அருமைத் தோழர்களே!
வணக்கம்.
புதிய ஊதிய விகிதம் அமல்படுத்தப்பட்டு, தோழர்கள் பெற்று இருப்பீர்கள். கணக்கிடுவதிலும், சில அலவன்சுகளை சேர்ப்பதிலும் இன்னும் குறைகள் இருக்கின்றன. அவைகள் குறித்தும், டிரான்ஸ்பர்கள் குறித்தும் வங்கிச் சேர்மன் அவர்களோடு 12.10.2010 அன்று பேசினோம்.
1.சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இறந்த ஊழியர்களுக்கான அரியர்ஸ் தொகையை உடனே வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கான பணி துவங்கிவிட்டதாகவும், விரைவில் கிடைக்குமெனவும் சொல்லப்பட்டது.
2. கிளரிக்கல் தோழர்களுக்கு கம்ப்யூட்டர் அலவன்சு சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கடந்த நான்கு மாதங்களில் இருந்து, அந்த அலவன்சில் ஆயிரம் ருபாயை, அடிப்படை ஊதியத்தில் இணைத்து கணக்கிடவில்லை. அதை உடனடியாக சரிசெய்து தருவதாக சொல்லப்பட்டு இருக்கிறது.
3. கிளரிக்கல் தோழர்களுக்கு Transport allowance புதிய ஊதிய விகிதப்படி பதினைந்து வருடம் பணி முடித்திருந்தால் ரூ.225ம், அதற்கு மேல் என்றால் ரூ.275ம் கொடுக்கப்பட வேண்டும். நமது வங்கியில் ரூ.105 மட்டுமே இன்னமும் கொடுத்திருக்கிறார்கள். இதனை பேசியபோது, ஐ.ஓ.பிக்கு எழுதியிருப்பதாக நிர்வாகம் சொன்னது. ஏற்கனவே கொடுக்கப்பட்டு வந்த அலவன்சிற்கான தொகையை உயர்த்துவதற்குமா ஐ.ஓ.பியிடம் கேட்க வேண்டும் என கேட்டோம். இதே ஐ.ஓ.பியின் ஸ்பான்ஸரில் இயங்கும் இன்னொரு கிராம வங்கியான ‘நிலாஞ்ச்சல் கிராம வங்கி’யில் இந்த அலவன்சு உயர்த்தப்பட்டு இருப்பதையும் அதற்கான சர்க்குலரையும் காட்டினோம். தாங்கள் ‘ஐ.ஓ.பிக்கு எழுதி இருக்கிறோம்’ என்பதையே பொதுமேலாளர் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டு இருந்தார். இதுதான் நிர்வாகம் ஊழியர்கள் நலனில் காட்டும் அக்கறைக்கும், முனைப்பிற்குமான சரியான உதாரணம். (விஷயம் இப்படி இருக்கையில் இந்த அலவன்சை ரூ.205/- எனக் குறிப்பிட்டு OA சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறது. ஒரு விஷயம் குறித்து ஞானம் இருந்தால் பேசுங்கள் அல்லது வாயை மூடிக்கொண்டு இருங்கள் என அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.)
4. எல்லோருக்கும் Income Tax பிடிக்கப்பட்டு இருப்பதையும், பலருக்கு அது தேவையில்லை என்பதையும் சுட்டிக்காட்டினோம். புதிய பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பிடிக்கப்பட்ட IIncome Taxஐத் திரும்பத் தருவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
5.Medical reimbursement, surrender leave போன்றவற்றில், புதிய ஊதிய விகிதப்படி differenceஐத் தருமாறு கோரிக்கை வைத்தோம். அதையும் நிர்வாகம் செய்து தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது.
6.பதவி உயர்வு, புதிய பணி நியமனம் குறித்துப் பேசினோம். கிளைகளில் ஆள் பற்றாக்குறையால் மிகுந்த சிரமம் ஏற்படுவதைத் தெரிவித்தோம். மிக விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது.
7. எந்தவிதக் காரணங்களும் தெரிவிக்காமலேயே இங்கு சிலருக்கு இன்கிரிமெண்ட் கொடுக்கப்படாமல் வருடக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அது விதிகளுக்கும் முரணானது என்றும், நியாயமற்றது எனவும் தெரிவித்தோம். இதனை ஒப்புக்கொண்ட சேர்மன அவர்கள், அதனை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்தார்.
8. நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் மாறுதல் உத்தரவுகள் குறித்துப் பேசினோம். நம் தரப்பில் பாதிப்பிற்குள்ளானவர்களுக்கு சரி செய்து தர வேண்டும் என வலியுறுத்தினோம். ‘அவர்களை ஜாய்ன் பண்ணச் சொல்லுங்கள். பிறகு அவர்களுக்கும் சேர்த்து லிஸ்ட் கொடுங்கள், பேசுவோம்” என்றார் சேர்மன். நாம் நமது அதிருப்தியை தெரிவித்தோம்.
