை போட்டு, அருகில் உள்ள கிளையில் posting கொடுத்தோமே, உங்களுக்கு நன்றி இருக்கிறதா' என்று கேட்டு இருக்கிறார். நாம் தலையிட்டு சேர்மனிடம் விஷயத்தைக் கொண்டு சென்றோம். சேர்மனிடம் கொண்டு செல்கிறீர்களா, உங்களுக்கு ஒரிஜினல் சர்டிபிகேட்களைஇன்று தர முடியாது என சொல்லியிருக்கிறார். மீண்டும் நமது சங்கத்தலைவர்களும், சேர்மனும் தலையிட்ட பிறகே அந்தத் தோழர்.ரத்தீஷ் ஒரிஜினல் சர்டிபிகேட்களை பெற முடிந்திருக்கிறது. அப்படியொரு பழிவாங்கும் உணர்வும், வன்மம் பாராட்டும் மனமும் கொண்டவராய் இருக்கிறார் PAD-SM.
ஜூலை மாதத்தில் ஒவ்வொருவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய Leave credit இன்னும் தெரிவிக்கப்படவில்லை. புதிய தோழர்கள் உரிய நேரத்தில் Confirmation செய்யப்படுவதில்லை. இப்படி பல ‘இல்லை'களை பட்டியலிடலாம். ஆனாலும் இரவெல்லாம் தூங்காமல் கண்விழித்து வேலை பார்ப்பதாய் அலட்டிக்கொள்வதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
கிளைகளில் இருந்து எதுகுறித்து தொலைபேசியில் PAD-SMக்குப் பேசினாலும் அதிகாரச் செருக்கோடும், அலட்சியப்படுத்தும் விதமாகவுமே பதில்கள் கிடைக்கின்றன. பல சமயங்களில் போனை எடுப்பதில்லை.
ஒழுங்கு நடவடிக்கைகள் ஒரு பக்கம் குவிந்துகொண்டே இருக்கின்றன. இன்னொரு பக்கம் அவைகள் மீதான நடவடிக்கைகள் ஒழுங்கற்றும், காலந்தாழ்த்தப்பட்டும் நடக்கின்றன. ஓய்வு பெற்ற பலர் தங்கள் ஓய்வு காலச் சலுகைகளை பெற முடியாமல் தவிக்கின்றனர். பணி ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அலுவலர் தோழர்.கிருஷ்ணசாமிக்கு, அவர் செய்யாத தவறுக்கு சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டது. இத்தனைக்கும் அவர் மீது ஜோடிக்கப்பட்ட ஒரேயொரு குற்றமும் மிகச் சாதாரணமானதுதான். அதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டுவிட்டது. ஏறத்தாழ ஒரு வருடமாகப் போகிறது. இன்றுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. தோழர் கிருஷ்ணசாமி ஓய்வுகாலச் சலுகைகள் பெறாமல் நாட்களை நிம்மதியின்றி கழித்துக்கொண்டு இருக்கிறார்.
அதுபோல மேலசெவல் கிளையில் பணிபுரிந்து மூன்று மாதங்களுக்கு முன்பு ரிடையர் ஆன மெஸஞ்சர்த் தோழர்.செல்வராஜ் அவர்களுக்கு, அவர் அதிகமாக லீவு எடுத்தார் என்ற காரணத்துக்காக, ரிடையர் ஆவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சார்ஜ் ஷீட் கொடுத்தது நிர்வாகம். அதற்கு உடனடியாக பதில் கொடுக்கப்பட்டு விட்டது. இது misappropriation, fraud, bank loss என்ற வகையான குற்றச் சாட்டும் இல்லை. நிர்வாகம் அந்தப் பதிலை ஏற்றுக்கொண்டு அவர் மன்னிக்கலாம். அல்லது செய்தது தவறுதான் என சொல்லி lenient viewஆக censure செய்து முடிக்கலாம். ஆனால் நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? என்கொயரி ஆர்டர் செய்திருக்கிறது. அவர் அதிகமாக லீவு எடுத்தார் என்பதை உறுதிசெய்ய ஒரு என்கொயரி ஆபிஸர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். எப்படியும் என்கொயரி நடந்து முடிய பல மாதங்கள் ஆகும். அதுவரை தோழர்.செல்வராஜ் ஓய்வு காலச் சலுகைகள் அற்று, நிம்மதியற்று அவதிப்படட்டும் என்பதே ஈவிரக்கமற்ற இந்த நிர்வாகத்தின் ஆசையாக இருக்கிறது.
