16.12.14

உற்சாகமும், எழுச்சியும் மிக்க நமது மண்டலக் கூட்டங்கள்.

நமது சங்கத்தின் மண்டலக் கூட்டங்கள் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இணைப்பு மாநாட்டிற்குப் பிறகு நடக்கும் உறுப்பினர் சந்திப்புகள் இவை.

291.11.2014 அன்று தூத்துக்குடியிலும், 30.11.,2014 அன்று திருநெல்வேலியிலும், 7.12.2014 அன்று மதுரையிலும், 13.12.2014 அன்று காரைக்குடியிலும், மண்டலக் கூட்டங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. மிகுந்த ஆரவாரமும், உற்சாகமும் தோழர்களிடையே நிறைந்திருப்பதை ஒவ்வொரு மண்டலக் கூட்டத்திலும் பார்க்க முடிந்தது.

தூத்துக்குடி மண்டலக் கூட்டம்

தோழர்கள்

தூத்துக்குடி மண்டலச் செயலாளர் தோழர்.சதீஷ்

செயல் தலைவர் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன்

பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்

தோழர்கள்

திருநெல்வேலி மண்டலக் கூட்டம்

தோழர்கள்

உதவித் தலைவர் தோழர்.சண்முகசுந்தரம்

தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன்

பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்

பெண் தோழர்கள்

விருதுநகர் மண்டலக் கூட்டம்

தோழர்கள்

உதவிப் பொதுச்செயலாளர்.பாலச்சந்திரன்

செயல் தலைவர் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன்

பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்

தோழர்கள்

சிவகங்கை மண்டலக் கூட்டம்

தோழர்கள்

இணைச்செயலாளர் தோழர்.விவேகானந்தன்

உதவிப் பொதுச்செயலாளர் தோழர்.அருணபிரகாஷ்சிங்

செயல் தலைவர் தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன்

பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்


புதிய தோழர்களின் அதிகமாக வந்திருந்ததும், பெண் தோழர்களும் கணிசமாக பங்கேற்றதும் இந்த மண்டலக் கூட்டங்களின் சிறப்பம்சம்.  தூத்துக்குடியில் 48 தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் 30க்கும் மேற்பட்ட தோழர்கள் புதிய தோழர்கள். அதில் பாதிக்கும் மேலே பெண் தோழர்கள். திருநெல்வேலியில் 83 தோழர்கள் கலந்துகொண்டனர். 50க்கும் மேற்பட்டவர்கள் புதிய தோழர்கள். ஏறத்தாழ 30 பேர் பெண் தோழர்கள். மதுரையில் 55 தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் 20 தோழர்கள் புதிய தோழர்கள். 7 பெண் தோழர்கள். சிவகங்கையில் 37 தோழர்கள் கலந்துகொண்டனர்.

நமது வங்கியில் நிலவும் பிரச்சினைகள், நாம் செய்ய வேண்டிய தொழிற்சங்கப் பணிகளை விளக்கினார்கள் சங்கத் தலைவர்கள். தொடர்ந்து சங்க உறுப்பினர்கள்  தங்கள் கருத்துக்களை முன் வைத்தனர்.

பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்  தனது உரையாடலில் தெரிவித்த  கருத்துக்களில் முக்கியமானவை சில:
பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜ்

