பாண்டியன் கிராம வங்கி என்பது பொதுத்துறை வங்கி. அதற்கென்று வழிமுறைகளும், விதிகளும், ஒழுங்குகளும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றன. அவை எல்லோருக்கும் பொதுவானவை. இங்கு பணிபுரியும் யாவரும் அந்த வரையறைகளுக்குள் தங்கள் உட்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும், இந்த வங்கி அவர்களுடைய அப்பன் வீட்டுச் சொத்து போலத் தெரியும் போலிருக்கிறது. கொஞ்சம் பதவியோ, பொறுப்போ அவர்களுக்கு அதிகரித்துவிட்டால் தலை கால் புரியாமல் மிதக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்கு மட்டும்தான் இந்த வங்கி சொந்தமானது போலவும், தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களை அடிமைகள் போலவும் பாவிக்க ஆரம்பிக்கிறார்கள். இது ஒருவகையான குருட்டு மனோபாவம். இப்படிப்பட்டவர்களுக்கு, தாங்கள் வைத்ததுதான் சட்டமாகவும், தாங்கள் சொல்வதை மற்றவர்கள் எந்த மறுப்பும், முணுமுணுப்புமில்லாமல் கேட்டு நடக்க வேண்டும் எனவும் திமிர்த்தனம் பிடித்துக் கொள்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நபராக முளைத்திருப்பவர்தான் கமுதி மேலாளர் திரு.அருணாச்சலராஜன். அந்தக் கிளையின் மேலாளராக இந்த ஸ்கேல் டூ ஆபிஸர் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய நடவடிக்கைகளும், பேச்சுக்களும் ஒருமாதிரியாகி இருக்கின்றன. அவர்தான் MRFடயரை தாங்கி நிற்பதைப் போல கமுதி கிளையையே தூக்கி நிற்பவராக பாவித்துக் கொண்டிருக்கிறார்.
கமுதி கிளையில் பணியாற்றும் பெண் ஊழியரையும், பெண் அலுவலரையும் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை. அவர்களது உழைப்பிற்கு மரியாதை கொடுப்பதில்லை. அவர்களை அவமானப்படுத்தும் விதமாக பேச்சுக்கள் வருகின்றன. அவர்களைத் துன்புறுத்தும் வண்ணம் செயல்கள் இருக்கின்றன. தினமும் 60க்கும் மேற்பட்ட நகைக்கடன்கள், redemptionகள் என கடுமையாக இருக்கும் பணிகளை வரையறுத்துக் கொள்ளவோ, குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்கவோ மாட்டாராம். ‘டெப்பாசிட் பிடிக்கிறேன்’, ‘டெப்பாசிட் பிடிக்கிறேன்’ என அவர் கட்டிக்கொண்டு இருக்கும் வீட்டு வேலைகளைப் பார்க்க அடிக்கடிப் போய் விடுவாராம். காலை 12 மணிக்கு ஒருவர் சில டெப்பாசிட் ரசீதுகளை renewal செய்யத் தந்தால், அவைகளை வாங்கி வைத்துகொண்டு ‘பிறகு வாருங்கள்’ என அந்த மனிதரை அனுப்பி விடுவாராம். சாயங்காலம் சரியாக 4 மணிக்கு மேல்தான், அவைகளை கவுண்டரில் கொடுப்பாராம். எழுந்திரிக்க நேரமில்லாமல் பணிபுரியும் பெண் ஊழியரையும், அலுவலரையும் அதற்குப் பிறகும் வேலை வாங்குவாராம். கேஷ் முடிக்க தினமும் 5.30 அல்லது 6 மணியாகி விடுமாம். மற்ற வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளம்ப வேண்டுமானால் 7 அல்லது 7.30 மணியாகி விடுமாம்.
