14.8.12

BEFI - TN 10th conference



இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் - தமிழ்மாநில மாநாடு (BEFI - TN) ஆகஸ்டு மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் சென்னையில்,  உ.ரா.வரதராஜன் அரங்கத்தில் (பத்மாராம் அரங்கம், கோடம்பாக்கம்) நடைபெற்றது. அதன் உறுப்புச் சங்கங்களில் ஒன்றாகிய PGBEA சார்பில் 10 பிரதிநிதிகளும் இரண்டு பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.


மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்து, மாநாட்டிற்கு சம்மேளன மாநில தலைவர் தி.தமிழரசு தலைமை தாங்கினார். வரவேற்புக்குழு தலைவர் எம்.துரைப்பாண்டியன் வரவேற்று பேசினார்.


சிஐடியு தமிழ்மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாரன் வாழ்த்திப் பேசினார்.  “புதிய சலுகைகள் பெறுவது என்பதற்கு மாறாக தற்போதுள்ள உரிமைகளை பாதுகாக்க போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. புதிதாக ஊதிய உயர்வு அளித்தாலும், வாழ முடியாத அளவிற்கு மத்திய மாநில அரசுகள் விலை வாசியை உயர்த்திக் கொண் டிருக்கின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் கோபத்தை ஒருங்கிணைக்கும் மையமாக அமைய வேண்டும்.” என்றார்.


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய போராட்டங்கள், சந்தித்த தாக்குதல்கள், பெற்ற வெற்றி கள் குறித்து மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் சே.க. பொன்னுத்தாய், “தமிழகத் தில் 81 வகையான தீண்டாமை கொடுமை நிலவுகிறது. செல்போன் ரிங்டோன் வைத்துக் கொள்வதிலும், நாய் வளர்ப்பதிலும் கூட தீண்டாமை நிலவுகிறது. பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களை ஓட்டிக் கொண்டு அல்ல, தள்ளிக் கொண்டுக்கூட ஊருக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் பள்ளியிலேயே நிற்கின் றன” என்றார். “தமிழகத்தில் அண்மை யில் 28 கவுரவ கொலைகள் நடந்துள்ளன. திண்டுக்கல்லில் ஒரு பெண் காவலரை கவுரவ கொலை செய்தவர்களை அரசு கைது செய்யாமல் உள்ளது. நுண்கடன் நிறுவனங்களால் பாதிக்கப் பட்டு, 68 பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். வங்கிகள் நேரடியாக சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்காமல், நுண்கடன் நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குவதாலேயே இத்தகைய தற்கொலைகள் நடக்கின்றன. வங்கி ஊழியர்கள் தங்களது பொதுத்துறை பாதுகாப்பு, பொருளாதார கோரிக்கைகளோடு, சமூக ரீதியான கோரிக்கைகளையும் இணைத்து போராட வேண்டும்” என் றும் அவர் கூறினார்.


BEFI அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் பிரதீப் பிஸ்வாஸ் பேசுகையில், “ புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து வங்கி ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளில் 29 வேலை நிறுத்தங்களை நடத்தியுள்ளனர். அனைத்து வேலை நிறுத்தங்களிலும் பெஃபி தனது பங்களிப்பை செய்துள் ளது. இதன் காரணமாக பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் 2008ல் ஏற்பட்ட உலக நிதி நெருக்கடி இந்திய நிதித்துறையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை; எந்த வங்கியும் திவாலாகவில்லை என்றார். ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, இடதுசாரிகளின் ஆதரவில் இருந்த போது, வங்கி சட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியவில்லை. தற்போது நிலைமை மாறிவிட்டதால் வங்கி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர துடிக்கிறது. நேரடி நியமனங்கள் மூலம் ஊதிய முரண்பாட்டை உருவாக்கி, சங்க உணர்வுகளை சீர்குலைப்பதே கந்தேல்வால் குழுவின் பரிந்துரையாக உள்ளது. இந்தச் சூழலில் வங்கி ஊழியர்கள் மக்களிடம் செல்ல வேண்டும். மக்கள் ஆதரவோடுதான் பொதுத் துறைகளை பாதுகாக்க முடியும். பத்தாவது இரு தரப்பு ஊதிய ஒப்பந்தத்திற்கான கோரிக்கை பட்டியலை இம்மாத இறுதிக்குள் ஐபிஏ-விடம் அளிக்கப்படும் ” என்றார்.  “வங்கி சீர்திருத்தம் என்ற பெயரால் நடைபெறும் சீர்குலைவு நடவடிக்கை களை எதிர்த்து அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றி ணைந்துஆகஸ்ட்22,23ஆகிய தேதிகளில் அறிவிக்கப்பட் டுள்ள வேலை நிறுத்தத்தில் அனைத்துத் தரப்பு ஊழியர்களும் பங்கேற்க வேண்டும்” என   அறைகூவல் விடுத்தார்.


