28.7.14

புதிய செயற்குழுவின் முதல் கூட்டம்!


இணைப்பு மாநாட்டிற்கு பிறகு, PGBWUவின் முதல் செயற்குழுக் கூட்டம் குற்றாலத்தில், 27.7.2014 அன்று நடந்தது.

அகில இந்தியச் செய்திகள், ஊழியர்களின் பிரச்சினைகள், டிரான்ஸ்பர்கள், நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள், சட்ட ரீதியான நடவடிக்கைகள், சங்கத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கான  குழுக்கள் அமைத்தல் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.


சுகமான சாரல் காற்று வீசிக்கொண்டு இருந்தாலும், செயற்குழுக் கூட்டம் நடந்த அறையில் , நமது ஊழியர்கள் இன்று வங்கியில் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் போது வெப்பம் மெல்ல பரவ ஆரம்பித்தது.

நமது சங்கத்தை அங்கீகாரம் செய்ய வேண்டும் என்பதும் தலைமையலுவலகத்தில், மண்டல அலுவலகங்களில் நமது சங்கத்தின் பிரதிநித்துவம் வேண்டும் என்பதும் முதற் கோரிக்கையாக உருவெடுத்தது. தொலைதூரக் கிளைகளில் அவதிப்படும் தோழர்கள் அருகாமைக்கு கொண்டு வரவேண்டியது சங்கத்தின் முக்கிய கடமையாக தீர்மானிக்கப்பட்டது. கிளைகளில் பணிபுரிவதற்கான ஆரோக்கியமான சூழலை இந்த வங்கியில் உடனடியாக ஏற்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. இந்த வருடம் நடைபெற வேண்டிய பிரமோஷனுக்கான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படாததற்கு அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களின் duties and responsibilities ஐ வரையறுக்கப்பட வேண்டியது உடனடித் தேவை என செயற்குழு கருதியது. PAD- SM  மற்றும்  AIVD- SM களின் நடவடிக்கைகளில், செயல்பாடுகளில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

இவைகளின் அடிப்படையில் ஒரு கோரிக்கைகளின் பட்டியல் தீர்மானிக்கப்பட்டது. வரும் வியாழக்கிழமை 31.7.2014 அன்று, சேர்மனோடு இந்தக் கோரிக்கைகள் குறித்துப் பேச இருக்கிறோம்.

Regional Committee களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டது. விரைவில் முக்கிய நகரங்களில், நமது சங்கத்தின் மண்டலக் கூட்டங்கள் நடத்தி, அவைகளில் உறுப்பினர்களை சந்தித்து, நமது எதிர்கால நடவடிக்கைகளைத் தீர்மானிக்க இருக்கிறோம்.

விரிவான சுற்றறிக்கை விரைவில்....

5 comments:

Comrades! Please share your views here!