10.8.12

PGBEA - PGBOU circular 11/2012 dt 10.08.2012



சுற்றறிக்கை எண் : 10/2012  நாள்: 10.08.2012

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

5.8.2012 அன்று மதுரையில் ‘பென்ஷன் சிறப்புக் கருத்தரங்கம்' அர்த்தபூர்வமாகவும், ஆரோக்கியமானதாகவும் நடந்து முடிந்தது. முன்னூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அதுவும் முழுக்க முழுக்க PGBEANS!  AVKC மஹாலின் அந்த பெரிய அரங்கு முழுவதும் தோழர்கள் நிரம்பியிருந்தனர். நம்மிடமிருந்து ஓய்வு பெற்ற தோழர்கள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். பல்லவன் கிராம வங்கித் தோழர்களும் வந்திருந்தனர்.  இருபத்தைந்துக்கும் மேற்பட்ட பெண் தோழர்கள் கலந்துகொண்டதும் முக்கியமான, குறிப்பிடத்தக்க விஷயம்.  சமீப காலங்களில் மிக அதிகமான தோழர்கள் கலந்துகொண்ட ஒரு விசேஷமான நிகழ்ச்சியாக இதனை குறிப்பிடலாம்.

கருத்தரங்கத்திற்கு வந்திருந்த அனைவரையும் தோழர்.சோலைமாணிக்கம் (பொதுச்செயலாளர், PGBEA) வரவேற்றுப் பேசினார். தோழர்.மாதவராஜ் (தலைவர்-PGBEA) தலைமை தாங்கினார். ஏற்கனவே பெற்றிருக்கும் சலுகைகளை இந்த அரசு தொழிலாளர்களிடமிருந்து ஒவ்வொன்றாக பறித்து வருகிற வேளையில், கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் பென்ஷனை பெற்றுத்தந்த அற்புதத்தை AIRRBEA நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. போராடிப் பெற்றவர்களுக்குத்தான் அந்த பலனின் அருமை தெரியும். அதைக் கொண்டாடத் தெரியும். அப்படி கொண்டாடுவது கருத்தரங்கத்தின் முதல் நோக்கமாகும்.  வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வழங்க அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் வணிக வங்கியில் பென்ஷன் எப்படிக் கொடுக்கப்படுகிறது என்கிற அடிப்படை விஷயங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதுதான் இந்தக் கருத்தரங்கத்தின் இரண்டாவது நோக்கமாக இருக்கிறது என்று கருத்தரங்கின் பின்னணி தெளிவுபடுத்தப்பட்டது.

புதிய சேர்மன் பொறுப்பேற்ற பிறகு ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி வருவதை நினைவுகூர்ந்து, இந்த உற்சாகமான வேளையில், இங்கு பணிபுரியும் அலுவலர்களையும், ஊழியர்களையும் வங்கி நிர்வாகம் ஒரு friendly approachயுடன் motivate  செய்ய வேண்டும்  என பாண்டியன் கிராம வங்கியின் சேர்மனை வாழ்த்திப் பேச அழைத்தோம். பென்ஷன் நனவாகியிருப்பதற்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட சேர்மன், நமது வங்கியில் பணிபுரியும் அனைவரும் திறமைகளும், ஈடுபாடும் மிக்கவர்கள் என்றும், அவர்கள் மூலம் நமது வங்கியை தேசிய அளவில் முதன்மையான வங்கியாக உயர்த்திக்கொள்ள முடியும் என உறுதிபட தெரிவித்தார். நட்புமிக்க,  நம்பிக்கையான வாழ்த்துரையாக சேர்மனின் பேச்சு அமைந்திருந்தது. தொடர்ந்து இரு பொதுமேலாளர்களும் சுருக்கமாக தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அடுத்ததாக PGBEA மற்றும் PGBOUவின் சார்பில் 'a dream comes true'  என கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் இந்தப் புத்தகத்தினை தொகுத்த PGBEAவின் AGS தோழர். அண்டோ கால்பட்டினையும், வடிவமைத்த தோழர்.மாதவராஜையும் தோழர்.சோலைமாணிக்கம் பாராட்டிப் பேசினார். AIRRBEA(TN) organising secretary தோழர்.T.கிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட தோழர்.புளுகாண்டி அவர்கள் பெற்றுக்கொண்டார்.  Retired staff சங்கத்தின் adhoc கமிட்டிக் கன்வீனர் தோழர்.சந்திரசேகரன், தங்களை ஒருங்கிணைத்து சங்கமாக்கும் முயற்சியில் ஈடுபட்ட PGBEAவையும், PGBOUவையும் பாராட்டினார். சரியாக இந்த நேரத்தில் பென்ஷன் கோரிக்கை நிறைவேறி இருப்பது சந்தோஷமளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, வணிக வங்கியில் பென்ஷன் கோரிக்கையின் வரலாற்றை மிக சுருக்கமாகவும், தெளிவாகவும் முன்வைத்தார் BEFI-TN மாநிலச் செயலாளர் தோழர்.C.P.கிருஷ்ணன்.  வணிக வங்கியில் இருக்கும் பெரிய சங்கங்கள் செய்துகொண்ட சமரசங்களையும், அவைகளை அம்பலப்படுத்தி BEFI சார்பில் நடத்தப்பட்ட பிரச்சாரங்களையும் ஒவ்வொரு காலக்கட்டத்தோடும் நினைவு கூர்ந்தார். அதன் விளைவாக இன்று பென்ஷன் இரண்டாவது ஆப்ஷனாக நிறைவேறி இருப்பதையும், அதேநேரம் புதிதாக பணிக்குச் சேர்பவர்களுக்கு வாய்த்திருக்கும் ‘புதிய பென்ஷன்' திட்டத்தில் இருக்கும் குறைகளையும் சுட்டிக்காட்டினார். மேலும் பென்ஷனுக்கான போராட்டங்கள் தொடரும் என நம்பிக்கையோடு அவரது பேச்சு அமைந்திருந்தது.