சொல்வதற்கு இப்படி எவ்வளவோ இருக்கின்றன. ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மிக மோசமாக நடத்தப்படுவதோடு அவர்களது சுயமரியாதையும் இங்கே கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இரக்கமற்ற, மனிதாபிமானமற்ற காரியங்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. சின்னச் சின்ன நடவடிக்கைகள் கூட இங்கே வேண்டுமென்றே காலம் தாழ்த்தப்படுகின்றன. ஒப்புக்கொண்ட பல கோரிக்கைகள் மாதங்கள் பலவாகியும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இவைகளை சுட்டிக்காட்டிய போதெல்லாம், 'இதோ முடிந்துவிடும், அதோ முடிந்துவிடும்' என்று வெறும் வார்த்தைகள் மட்டும் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. வெளிப்படைத் தன்மை அறவே இல்லை. சினேகமான உறவுகள் இல்லை. நம்பிக்கை தரும் நடவடிக்கைகள் இல்லை. நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும் இல்லை. அவ்வப்போது ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு, தான் தோன்றித்தனமாக இந்த நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.
தலைமையலுவலகத்தில் Middle Management-ஆக பொறுப்பிலிருப்பவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் நடத்துகின்ற காட்டு தர்பார்களே இதுபோன்ற சூழலுக்கு முக்கிய காரணமாகிறது. குறிப்பாக PAD-SM மற்றும் AIVD-SM ஆகியோரது நடவடிக்கைகள் கண்டனத்திற்கு உரியதாகவும், தடைசெய்ய வேண்டியதாகவும் இருக்கின்றன. வங்கியின் வளர்ச்சிக்கு இவை ஒருபோதும் உதவாது என்பதை நாம் சேர்மன் அவர்களிடம் பலமுறை தெரிவித்து விட்டோம். ஆனால் நிலைமைகள் மேலும், மேலும் மோசமாகிக்கொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.
இவைகளை சகித்துக் கொள்ளவோ, மேலும் பொறுத்துக் கொள்ளவோ நாம் தயாரில்லை. நமது இரண்டு சங்கங்களின் செயற்குழுக் கூட்டம் மிக விரைவில் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யும்.
(J.மாதவராஜ்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

தோழமையுடன்
(J.மாதவராஜ்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
Leave is a privilege...not a right. But leave is must to maintain a family and to recharge ourselves. I had completed 2 years in humbly serving our bank. In these 2 years i had requested only 20 days pl. I only got a reject letter frm pad on the day when i m supposed 2 b on leave. Why dont they tell us earlier. Why do pad dont understand that doing work in bank is not our only work. We have a duty to complete at home too. For that leave is necessary. Otherwise, it may not be a big surprise 2 see marital problems between husband n wife, between a father n child or between our own parents. I already lost my wife due 2 this. Now i had remarried n have a lovely family. I pray the management not 2 destroy this too.
ReplyDeletemano!
Deleteமிகுந்த வருத்தமாயிருக்கிறது. உங்களுடையதைப் போல பலரின் துயரங்களும், சோகக்கதைகளும் எங்களுக்குத் தெரியும். இங்கே பணிபுரிபவர்களின் காயங்களை விட தங்களது அதிகாரம் முக்கியமானது என PAD-SM நினைக்கிறார். ஹிட்லரின் மனோபாவம் இங்கே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. இந்த வங்கி மீது இருக்கும் அளப்பரிய மதிப்பினால் நாம் அவைகளை வெளியே சொல்லாமல் இருக்கிறோம். ஆனால் நிலைமை இப்படியே நீடித்தால் ஒவ்வொரு நாளும் ஒரு துயரம் தோய்ந்த உண்மைச் சம்பவத்தை வெளியிட நாம் தயங்கமாட்டோம். நம்மை அவர்கள் மதிக்காத போது, அவர்களை நாம் மதிக்க வேண்டிய அவசியமில்லை. நம்மைத் தற்காத்துக்கொள்ள எந்தக் கதவுகளையும் உடைக்கத் தயாராவோம்!!
I m satisfied now...not because my problem is solved...but because u had replied to my feelings...and lessened the burden of my sorrow. My heartfelt thanx admin.
ReplyDelete