  • 1988க்குப் பிறகு இந்த வங்கியில் புதிய நியமனம் இல்லை. அதுவரை இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்கள்  இந்த வங்கியின் முதல் தலைமுறை. பிறகு 20 வருடங்கள் கழித்து 2008க்குப் பிறகுதான் இந்த வங்கியில் புதிய பணிநியமனங்கள் நடக்க ஆரம்பித்தன. எனவே 2008க்குப் பிறகு பணிக்குச் சேர்ந்தவர்கள் இந்த வங்கியின் இரண்டாம் தலைமுறை. இதனைப் புரிந்துகொண்டு நாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை தீர்மானிக்க வேண்டியது இருக்கிறது.
  • சென்ற தலைமுறை சுயமரியாதை மிக்க, போராட்ட குணம் மிக்க தலைமுறையாய் இருந்து இந்த வங்கியில் ஒரு வலுவான தொழிற்சங்க இயக்கத்தை ஏற்படுத்தியது. தங்களைக் காத்துக்கொள்ளும் உறுதி பெற்றிருந்தனர். இரண்டாம் தலைமுறையிடம் அப்படியொரு தொழிற்சங்க ஈடுபாடு இருக்கக் கூடாது என்றும், ஆரம்பத்திலேயே அவர்களை பயமுறுத்தி வைக்க வேண்டும் என நிர்வாகம் திட்டமிட்டு செயல்படுகிறது. முதல் தலைமுறையை சேர்ந்தவர்கள், இரண்டாம் தலைமுறைத் தோழர்களிடம் நட்பு கொண்டு உரையாட வேண்டும். அவர்களுக்கு நமது வரலாற்றைச் சொல்ல வேண்டும். தொழிற்சங்க இயக்கத்தைக் கற்று கொடுக்க வேண்டும்.
  • இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தோழர்கள் முதல் தலைமுறையக் காட்டிலும் போராட்ட குணம் மிக்கவர்க்ளாக இருந்தாக வேண்டும். ஏனென்றால் வருகின்ற காலங்கள் சோதனைகள் நிறைந்ததாகவும், சவால்கள் கொண்டதாகவும் இருக்கும். மோடியின் அரசு தொழிலாளர்களுக்கு முற்றிலும்  விரோதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் சட்டங்களை குப்பைத் தொட்டியில் வீசப்போவதாகச் சொல்கிறது.  தொழிலாளர்களின் ஊதிய உயர்வினை மறுக்கிறது. 10 வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளே அதற்கு சாட்சி. எனவே இரண்டாம் தலைமுறைத் தோழர்களை  போராடுவதற்கு  தயாராக்க வேண்டும்.
  • புதிதாக பணிக்குச் சேர்கிற இரண்டாம் தலைமுறையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் தோழர்கள். இதுகுறித்து சமூகப்பார்வை கொண்ட சங்கமாகிய நாம் பெருமை கொள்கிறோம். அதே நேரம் நிர்வாகமும் நிம்மதி கொண்டு இருக்கிறது. பெண் தோழர்கள் தொழிற்சங்கக் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள், போராட மாட்டார்கள் எனவே இங்கு மெல்ல மெல்ல தொழிற்சங்க உணர்வு மங்கிப் போகும் என நிர்வாகம் கனவு காண்கிறது. ஆனால்  ஒரு பெண் தோழரே பொதுச்செயலாளராக பணியாற்றும் காலமும், பெண் தோழர்களே போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் காலமும் நிச்சயம் இந்த வங்கியில் உருவாகும். உருவாக்குவோம்.
  • நமது வங்கியின் பெயரில் இருக்கும் `கிராம` என்னும் சொல் புதிதாக பணிக்குச் சேர்கிற தோழர்களுக்கு எதோ ஒரு இரண்டாம் தரத்திற்குரியதாக தோன்றுகிறது என நினைக்கிறேன். பல தோழர்கள், நமது வங்கியைவிட்டு வேறு கமர்ஷியல் வங்கிக்கு பணிக்குச் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது. முதல் தலைமுறைச் சேர்ந்த நாங்கள் எங்களுக்குச் சொந்தமானதாக ஒரு வீடு கட்டியிருக்கிறோம். எங்கள் குழந்தைகளை படிக்க வைத்திருக்கிறோம். சமூகத்தில் ஒரு அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. இவையெல்லாவற்றையும் தந்தது `கிராம` என்னும் வார்த்தையைத் தாங்கிக்கொண்டு இருக்கும் இந்த பாண்டியன் கிராம வங்கிதான். பெயரில் என்ன இருக்கிறது? நாம் செய்யும் தொழில் நேர்மையானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
