AIRRBEAவின் அறைகூவலை ஏற்று கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து அகில இந்திய அளவில், இயக்கங்களை நடத்திக்கொண்டு இருக்கிறோம்.
1. Scrap RRBs Act Amendment Bill, 2013 aimed at privatization of Gramin Banks.
2. Implement Pension Parity and agreement dated 29-10-1993 in RRBs.
3. Establish State Level Rural Banks, one for NE States, under NRBI
4. Regularize all Part Time/Casual/Daily Waged workers.
5. Allow participation of Workman/Officers in the Board of RRBs.
6. Recruit adequate staff, promote staff in time and effect massive branch expansion.
7. Allow Special Leave to T.U. Leadership at par with those in Banking Industry.
8. Relax service period for promotion of all cadres of staff including Office Attendant at par Sponsor Bank
இந்தக் கோரிக்கைகளை விளக்கி இராமநாதபுரம், திருநெல்வேலி, காரைக்குடி, மதுரை ஆகிய நான்கு மையங்களில் பிரச்சாரக்கூட்டங்களை நடத்தி முடித்திருந்தோம்.
திருநெல்வேலி கூட்டத்தில் தோழர்கள்....
காரைக்குடி மையக்கூட்டத்தில் தோழர்கள்...
மதுரை மையக் கூட்டத்தில் தோழர்கள்...
இந்தப் பிரச்சாரக் கூட்டங்களை அடுத்து, நேற்று, 22.11.2013 அன்று தலைமையலுவலகம் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்தியிருக்கிறோம். ஏறத்தாழ நூறு தோழர்கள் பங்கெடுத்த இந்த தர்ணாவை PGBOU தலைவர் தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் துவக்கி வைத்தார். தோழர் சோலைமாணிக்கத்தின் கோஷங்களால் பந்தல் களை கட்டியது.
அகில இந்தியக் கோரிக்கைகளோடு ஸ்தலப் பிரச்சினைகளையும் முன்வைத்து தோழர்கள் பேசினார்கள். PAD மற்றும் AIVDயின் செயல்பாடுகள் குறித்துப் பேசப்பட்ட போதெல்லாம் தோழர்கள் ஆவேசமடைந்ததையும், கடும் அதிருப்தியை தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது. பணி ஓய்வு பெறுகிறவர்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள், ஒழுங்கு நடவடிக்கைகளில் அரங்கேற்றப்படும் அராஜகங்கள், லீவில் கடைப்பிடிக்கப்படும் அராஜகங்கள், பொதுவாக எந்த காரியத்தையும் பெரும் காலதாமதம் செய்து இழுத்தடித்து வதைக்கும் நிகழ்வுப் போக்குகளை தோழர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர்கள் கலந்துகொண்டு தர்ணாவை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!