இப்படி ஒருநாள் அல்ல, இரண்டு நாள் அல்ல, இதையே தினசரி வாடிக்கையாகவும் வழக்கமாகவும் வைத்திருக்கிறாராம். ஒவ்வொருநாளும் எதாவது காரணம் காட்டி பெண் ஊழியரையும், அலுவலரையும் 7 மணி வரை வங்கியில் பணிபுரிய நிர்ப்பந்தப்படுத்துகிறாராம். இதற்கு எதிராக அவர்கள் முணுமுணுத்தால் அவர்களை கடும் தொனியில் பேசுவது, உயரதிகாரிகளிடம் வேலை பார்க்கவில்லை என்று போட்டுக் கொடுப்பது என்று தனது அதிகாரத்தைக் காட்டுவாராம். பெண் ஊழியர்களை அவமரியாதை செய்வதாகவும், துன்புறுத்துவதாகவுமே நாம் இதனைக் கருதுகிறோம். இந்த நாட்டில் பெண்களின் பணிநிலைமை, அவர்களது பணிப்பாதுகாப்பு குறித்து சட்டங்களும், உரிமைகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் துச்சமாக மதித்து காட்டு தர்பார் நடத்துகிறார் கமுதி மேலாளர் அருணாச்சலராஜன்.
10 மணியிலிருந்து 5 மணி வரைதான் வங்கியின் பணி நேரம். அதற்கு முன்னரும், பின்னருமான நேரம் அவரவர்களின் சொந்த நேரம். அதை எடுத்துக்கொள்ள அல்லது பயன்படுத்திக் கொள்ள எவருக்கும் உரிமை கிடையாது. அதன் பொருட்டு ஒரு ஊழியரைத் துன்புறுத்த எந்த அனுமதியும் கிடையாது. இதிலும் பெண் ஊழியர்களுக்கென்று என்று பல பிரத்யேகமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவர்கள் அலுவலகத்திலிருந்து சென்ற பிறகு வீட்டிலும் பணி புரியக் கூடிய சூழல்தான் இந்த சமூகத்தில் நிலவுகிறது. ஓய்வற்ற சூழலில் தங்கள் காலத்தை எதிர்கொள்ளும் அவர்களை மரியாதையுடனும், பரிவுடனும் நடத்த வேண்டியது நாகரீக மனிதர்களின் பண்பும் பொறுப்பும் ஆகும். அருணாச்சலராஜனுக்கு அதெல்லாம் தெரியாது போலும்.
அதையெல்லாம் அவருக்கு தெரிய வைக்க, பித்தத்தை தெளிய வைக்க வேண்டிய கடமை இப்போது நமது சங்கங்களுக்கு வந்திருக்கிறது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இன்னல்களை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்தக் கிளையின் பெண் ஊழியரும், பெண் அலுவலரும் நம்மிடம் முறையிட்டு இருக்கிறார்கள். நாம், அருணாச்சல ராஜனிடம் மிக மரியாதையாகவும், நாகரீகமாகவும் தான் இது குறித்து பேசினோம். ஆனால் அவரோ, “நான் அப்படித்தான் நடந்து கொள்வேன் . இதையெல்லாம் என்னிடம் நீங்கள் பேசக் கூடாது” என்று ஆணவத்தோடு பேசினார். நாம் இராமநாதபுரம் வட்டார மேலாளரிடமும், வங்கியின் பொது மேலாளரிடமும் அவர் குறித்து கண்டங்களைத் தெரிவித்து, உடனடியாக நிலைமைகளைச் சரிசெய்ய சொல்லியிருக்கிறோம். இதுவே அருணாச்சலராஜனுக்கு முதலும், கடைசியுமான எச்சரிக்கை.
இதற்கு மேலும் அவர் இது போன்ற காட்டு தர்பாரை நடத்துவாரேயானால், National commission for womenல் முறையிடவும், சட்ட ரிதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற முற்போக்கு இயக்கங்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம். நிர்வாகம் இதனைப் புரிந்துகொண்டு, உடனடியாகத் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களை மதிக்காத, பெண்களின் நலன் பேணாத, பெண்களின் உரிமைகளை பாதுகாக்காத எந்த சமூகமும் விடுதலை பெற்றதாக கருத முடியாது. இதுதான் இந்த சுதந்திர தினச் செய்தி!
Such arrogant Managers whose insane desire to bite more than what they can chew cause untold sufferings to the staff members and also to customers. But they are appreciated by the Management as star performers and any slight prostest by the staff member or by the association is looked down as a deed against development. There is also punishment transfer awaiting for the defiant staff member. There would be many more heart attacks and cash shortage if this senseless avarice in the name of business is not checked. Atlast you have taken the cudgel . Our lady comrades will be grateful to you for this year Independence Day gift.