இங்கு PGBEA சார்பில் சில விஷயங்களைச் சொல்ல வேண்டி இருக்கிறது. பொது மாறுதல்கள் குறித்து நாம் பேசிய போதெல்லாம், “புதிய பணி நியமனம், பதவி உயர்வுகள் வரும் போது, சேர்த்து மொத்தமாக போடுகிறோம்” என்று சொன்ன நிர்வாகம் இப்போது திடுமென மாறுதல்களை போட்டு இருக்கிறது. எந்த விதிகளும் இல்லாமல் excess, short என்னும் நிர்வாகப் பார்வையில் மட்டுமே இந்த மாறுதல்கள் போடப்பட்டு இருக்கின்றன. அதனால் இந்த டிரான்ஸ்பரில் பாதிப்புகள் மட்டுமே இருக்கின்றன.
சென்ற பிப்ரவரியில், சென்ற சேர்மன் நமது சங்கத்தின் மேல் உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், ஒருதலைப்பட்சமாகவும், நம் சங்கம் அல்லாத 33 பேருக்கு மாறுதல்கள் செய்து கொடுத்தார். நாம் ALC முன்பு ‘இது unfair labour policy' என ஒரு தொழில்தாவா ஏற்படுத்தினோம். விசாரித்த ALC அவர்கள், “இது முறையற்றது. தண்டனைக்குரியது” என நிர்வாகத்திடம் எடுத்துரைத்தார். “நாங்கள் சரி செய்து தருகிறோம். PGBEA உறுப்பினர்களுக்கும் phased mannerல் சாதகமான டிரான்ஸ்பர்கள் செய்து கொடுக்கிறோம்” என ALCயிடம் நிர்வாகம் சொன்னது. ஆனால் இங்கு நடப்பது என்ன? phased mannerல் பாதகமான மாறுதல்கள். இதுதான் தங்கள் தவறை சரி செய்யும் முறையா?
நிர்வாகத்திடம் திரும்பவும் சொல்லிக் கொள்கிறோம். “கடந்தகாலத் தவறுகளை சரி செய்வதுதான் எதிர்காலப் பணிகளில் முதன்மையானது”.
‘System and Procedure' குறித்து PGBOU சார்பில், நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை மிகுந்த உபயோகமானதாகவும், எழுச்சிமிக்கதாகவும் இருந்தது. கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே அவர்களுக்குரிய தலைப்பில் அருமையாக விஷயங்களை எடுத்துரைத்தார்கள். நாம் என்னென்ன தவறுகளை, நமது பணிகளில் செய்து கொண்டு இருக்கிறோம், அது நாளைக்கு எவ்வளவு ஆபத்தாக முடியும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இதுபோல் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.
மாறிவரும் புதிய பணிச்சூழலில் அதற்கான தேவைகளும் அதிகமாகவே இருக்கிறது. உரிய ஆவணங்கள் பெறாமல் Customer Id உருவாக்க வேண்டாம் எனவும், TXN post செய்யாமல் jewel loan கொடுக்க வேண்டாம் எனவும் நாம் சர்க்குலரில் தெரிவித்திருந்தோம். ‘இது businessஐப் பாதிக்கும்’ என மாற்றுச்சங்கத்தினர் சர்க்குலர் வெளியிட்டு, ‘நாம் வங்கிக்கு எதிரானவர்கள்’ போல சித்திரம் தீட்ட முனைகிறார்கள். ‘நாங்கள் என்ன சொன்னாலும் எதிர்ப்பது’ என்கிற மனோநிலையிலிருந்து முதலில் விடுபடுங்கள் என்பதே இந்நேரம் அவர்களுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள். நம்மைத் தற்காத்துக் கொள்வது முதலில் முக்கியமானது. “நான் பிஸினஸ் வேண்டுமென்றுதான் சொல்வேன். அதற்காக rules and regulationsஐ மீறுவது சரியல்ல. அது மிக முக்கியம்” என பேச்சு வார்த்தையில் நமது சேர்மன் அவர்களே ஒருமுறை தெளிவாகச் சொன்னார்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்.
நிர்வாகம் தன் வசதிக்கேற்ப சி.பி.எஸ் நியதிகளை மாற்றியும், வளைத்தும், கேஷியரே கவுண்டரில் உட்கார்ந்து போஸ்டிங்கும் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது. அதெல்லாம் சாத்தியமற்ற, அதீதக் கற்பனையாகவே முடியும். கேஷியரின் தலையில் எல்லாவற்றையும் சுமத்துவது பெரும் ஆபத்துக்களில்தான் முடியும். தேவையான ஆட்கள் எடுக்க வேண்டும் என்பதே சரியான நிலைபாடாக இருக்க முடியும். சி.பி.எஸ் என்று மாறி வரும் சூழலுக்கேற்ப, நம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதிலுள்ள பிரச்சினைகளையும், பொறுப்புகளையும் அறிய நவமபர் 14ம் தேதி மதுரையிலும், நவமபர் 21ம் தேதி திருநெல்வேலியிலும் PBBEA சார்பில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டிருக்கிறது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட வணிக வங்கியில் பணிபுரியும் முக்கிய தோழர்கள் நம்மோடு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
தோழமையுடன்