11.1.12

என்ன பாவம் செய்தார்கள் PGB அப்ரைசர்கள்?



இன்று நிர்வாகத்திலிருந்து ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. சமீப காலமாக, அங்குமிங்குமாக நகைக்கடன்களில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறதாம்.  அதற்கு அப்ரைசர்கள் காரணமாக இருந்திருக்கிறார்களாம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளை எதிர்கொள்ள அப்ரைசர்களை லட்சக்கணக்கில் வங்கியில் டெபாசிட் போட்டுவைக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். A,B,C,D  என கிளைகளின் வணிக அடிப்படையில் தரவாரியாக பிரித்து, 3 லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என ஒவ்வொரு அப்ரைசரும் டெப்பாசிட் போட வேண்டுமாம்.

அதாவது வங்கியின் பாதுகாப்பு கருதியே நிர்வாகம் இந்த முடிவு எடுத்திருக்கிறதாம்.  டெப்பாசிட்டை இப்படியாவது கூட்டலாம் என்பதற்காக அல்ல என்பதை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்புவோமாக!

இந்த வங்கியில் அப்ரைசர்கள் வங்கிக்காக எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை கணக்குப் பார்த்தால், நாறிப் போகும். இந்த வங்கி அவர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும். வங்கியின் சார்பில் கொடுக்க வேண்டிய எடை பார்க்கும் மெஷினை அப்ரைசர்களையே வாங்கச் சொன்னதிலிருந்து இந்த அநியாயம் ஆரம்பித்தது. தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களை ஊதியம் கொடுக்க நிர்ப்பந்தித்து, வளர்ந்து, இன்று லட்சக்கணக்கில் டெப்பாசிட் போட வேண்டிய கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை இது.

அப்ரைசர்கள் என்போர் தற்காலிக ஊழியர்கள்.  ஒப்பந்த முறைத் தொழிலாளர்கள் என அந்த சர்க்குலரின் ஆரம்பத்தில் ஒரு அச்சுறுத்தல். டெப்பாசிட் போட முடியாதவர்களை வெளியேற்றி புதிய அப்ரைசர்கள் போடுவது என சர்க்குலரின் முடிவில் ஒரு கெடு. எதிர்த்து அப்ரைசர்கள் எதுவும் பேச முடியாதபடி, செய்ய முடியாதபடி அவர்களை அடிமைகள் போல நடத்துகிறது நிர்வாகம். கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற, ஈவிரக்கமற்ற நடவடிக்கை இது. காலையிலிருந்து மாறி மாறி தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.  பேசும் தோழர்களின் குரல்கள் உடைந்து போயிருக்கின்றன. என்ன பாவம் செய்தார்கள் PGB அப்ரைசர்கள்?

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு PGBEAவும், PGBOUவும் தங்களது கண்டனங்களை தெரிவிக்கின்றன.

3 comments:

  1. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த அப்ரைசர்களையும் சந்தேக லிஸ்ட்டில் வைப்பது போல இருக்கிறது நிர்வாகத்தின் நடவடிக்கை.

    போகிற போக்கைப் பார்த்தால் நாளைக்கு அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட லட்சக்கனக்கணக்கில் இப்படி டெப்பாசிட் வாங்குவது என நிர்வாகம் முடிவெடுக்கும் போலிருக்கிறது.

    தவறு நடக்காமல் இருப்பது எப்படி என்று யோசிப்பதுதான் சரியான பார்வையாக இருக்கும்.ஆனால் தவறு நிச்சயம் நடக்கும் என்பதாகவும் அதற்கு வசூல் செய்வது எப்படி என்பதாகவும் நிர்வாகத்தின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

    ReplyDelete
  2. respected sir
    my name is M.THARANIVEL I HAVE WORKED FROM 2004 TO JANUARY 2010 IN PANDYAN GRAMA BANK IN RAMANATHAPURAM BUT TODAY I AM NOT WORK IN PGB BRANCH OF RAMNAD WHAT IS REASON OF MY TEMPORARY JOB LEAVE IT IN RAMNAD BRANCH MANAGER AND OTHER PERSON REPLACE IN ONE PERSON. .I AM SINCER WORKER OF THAT BANK IN DAY AND NIGHT OUR DUTY RESPONCABLE IS HEAVY LOAD IN THAT BANK. YOUR BANK UNION MEMBER MR. ARULANATHAM IN POTTAGAVAYAL ALSO NABURAJN IN PATTINAM KATHAN AND SIR BALACHANDAR IN MANAMADURAI WILL ASKED ABOUT MY CARACTER AND STRENGTH I AM VERY SUFFERED IN MY LIFE AND MY MIND PLS KINDLY REQUEST YOU AND YPUR UNION MEMBER WILL TALK ABOUT MY PROBLEM SOLVE IT AND AGAIN IN BANK . PRESENTLY I HAVE NO JOB MY CELL NO;8825375538,

    MY LIFE IS VERY AFFECTED NO SOURCE OF MY CARRER . SINCE 2004 TO 2010 LARGE AMOUNT WORK ME THAT WAS WORKING REDUMBTION , TALLY WORk AJL, JLO, SHG, SL OPS, SVT DEPOSIT, SB / CD , SUSPENCE /SUNDRY , CLEARING, MONTH ENDLY ANNUALY , QUARTELY WORK THEN SO LOT OF LOAN DOCUMENT REPARING ME . I HOME YOU POSITIVE REPLY
    THANKUNG YOU SIR ALL OF YOU

    ReplyDelete
  3. As a PGB worker , I feel so bad and guilty after reading this... In most of our PGB branches, we are using the temporary workers's skill but not giving the salary reasonably... very bad. Kindly take steps to confirm all the temporary workers in our bank. It will be a perfect thanks giving to the efforts of the temporary workers and it will enlightens their home.

    ReplyDelete

Comrades! Please share your views here!