28.8.14

All Trade Unions in PGB - Gate Meeting on 27.8.2014

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் அணுகுமுறையும், செயல்பாடுகளும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.


2013ம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட காலியிடங்களுக்கு இன்னும் பிரமோஷன் அறிவிக்கப்படவே இல்லை.

2014ம் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் போடப்பட்டு இருக்க வேண்டிய ஜென்ரல் டிரான்ஸ்பர்கள் இன்னும் போடப்படவில்லை.

2013ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பணிக்குச் சேர்ந்த புதிய ஊழியர்களுக்கு இன்னும் கன்பர்மேஷன் கொடுக்கப்படவில்லை.

பலருக்கு வருடக்கணக்கில் Leave regularize  செய்யப்படவில்லை.

இப்படி Personnel Administration Department நிலைமை இருக்கிறது.

ஒழுங்கு நடவடிக்கைகள் முடிவுற்று, பலருடைய அப்பீல்கள் வருடக்கணக்கில் கவனிக்கப்படவில்லை.

Final orderகளுக்காகவும், Findingsக்காகவும் பலருடைய Fileகள் காத்துக் கிடக்கின்றன.

பணியில் இருக்கும்போதெல்லாம் விட்டுவிட்டு, ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சார்ஜ் ஷீட் கொடுக்கப்படுகிறது.

தேவையில்லாமல், வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, Fileஐ create செய்துவிட்டு அதை வருடக்கணக்கில் தீர்க்காமல் அப்படியே வைத்திருப்பது வாடிக்கையாகவும், வழக்கமாகவும் இருக்கிறது.

இப்படி Inspection Departmentன் நிலைமை இருக்கிறது.

காலதாமதமும், ஊழியர் நலனில் மெத்தனமும், ஊழியர்களை அடிமைகளாக பாவிக்கும் ஆணவமும் மண்டிக்கிடக்கிற இடமாக தலைமையலுவலகம் சிதைந்து போயிருக்கிறது.

அனைத்துத் தரப்பு ஊழியர்களும், அலுவலர்களும் கடும் எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகின்றனர். வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் இந்த அணுகுமுறை நல்லதல்ல என்பதுதான் எல்லோரின் கருத்தாக உருவெடுத்திருக்கிறது.

இந்த இரு துறைகள் குறித்து வருடக்கணக்கில் சங்கங்கள் நிர்வாகத்துடன் பேசியும், அதிருப்தி தெரிவித்தும் வந்திருக்கின்றன.

இந்த Attitudeக்கும், Approachக்கும் காரணமானவர்களை அப்புறப்படுத்தி விட்டு, புதிய சிந்தனைகளும், நட்பும் மனிதாபிமானமும் கொண்ட அதிகாரிகளை தலைமையலுவலகத்தில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்வதுதான், தலைமையலுவலகத்தில் மாற்ற்ம்’ கொண்டு வருவதன் முதல் படியாக இருக்கும் என சங்கங்கள் கோரிக்கை வைத்தன.

நம்முடைய கருத்துக்களை ஆமோதிக்கிற நிர்வாகம், ஆனால் சரி செய்ய மட்டும் முன்வர மாட்டேன்கிறது.

எனவே, பாண்டியன் கிராம வங்கியில் இருக்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து, ‘தமைமையலுவலகத்திலிருந்து மாற்றம்’ கொண்டு வர தொடர்ந்து இயக்கம் நடத்துவது என முடிவு செய்திருக்கின்றன.

அதன் முதல் கட்டமாக, 27.8.2014 அன்று மாலை தலைமையலுவலகத்தில் வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது. பாண்டியன் கிராம வங்கியில், தொழிற்சங்க இயக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து நிற்கும் மிக முக்கியமான அத்தியாயம் இதன் மூலம் ஆரம்பமாகி இருக்கிறது.

கடுமையான ஆள் பற்றாக்குறை, 4 மணி வரை கிளையில் வரவு செலவு பார்க்க வேண்டிய நிலை, தொலைதூரத்தில் கிளைகள் திறக்கப்பட்ட சூழலையும் தாண்டி ஏறத்தாழ 200 தோழர்கள் இந்த வாயிற்கூட்டத்திற்கு வந்திருந்தனர்.

உற்சாகமும், எழுச்சியும் மிக்க இந்த வாயிற்கூட்டத்தை, PGBWUவின் AGS தோழர்.அருண்பிரகாஷ் சிங் தனது ஆக்ரோஷமான கோஷங்களால் துவக்கி வைத்தார்.

PGBWUவின் தலைவர், தோழர்.பாலசுப்பிரமணியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். PGBSEWA பொதுச்செயலாளர் தோழர்.ராஜேந்திர சோழன் பேசினார். PGBOUவிலிருந்து தோழர்கள் போஸ் பாண்டியன், சாமுவேல் ஜோதிக்குமார், டி.கிருஷ்ணன், சங்கரலிங்கம் ஆகியோர் பேசினார்கள். PGBOAவிலிருந்து தோழர்கள் குழந்தைவேலு, அருணாச்சலராஜன், இலக்குவன் ஆகியோர் பேசினார்கள். PGBWUவிலிருந்து தோழர்கள் பாலாஜி பாலகிருஷ்ணன், மாதவராஜ் ஆகியோர் பேசினார்கள்.

நிர்வாகம் உடண்டியாக ‘தலைமையலுவலகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும், இல்லையென்றால் வங்கியின் தொழில் அமைதி பாதிக்கப்படும், வணிகமும் பாதிக்கப்படும் அளவுக்கு கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டி இருக்கும் என தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

வாயிற்கூட்டம் முடிந்ததும், வங்கியின் சேர்மனை சந்தித்து, மெமொரெண்டம் கொடுக்கப்பட்டது. ‘ஆகஸ்டு மாதத்திற்குள் தலைமையலுவலகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லையென்றால் போராட்ட வடிவங்கள் தீவீரமாகும்’  என்பது தெரிவிக்கப்பட்டது.
\
வரும் சனிக்கிழமை மாலை, அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள் மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பார்கள்.

வாயிற்கூட்டத்தின் சில காட்சிகள்:

தோழர்.அருண்பிரகாஷ்சிங் கோஷங்களோடு...

தோழர்கள்.....

தோழர்.பாலசுப்பிரமணியன் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்.ராஜேந்திர சோழன் பேசுகிறார்...

தோழர்.போஸ் பாண்டியன் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்.அருணாச்சலராஜன் பேசுகிறார்...

தோழர்.டி.கிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.குழந்தைவேலு பேசுகிறார்...

தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் பேசுகிறார்...

தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் பேசுகிறார்...

தோழர்.சங்கரலிங்கம் பேசுகிறார்...

தோழர்.இலக்குவன் பேசுகிறார்...

தோழர்.மாதவராஜ் பேசுகிறார்...

தோழர்கள்...

தோழர்கள்...

தோழர்.மாதவராஜ் பேசுகிறார்...

1 comment:

  1. when will u announce clerk interview result....... how long will u take for it...... next IBPS RRB clerk exam date also announced...... will u announce before IBPS RRB exam

    ReplyDelete

Comrades! Please share your views here!