ReplyDeletewell said kalai...
Deleteithai oru suya vimarsanamaga paarthal namma melayum thappu irukkirathu thoza, eppa nirvagam velai neraththai neetichu circular pottagalo appave
ReplyDeletekurainthapatcha staffppoda velai seyyira nama athai kadumaiyaga ethirthirukkanum. nama athai seyyalai. pala forumkalla solramathiri velaiyatkal kuraiyakuraiya business palamadangu koodikitte poguthu
Yen sangangal vithipadi mattume velai seivom enkira oru nilaippattai edukka
muyarchikkavillai Appadipatta mudivu pala prachinaikkalukku oru nalla
theervaga amiyalam
ஒரு முக்கியமான கேள்வியையும், ஒரு பிரச்சினையையும் முன்வைத்திருக்கிறீர்கள் தோழரே!
Deleteவேலைநேரத்தைக் கூட்டுவது, அதற்குத் தகுந்த ஆட்களை போடாமல் இருப்பது என்று இந்த அதிகாரவர்க்கம் ஒருபக்கம் நெருக்கடி கொடுக்கிறது. இன்னொரு பக்கம், பிஸினஸ் மற்றும் லாபம் போன்ற இலக்குகளை முன்வைத்து போட்டியான சூழலில் வங்கியின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த வேண்டிய நெருக்கடியையும் கொடுக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய ஒரு இக்கட்டான சூழலில் தொழிலாளி வர்க்கம் இன்று நிறுத்தப்பட்டு இருக்கிறது.
அதாவது, தான் பணிபுரிகிற வங்கியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பையும், தங்கள் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பையும் ஒருசேர செய்ய வேண்டிய நிலைமைக்கு ஊழியர்களும், அலுவலர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
இந்தஆட்டத்தில் ஒன்றை இழந்துதான் ஒன்றை பெற முடியும் என்பதை முக்கிய விதியாக இந்த வியாபார உலகம் முன்வைத்திருக்கிறது. உரிமைகளைப் பேசி, அதற்காகப் போராடினால் வங்கியின் வளர்ச்சி பாதிக்கும். வங்கியின் வளர்ச்சியை மட்டும் பார்த்தோமானால் நாம் நேரம் காலமில்லாமல் வேலை செய்ய வேண்டி வரும்.
இப்போது கூட, மத்திய அரசு ‘லாபம் உள்ள கிராம வங்கிகளுக்கு மட்டுமே பென்ஷன் வழங்க முடியும்’ என்று சொல்கிறது.‘per staff business 5 lacs’ இருந்தால்தான் அந்த கிராம வங்கி புதிய பணி நியமனங்களைச் செய்ய முடியும் என முடிவு செய்திருக்கிறது. இதெல்லாம், வங்கியின் வளர்ச்சியை, லாபத்தை நமது நலன்களுக்கு ஒரு முன்நிபந்தனையாக்கும் சதியாகும். உலகமயமாக்கலின், நவீன பொருளாதார சீர்திருத்தங்களின் அடிநாதம் இதுதான்.
இதில் விநோதமும் விசித்திரமும் என்னவென்றால், வங்கியின் லாபத்திற்கும், வளர்ச்சிக்கும் தொழிலாளிவர்க்கத்தை பொறுப்பாக்குகிற அரசு, அந்த வங்கியின் நிர்வாக முடிவுகளை எடுக்கும் அல்லது தீர்மானிக்கும் அதிகாரத்தை / அதிகாரப் பகிர்வுகளை தொழிலாளிகளிடம் ஒருபோதும் கொடுப்பதில்லை. ஏ.சி அறைக்குள்ளே,அதனை கனவான்களே வைத்திருக்கிறார்கள்.
இந்த சவாலை எப்படி தொழிலாளிவர்க்கம் எதிர்கொள்கிறது என்பதுதான் இன்றைய கேள்வி. அதனை உங்கள் வார்த்தைகளும் எதிரொலிக்கின்றன. நமது நலன்களை பாதுகாத்துக் கொள்ளப் போராடுவதும், நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் தங்களுக்கு ஒரு இடம் கேட்பதும், பணிநேரத்தில் (10 - 5) முழுமையாக வங்கியின் வளர்ச்சியை உறுதி செய்யும் காரியங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதும் நமது செயல்திட்டங்களாகின்றன.
