இன்று (6.7.2012), PGBEAவும், PGBOUவும் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. சங்கங்களின் சார்பில் தோழர்கள் மாதவராஜ் மற்றும் சங்கரலிங்கம் கலந்து கொண்டனர். நிர்வாகத்தின் சார்பில் சேர்மன் மற்றும் இரண்டு பொதுமேலாளர்களும் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெறும் அலுவலர்த் தோழர்களிடமிருந்து நிர்வாகம் recovery செய்வதுதான் முக்கிய அஜெண்டாவாக இருந்தது. நிர்வாகத்தின் முறையற்ற, விதிகளை மீறிய நடவடிக்கைகளை முன்வைத்தோம். ஒரு அலுவலர் பணிபுரிந்த கடைசி ஆறு வருடங்களில், அவர் பணிபுரிந்த கிளைகளில் நடந்ததாக நிர்வாகம் கருதுகிற தவறுகளை, அந்த அலுவலர் பணி ஓய்வு பெறும் சில நாட்களுக்கு முன்னர் தெரியப்படுத்துவது, அதனைச் சரி செய்யவோ அல்லது தகுந்த விளக்கமளிக்கவோ போதிய அவகாசமும் வாய்ப்பும் அளிக்கப்படாதது, விதிகளை மீறி அந்த அலுவலரிடம் வசூலிப்பது என எல்லாவற்றையும் பட்டியலிட்டோம்.
நிர்வாகத்தரப்பில் இவை யாவற்றிற்கும் தகுந்த பதில் இல்லை. மாறாக, “பல வருஷங்களாக நடந்து வரும் இந்த நடவடிக்கைகள் குறித்து இப்போது ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?” என்பதே அவர்களது பதிலாக இருந்தது. நிர்வாகத்தின் பக்கமிருக்கும் பலவீனங்களையே அவர்களது வார்த்தைகள் வெளிப்படுத்தின. சேர்மன் அவர்கள், “நான் இப்போதுதான் வந்திருக்கிறேன். நீங்கள் சொல்லியதை கவனைத்தில் எடுத்து சரி செய்து வருகிறேன். அக்டோபர் மாதம் ரிடையர் ஆகிறவர்களுக்கு இப்போதே கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது” என்றார். நாம் அந்த நடவடிக்கையை வரவேற்றோம்.
அதே நேரத்தில் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இதுவரை, ஓய்வு பெற்ற அலுவலர்களின் Leave surenderலிருந்து தலைமையலுவலகமே 'இப்படிப்பட்ட recovery’களைப் பிடித்து, மீதியை கிளைகளுக்கு அனுப்பிக்கொண்டு இருந்தது. ஆனால் கல்குறிச்சி கிளையில் இருந்து ரிடையர் ஆன தோழர்.வெங்கட்ராமன் அவர்களிடமிருந்து Recovery செய்ய அந்தக் கிளை மேலாளர் தோழர். போஸ்பாண்டியனை வலியுறுத்தி நிர்வாகம் கடிதம் அனுப்பியது ஒரு விவகாரமான நடைமுறை. தோழர். போஸ்பாண்டியன் கிளை மேலாளர் மட்டுமல்ல, ஒரு சமூகப் பார்வையுள்ள, சமரசமற்ற தொழிற்சங்கத்தின் (PGBOU) தலைவர். அவர் வங்கியின் சேர்மனிடம் தொலைபேசியில், “இந்த நடைமுறையை நான் பின்பற்ற முடியாது’ என்பதை விளக்குகிறார். சேர்மனோ அருகிலிருந்த பொதுமேலாளரிடம் போனை கொடுக்கிறார். தோழர்.போஸ்பாண்டியன் தெளிவாகச் சொல்கிறார். “வங்கியின் ஒழுங்கு நடவடிக்கைகள் எதனையும் பின்பற்றாமல் நடக்கும் இந்த recoveryஐ தான் செய்ய முடியாது” என்பதை விளக்குகிறார். பொதுமேலாளர், “head office instructionஐ obey பண்ணுங்கள்” என அவர் பேச்சை முடித்துக் கொள்கிறார்.
Head office instruction என்றால் யாரும் கேள்வி கேட்கக் கூடாதா? எந்தக் கேள்விகளும் இல்லாமல் அப்படியே அமல்படுத்த வேண்டுமா? அவர்கள் செய்வது விதி மீறல். அதையே ஒரு கிளை மேலாளரும் பின்பற்ற வேண்டுமா? நாம் சரியானது என்றால் பின்பற்றுவோம், தவறு என்றால் சுட்டிக்காட்டுவோம். அதைத்தான் தோழர். போஸ்பாண்டியன் செய்தார். Recovery என்பது ஒரு punishment. அதற்கான staff service regulations பின்பற்றப்பட்டு இருக்கிறதா? சேர்மன் அறிவிக்க வேண்டிய punishmentஐ ஒரு Dept. SM சொல்வது நியாயமா? அதை எப்படி நான் பின்பற்றுவது?” என்பதுதான் அவரது கேள்வி.
இதற்கு பதில் சொல்லத் திராணியற்ற நிர்வாகம், உடனடியாக ஓய்வு பெறும் தோழர்.வெங்கட்ராமனின் Leave surrenderக்கான ibsa அனுப்பாமல் நிறுத்தியது. எவ்வளவு இரக்கமற்ற நடவடிக்கை இது.
இங்கிருந்துதான் நமது பிரச்சினை தீவீரமாகியது. “ஒரு Recoveryஐ Disciplinary Authority சொல்லாதபோது, எப்படி ஒரு மேலாளர் அமல்படுத்துவார்?” இந்தக் கேள்வியை தோழர்.மாதவராஜ் கேட்டபோது, நிர்வாகம் பதில் அற்றுப் போனது. திரும்பவும், “இதையெல்லாம் ஏன் நீங்கள் முன்னரே கேட்கவில்லை” என்று சொன்னதையேச் சொல்லிக்கொண்டே இருந்தது. நாம், “கல்குறிச்சி கிளை மூலம்தான் நிர்வாக நடவடிக்கையின் பரிமாணங்கள் முழுவதும் தெரிய வந்தது. இப்போதாவது நிர்வாகம் சரி செய்துகொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தினோம். ஓய்வு பெறும் அலுவலருக்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும், தேவையான விளக்கங்கள் கேட்கப்பட வேண்டும், அதற்குப் பின்னரே சேர்மன் recoveryக்கு ஆணையிட வேண்டும் என்றோம். ஒழுங்கு நடவடிக்கைகளை தன் இஷ்டம் போல வரையறுத்துக் கொண்டிருக்கும் நிர்வாகம் இப்போது விழித்துக்கொண்டு இருக்கிறது.
ஒன்றை கடைசியாக தெளிவு படுத்திவிட்டு வந்திருக்கிறோம். “இதுவரை நிர்வாகம் செய்த recovery எதுவும் செல்லாது’ என்பதே அது. எப்படி அது செல்லாது என்பதை காலம் தெளிவுபடுத்தும்.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!