தொடர்ந்து பொதுச்செயலாளார் அறிக்கையும், வரவு செலவு அறிக்கையும் முன்வைக்கப்பட்டு பிரதிநிதிகள் விவாதம் தொடங்கியது. 43 மூன்று தோழர்கள் கலந்துகொண்டு ஆரோக்கியமான விவாதங்களை முன்வைத்தனர். தத்தம் அரங்கு சார்ந்த பிரச்சினைகள், பணி நெருக்கடி, ஆள் பற்றாக்குறை, இருதரப்பு ஒப்பந்தம், கண்டேல்வால் கமிட்டி பரிந்துரைகள் குறித்த கருத்துக்கள் முன்னுக்கு வந்தன. PGBEAவிலிருந்து தோழர்கள் அண்டோ கால்பட்டும், சட்டையப்பனும் விவாதங்களில் கலந்து கொண்டனர்.


இலங்கத் தமிழர் அதிகார பகிர்வு, அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மீறப்பட்ட மனித உரிமைகள் குறித்த விசாரணைக்கு இந்திய அரசு ராஜீய ரீதியில் நிர்ப்பந்தம் செய்ய ,  கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்த வலியுறுத்தி,  கண்டால்வால் கமிட்டி பரிந்துரைகளை முற்றிலுமாக நிராகரித்து, நுண்கடன் நிதி நிறுவன மசோதாவை கைவிடக் கோரி, புதிய பணி நியமனங்கள் BSRB மூல நடத்தக் கோரி, தொழிற்சங்க உரிமைகளை பறிப்பதற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பொதுச்செயலாளர் தொகுப்புரைக்குப் பின் புதிய மாநிலக் கமிட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது. தலைவராக தோழர்.தமிழரசு  அவர்களும், பொதுச்செயலாளராக தோழ.சி.பி.கிருஷ்ணன் அவர்களும், பொருளாளராக தோழர்.சண்முகம் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். PGBEAவிலிருந்து தோழர். மாதவராஜ்  office bearerஆகவும், தோழர்.சுப்பிரமணியன், அண்டோ கால்பட் ஆகியோர் கமிட்டி மெம்பர்களாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.



2 comments:

  1. அடேங்கப்பா....என்ன வேகம்..எத்தனை இரத்தினச் சுருக்கமாக, அதே நேரம் நடைபெற்ற மாநாட்டின் சிறப்பம்சங்களை கலந்து கொள்ள இயலாதோர் கூட உணர்ந்து சிலிர்க்கும் வண்ணம் வழங்கி இருக்கிறீர்கள்..எப்படி அய்யா இப்படி கலக்க முடிகிறது...
    அனந்த கோடி வாழ்த்துக்கள்..

    பாண்டியன் கிராம வங்கி தோழர்களின் விவாதம் சிறப்பாக அமைந்திருந்தது..
    அண்டோ கால்பட் அசாத்தியங்களை நம்புகிறவன், ஏனெனில் நான் எதார்த்தவாதி
    என்று சங்க ஸ்தாபனம் குறித்த கரிசனத்தோடு பேசியது வரவேற்பைப் பெற்றது..


    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  2. மாநாட்டுக்க்கு வரவில்லை.ஆனால் மாநாட்டில் கலந்து கொண்ட திருப்தியை வழங்கி விட்டு சென்றுள்ளது பதிவு.மாநாட்டில் தேர்வான பொறுப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கொஞ்சம் கூடுதலாக pgbea தோழர்களுக்கு/

    ReplyDelete

Comrades! Please share your views here!