இதை அமல்படுத்துவதில் ஒரு முற்போக்கான, தொலைநோக்குப் பார்வையுள்ள சங்கத்திற்கு பெரும் தடையாய் இருப்பது, அந்த நிறுவனத்தில் அல்லது வங்கியில் இருக்கும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள். ஒரு சரியான பார்வையோடு தொழிலாளர்களைத் திரட்டும் போது, அந்த தொழிற்சங்கங்கள் அரசின் கோட்பாடுகளோடும், நிர்வாகங்களோடும் சமரசம் செய்துகொள்ளும். எதிர்த்து சர்க்குலர் போடும். போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும். ‘விதிப்படி வேலையை’ முறியடிக்கும். நிர்வாகம் அவர்களுக்கு சில காரியங்களை செய்து கொடுத்து ’விசுவாசிகளாக’ பேணும்.
அந்த சங்கங்கள் உரிமைகளைப் பேசாது. டிரான்ஸ்பர்களை மட்டுமே பேசும். அவர்கள் பக்கமும் கணிசமான தொழிலாளர்கள் இருப்பார்கள்.
இலட்சியங்கள், கோட்பாடுகள், கொள்கைகள் சிதைந்து போவது இப்படித்தான். ஊழியர்கள் எப்போது இவைகளை உணர்ந்து ஓரணியில் திரளுகிறார்களோ, அப்போது நிலைமைகளில் முன்னேற்றம் நிச்சயம் ஏற்படும்.
இந்த நம்பிக்கையோடுதான், BEFI, AIRRBEA, PGBEA, PGBOU போன்ற சங்கங்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மேலே சொன்னது பொதுவான தன்மையில், சூழலில் காணப்படும் உண்மைகள்.
Deleteகமுதியில் நிலைமை வேறு. இப்படிப்பட்ட சூழலில் சக ஊழியர்களிடம், அதுவும் குறிப்பாக பெண் ஊழியர்களிடம் பரிவோடு நடந்துகொள்ள வேண்டிய ஒருவர், அவர்களை வேண்டுமென்றே துன்புறுத்துவது மோசமான விஷயம்.
நாம் நிர்வாகங்கள், அரசு, இந்த அமைப்போடு மட்டும் முரண்படுவதில்லை. இப்படிப்பட்ட சில தனிப்பட்ட குணாம்சங்களோடும் முரண்பட வேண்டி இருக்கிறது. அது நம்மை நாமே சுத்தப்படுத்திக் கொள்ளூம் காரியம்.
hello kamuthi manager is one of the manager act as the direction given by the management. CAN YOU HEARD THE VICTIMIZATION TRANSFER GIVEN BY THE MANAGEMENT FOR ASKING VOUCHERS WITH PAYMENT NUMBER SO MANY MANAGER IS AS LIKE THE KAMUTHI MANAGER.WITHOUT PROPER MANPOWER MANAGEMENT TRY TO ESTABLISH THEIR NAME IN THEIR PROMITION LIST.EVERYONE IN OUR BANK TRY TO POLISH THE MANAGEMENT. I THINK SO MANY UNIONIST ALSO TRY TO ADJUST THE MANAGEMENT.PLEASE CONSIDER YOUR WRITINGS BEFORE PUBLISH
ReplyDeleteதோழர்!
Delete’EVERYONE IN OUR BANK TRY TO POLISH THE MANAGEMENT' என்பதை நிச்சயமாய் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோரும் அப்படியல்ல. இன்னும் சொல்லப்போனால் பெரும்பான்மையினர் அப்படியல்ல.
நிர்வாகத்தின் மனம் குளிர நடந்துகொண்டு, அதன் மூலம் டிரான்ஸ்பர், பிரமோஷன்களில் காரியம் சாதித்துக் கொள்வோம் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறோம். இது ஒருவகையான அடிமைத்தனம். இப்படி எல்லா இடங்களிலும் ஒன்றிரண்டு பேர் இருக்கவேச் செய்வார்கள். அவர்களை ‘கருங்காலி’ என்றும் ‘கறுப்புப் புள்ளி’ என்றும் சக தொழிலாளர்கள் கிண்டல் பண்ணியது உண்டு.
