15.4.12

Training for messengers

நேற்று, 14.4.2012 அன்று, மதுரையில் வைத்து திட்டமிட்டபடி, மெஸஞ்சர்த் தோழர்களுக்கான training  நடந்தது.

துவக்கி வைத்துப் பேசிய தோழர்.சோலைமாணிக்கம், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று நிர்வாகம் செய்த முயற்சிகளை முடித்து, அனைவரையும் பதவி உயர்வுக்கு அழைக்க PGBEA செய்த முயற்சிகளை தெளிவு படுத்தினார். மாற்று சஃங்கம் PGBWU இவ்விஷயத்தில் நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், ஊழியர்களுக்கு விரோதமாகவும் நிலைபாட்டை எடுத்ததை அம்பலப்படுத்தினார்.

தோழர்.முத்துராமலிங்கம் (நமது தோழர்.போஸ்பாண்டியன் சகோதரர்) அவர்கள் ஆங்கிலத்திலும், நமது PGBEA தோழர்.கோபால் சுப்பிரமணியன் (சாம்பவார் வடகரை கிளை) அவர்கள் கணிதத்திலும் பயிற்சி கொடுத்தனர். காலை 10.30 மணி தொடங்கி மாலை 6.30 வரை நடந்த நிகழ்வில், தோழர்கள் தங்கள் சந்தேகங்கள் பலவற்றைப் பகிர்ந்து கொண்டனர். விளக்கம் பெற்றனர். தோழர்.மாதவராஜ் இறுதியாக, தேர்வு எழுதும் முறை குறித்தும், தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிகள் குறித்தும் யோசனைகள் தெரிவித்தார்.


இந்த பயிற்சி முகாம் சிறப்பாக நடைபெற, ஏற்பாடுகள் செய்த தோழர்.சுரேஷ்பாபு (திருமங்கலம்) அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பயிற்சி முகாமின் காட்சிகள்:











5 comments:

  1. நல்ல முயற்சி. இது தொடர வாழத்துகிறேன்.

    ReplyDelete
  2. தோழர், சங்கரக்குமார்! PGBயில் மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் வந்ததிலிருந்து ஒவ்வொருமுறையும், நாம் இதுபோல் பயிற்சியளித்துக் கொண்டு இருக்கிறோம். இது தொடரும், நிச்சயமாய்!

    ReplyDelete
  3. வணக்கம் தோழர்.பயிற்சிகள் எப்போதுமே மனிதனை புத்துணர்ச்சியுடனும்,தூசி தட்டியும் வைத்திருப்பவையாக/
    பயிற்சி கொடுத்தவர்களுக்கும்,பயிற்சியை ஏற்பாடு செய்த pgbea,ou விற்கும் எனது நல் வாழ்துக்கள்.கூடுதலாக பரிட்சையில் பங்கேற்ற நமது தோழர்கள் எத்தனை பேர்.எப்படி பரிட்சை எழுதினார்கள் எங்கிற தகவலை சொன்னால் இன்னும் கொஞ்சம்சந்தோசப்பட்டுக்கொள்வோம்.நன்றி,வணக்கம்/

    ReplyDelete
  4. வணக்கம் தோழர்.பயிற்சிகள் எப்போதுமே மனிதனை புத்துணர்ச்சியுடனும்,தூசி தட்டியும் வைத்திருப்பவையாக/
    பயிற்சி கொடுத்தவர்களுக்கும்,பயிற்சியை ஏற்பாடு செய்த pgbea,ou விற்கும் எனது நல் வாழ்துக்கள்.கூடுதலாக பரிட்சையில் பங்கேற்ற நமது தோழர்கள் எத்தனை பேர்.எப்படி பரிட்சை எழுதினார்கள் எங்கிற தகவலை சொன்னால் இன்னும் கொஞ்சம்சந்தோசப்பட்டுக்கொள்வோம்.நன்றி,வணக்கம்/

    ReplyDelete
  5. அருமைத் தோழர் முர்த்தி!

    மொத்தம் அழைக்கப்பட்ட 51 தோழர்களில், 15 பேர், பரிட்சை எழுத வரவில்லை.

    ReplyDelete

Comrades! Please share your views here!