  • இந்த வங்கியில் 248 கிளைகள் உள்ளன. தலைமையலுவலகத்தில் 7 டிபார்ட்மெண்ட்கள் உள்ளன. மண்டல அலுவலகங்கள் 5 இருக்கின்றன. இவையனைத்திலும் சேர்த்து குறைந்த பட்சம் 260 நிரந்தரமாக்கப்பட்ட மெஸஞ்சர்கள் பணிபுரிய வேண்டும். ஆனால் இன்றைய தேதியில், 48 மெஸஞ்சர்களே இருக்கின்றனர். மீதி அனைவரும் தற்காலிக மெஸஞ்சர்கள். ஆனால் லேபர் கோர்ட்டில் நமது பொது மேலாளர் `நான் சொல்வதெல்லாம் உண்மை, சத்தியம்` என்று சொல்லிவிட்டு, பாண்டியன் கிராம வங்கியில் ஒரு தற்காலிக மெஸஞ்சர்கள் கூட பணிபுரியவில்லை என வாக்குமூலம் கொடுக்கிறார். இந்த நிர்வாகத்தின் நேர்மையின் லட்சணம் இதுதான்.
  • தோழர்கள் எப்போதும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். நாம்  நேர்மையாக இருந்தால்தான் அச்சமின்றி இருக்க முடியும். நேர்மையாக இருந்தால்தான் இந்த நிர்வாகத்தினை நம்மால் எதிர்த்து நிமிர்ந்து நிற்க முடியும். ஏனென்றால் நிர்வாகங்கள் நேர்மையற்றவை. நமது பாஸ்வேர்டை அடுத்தவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் விதி.தொழில்தர்மம். ஆனால் இந்த நிர்வாகம் பாஸ்வேர்டைக் கொடுக்காமல் இருக்க முடியாது என்று சொல்கிறது. லீவு போட்டாலும் கொடுக்கச் சொல்கிறது. அப்படி கொடுப்பதில் எதாவது பிரச்சினை ஏற்பட்டால், `ஏ்ன் கொடுத்தீர்கள்` என கேள்வியும் கேட்கிறது. தவறு செய்யத் தூண்டுவதும் பிறகு அந்தத் தவறுக்கு தண்டனை கொடுப்பதாகவும் நிர்வாகமே இருக்கிறது. இந்த சூதும், சூட்சுமும் நிர்வாகங்களுக்கு கை வந்த கலைகள்.
  • நாம் எதன் பொருட்டும் நமது  உரிமைகளையும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. அடிமைப் புத்திக்கு ஆளாகக் கூடாது. நிர்வாகங்கள், அவர்கள் சொல்கிறபடி கேட்கிற அடிமைகளைத்தான் விரும்புகிறது. நிர்வாகத்தை துதி பாடுகிற சுயமரியாதையற்றவர்களைத்தான் அருகில் வைத்துக் கொள்கிறது. நாம் கேள்வி கேட்கிறவர்களாக, நியாங்களுக்காக கலகக்குரல் எழுப்புவர்களாக இருக்க வேண்டும். 
  • நாம் பிரச்சினைகளை பேச்சுவார்த்தைகளின் மூலமே தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். சுமூகமாகவே நமது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆசைப்படுகிறோம். ஆனால் நிர்வாகங்களும், இந்த அதிகார அமைப்பும் அப்படி நினைப்பதில்லை. தாங்கள் நினைத்ததை மட்டிலும் சாதிப்பதில் பிடிவாதம் காட்டுகின்றன. நமக்கு சலுகைகள் வழங்குவதை  இரக்கமற்று தவிர்க்கின்றன. முடிந்தவரையில் இழுத்தடிக்கின்றன. எனவேதான் தொழிலாளர்களாகிய நாம் கோபம் கொள்கிறோம். போராடுகிறோம். ஆமாம், மரம் சும்மாயிருந்தாலும், காற்று சும்மா இருக்க விடுவதில்லை.
  • சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும் என்றும், இந்த வங்கிதான் சுவர் என்ற இங்கு சொல்கிறார்கள்.சொல்வார்கள். இதன் மூலம் வங்கிதான் பிரதானமானது என்று கருத்து முன்வைக்கப்படுகிறது. இது சரியல்ல. நாம்தான் இந்த வங்கிக்கு அடிப்படை, ஆதாரம் எல்லாம். நாமின்றி, உழைப்பவர்களின்றி இந்த வங்கி வெறும் கட்டிடங்களாகவும், கம்ப்யூட்டவர்களாகவும் தான் இருக்கும். எனவே நமது நலன்களும் முக்கியமானவை. வங்கியின் வளர்ச்சி என்பது பேலன்ஸ் ஷீட்டில் மட்டும் பார்க்கப் படக்கூடியது அல்ல. அந்த  வங்கியில் பணிபுரியும் தொழிலளர்களின் வாழ்க்கையிலும், வாழ்க்கைத் தரத்திலும் அறியப்பட வேண்டியதாகும்.