இந்த அடிமை மனோபாவத்தைத்தான் டிரான்ஸ்பர்களும், பிரமோஷன்களுமாய் ஊட்டி வளர்க்கிறது நிர்வாகம்.ரூல்ஸ்களில் கறாராய் இருப்பவர்களுக்கு, 10 மணியிலிருந்து 5 மணி வரைதான் வேலைபார்க்க முடியும் என்பவர்களுக்கும் நிர்வாகம் சாதகமாய் டிரான்ஸ்பர் தருவதில்லை. எளிதில் பிரமோஷனும் கொடுப்பதில்லை. இதன்மூலம், நிர்வாகம் தன்னை அனுசரித்துப் போகிறவர்களுக்கு மட்டுமே தனது அருள் பார்வை கிட்டும் என அறிவிக்கிறது. கியூ வரிசையில் முன் நிற்பவர்களை விட்டுவிட்டு, பின்னால் நிற்பவர்களை அழைத்து டிக்கெட் கொடுக்கிறது. இதனால் வரிசையை விட்டு விலகுகிறவர்கள் பலராய் மாறுகிறார்கள். இப்படி அடிமைத்தனத்தை ‘deunionised mentality'யாக வடிவமைக்கிறது நிர்வாகம்.
ஒழுங்குகள், வரம்புகள், விதிகள் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடப்பட்டு, இந்த deunionised mentalityயோடு ஒரு கூட்டம் உருவாகிறது. வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கென்று ஒரு தொழிற்சங்கம் ஏற்படுத்தப்படுகிறார்கள். இதனால்தான் அவர்களை நாம் தொழிற்சங்க வியாதி என அழைக்கிறோம்.
கேள்வி கேட்காமல், போராடாமல் சலுகைகள் பெற விரும்புபவர்கள் அதன் பின்னால் திரளுகிறார்கள். அவர்களுடன் நாம் தொடர்ந்து கருத்து ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் உரையாடி, அதிலிருக்கும் மனசாட்சி உள்ளவர்களை வெல்வதற்கும், unionised ஆக்குவதற்கும் முயற்சிக்கிறோம். இது ஒரு தொடர் இயக்கம்.
இதன் ஒரு பகுதியல்ல, ஒரு புள்ளிதான் கமுதிக் கிளையின் பிரச்சினையும். அங்கு ஒருவர் விதிகளை மீறி வேலை பார்க்கச் சொல்கிறார். இரண்டு பேர் மறுக்கிறார்கள். ஒருவர் de-unionsed ஆக இருக்கிறார். இருவர் unionised ஆக இருக்கிறார்கள். நாம் அதில் சரியான நிலைபாடு எடுத்து அந்த இருவர் பக்கம் நின்று, உண்மையை உரக்கப் பேசுகிறோம். இப்போது பலர் பேச ஆரம்பிக்கிறார்கள். தங்கள் கிளைகளிலும் இது போன்ற பிரச்சினைகள் இருப்பதை தயக்கமின்றி வெளிப்படுத்த ஆரம்பிகிறார்கள். இதுதான் ஒரு சரியான தொழிற்சங்கம் செய்ய வேண்டிய பணி. செய்திருக்கிறோம்.
கமுதிக் கிளையின் பிரத்யேகத் தன்மை, அந்த இருவர் பெண்களாய் இருப்பது.அதனால்தான் நாம் கூடுதல் அழுத்தமாகச் சொல்கிறோம்.
இந்தப் பதிவைப் படித்த பிறகு, பாண்டியன் கிராம வங்கி மற்றும் பல்லவன் கிராம வங்கித் தோழர்கள் சிலர் தயக்கங்களை உடைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.தத்தம் கிளைகளில் நடக்கும் அநியாயங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்கின்றனர். அவை வருத்தமளிக்கின்றன, கோபம் வரவழைக்கின்றன. ஒரு கிளையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு வரும் கடிதங்களைக் கூட அந்தக் கிளையின் மேலாளர் திறந்து பார்த்துத்தான் கொடுக்கிறாராம். நாகரீக மனிதர்களின் செயலா இது?
ReplyDelete