நமது சங்க உறுப்பினர்களும், விவாதங்களில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். அவைகளில் முக்கியமானவை சில:

  • சங்க நடவடிக்கைகள் உறுப்பினர்களுக்கு அதிகமாகத் தெரியவில்லை. தனித்தனியாக சங்கங்கள் இருந்த போது, போட்டி போட்டுக்கொண்டு செய்திகள் வந்துகொண்டு இருந்தன. இப்போது அப்படியில்லை. இது சரி செய்யப்பட வேண்டும்.
  • Office Assistant - Multi purpose என்று நமது cadre அழைக்கப்படுவதும், இந்த வங்கியிலிருந்து  பலர் resign  செய்துவிட்டு கமர்ஷியல் வங்கிகளில் பணிக்குச் சேருவதற்கு காரணம்.
  • 2 மணி வரைக்கும்தான் cash பார்க்க வேண்டும் என்னும் RBI guidelines குறித்து நிர்வாகத்திடம் பேசினீர்களா? என்னாச்சு. அதை அமல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • இதுபோன்ற கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும். புதிய தோழர்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும்.
  • தலைமையலுவலகத்திலும், மண்டல அலுவலகங்களிலும் சங்கப் பிரதிநிதிகள் அவசியம் பணிபுரிய வேண்டும்.
  • 2013ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்த பலருக்கு இன்னும் Confirmation  வரவில்லை. டிபார்ட்மெண்டில் எல்லாம் காலதாமதம்தான்.
  • லீவு வழங்குவதில் கெடுபிடியாய் இருக்கிறது நிர்வாகம். சங்கம் இதில் கவனம் செலுத்தி, தீர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
  • Petrol Allowance மற்றும் House Maintanence Allowance  பற்றி நிர்வாகத்துடன் பேசினீர்களா? என்ன சொல்கிறது நிர்வாகம். சங்கம் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
  • லீவில் சென்றாலும் பாஸ்வேர்டு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இல்லையென்றால் டெபுடேஷனுக்கு ஏற்பாடு செய்ய மாட்டோம் என மிரட்டுகிறார்கள்.
  • சிசி டிவி காமிரா வொர்க் ஆக வில்லை. கவுண்டிங் மெஷின் சரியில்லை. தலைமையலுவலகத்துக்குச் சொல்லியாகிவிட்டது. எந்த முன்னேற்றமும் இல்லை.
  • அப்ரைசர்களை டிரான்ஸ்பர் செய்தது பெரும் கொடுமை. இதனால் அவர்களுக்கும் இழப்பு. வங்கிக்கும் இழப்பு.
  • சங்க நடவடிக்கைகள் போதாது. டிரான்ஸ்பர் மட்டுமே சங்க நடவடிக்கைகள் ஆகாது. நிறைய கோரிக்கைகளும், பிரச்சினைகளும் இருக்கின்றன. அவைகள் குறித்து என்ன செய்து கொண்டு இருக்கிறது சங்கம்? 
  • இப்போது ஜெனரேட்டர் பயன்படுத்துவதற்கும் log Register பராமரிக்க வேண்டும் என்கிறது நிர்வாகம். மண்ணென்ணெய்யை வாங்கி வீட்டிற்கா கொண்டு செல்லப் போகிறோம். மிகக் கேவலமாக நம்மை நடத்துகிறது நிர்வாகம்.
  • ஓய்வு பெற்ற தோழர்களை வங்கிப் பணிகளுக்கு குறைந்த ஊதியத்தில் பயன்படுத்துகிறார்கள். இது சரியான பார்வையும் இல்லை. நடைமுறையும் இல்லை. புதிதாக ஒரு இளைஞனுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பை குறைக்கிற, உழைப்பைச் சுரண்டும் செயல் இது. சங்கம் இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.
  • 15 நாட்களுக்கு மேல் டெபுடேஷன் சென்றால், பாதி Halting Allowance தான் தருகிறார்கள். காரைக்குடியிலிருந்து தஞ்சாவூரத் தாண்டி டெபுடேஷன் போடுகிறார்கள். எங்கு தங்குவது. எவ்வளவு செல்வாகும். இதையெல்லாம் ஏன் நிர்வாகம் யோசிப்பதில்லை?
  • பெண்களுக்கு டிரான்ஸ்பரில் முன்னுரிமை கொடுக்கிறீர்கள். இப்போது பாதிக்கும் மேலே பெண்களே வேலைக்கு வந்திருக்கிறார்கள். இதில் எப்படி முன்னுரிமை கொடுக்கப் போகிறீர்கள்?
  • 'Single man' கிளைகளே இருக்கக்கூடாது. அனைத்துக் கிளைகளிலும் இரண்டு கிளர்க்குகள் இருக்க வேண்டும்.

உறுப்பினர்கள் கேள்விகளுக்கும், விவாதங்களுக்கும் சங்கத் தலைவர்கள் பதிலளித்தனர். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், இனி வரும் சங்கத்தின் செயற்குழு கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கும் என்றனர்.

இந்த மண்டலக் கூட்டங்கள் புத்துணர்ச்சியை தந்திருக்கின்றன. சங்க நடவடிக்கைகளில் வேகத்தை தந்திருக்கின்றன. தோழமையையும், ஒற்றுமையையும் பலப்ப்படுத்தி இருக்கின்றன.

தொடர்ந்து முன்னேறுவோம் தோழர்களே!


1 comment:

Comrades! Please share your views here!