கர்நாடகாவிலிருந்து வந்திருந்த AIRRBEA Organising secretary தோழர். நாகபூஷண் ராவ், கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் என்னும் கோரிக்கை எப்படி வெற்றி பெற்றது என்பதை புள்ளி விபரங்களோடு சொன்னார்.

பென்ஷன் என்பது ‘equal pay for equal work' என்னும் நமது கோரிக்கையோடு சம்பந்தப்பட்டது, ஒரு முப்பது வருட வரலாறும் பின்னணியும் கொண்டது என்பதை விளக்கினார். வணிக வங்கிக்கான ஊதியம் நமக்கும் வழங்கப்பட்ட போதே, வணிக வங்கியின் பென்ஷன் திட்டம் நமக்கு அமல்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். அரசு செய்த சதியின் விளைவாக அந்தக் குறை இருந்ததையும் அதை எதிர்த்து நடத்திய போராட்டங்கள், வழக்குகள் எல்லாவற்றையும் தொகுத்தார். கர்நாடகாவில் நமது சங்கங்களின் முயற்சியால் AIRRBEA நடத்திய வழக்கின் தீர்ப்பு, பென்ஷனுக்கான நமது நெடிய பயணத்தில் முக்கியமான மைல்கல் என்பதை உணர்த்துவதாக அவரது கருத்துரை அமைந்திருந்தது.

கருத்தரங்கத்தின் முதல் பகுதி நிறைவடைந்தது . அனைவரும் ரசித்து, அருமையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மதிய உணவருந்தினர். எங்கும் பேச்சும், உற்சாகமான விசாரிப்புகளும், சிரிப்பும் என கோலாகலமாய் காட்சியளித்த அனுபவம் அது.

கருத்தரங்கத்தின் இரண்டாவது பகுதியாக, வணிக வங்கியில் இருக்கும் பென்ஷன் திட்டம் பற்றி தோழர்.C.P.கிருஷ்ணன் விளக்க ஆரம்பித்தார். ஏறத்தாழ ஒரு வகுப்பு போலவே இருந்தது. அதே நேரம் சுவாரசியமாகவும் இருந்தது. தோழர்கள் அனைவரும் ஆர்வத்துடன் குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். ‘பென்ஷன் திட்டம் ' என்பது எவ்வளவு விபரங்களும், விரிவான வரையறைகளும் கொண்டது என்பதை தோழர்கள் புரிந்துகொண்டனர்.  தொடர்ந்து பலரும் சந்தேகங்கள், கேள்விகள் எழுப்ப அனைத்திற்கும் பொறுமையாகவும், தெளிவாகவும் விளக்கமளித்தார் தோழர்.சி.பி.கிருஷ்ணன்.  PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் இறுதியாக நன்றியுரை கூற கருத்தரங்கம் நிறைவடைந்தது.

வந்திருந்த அனைவருமே கருத்தரங்கத்தைப் பாராட்டினர். பல்வேறு வார்த்தைகளில், தொனிகளில் வெளிப்பட்டு இருந்தாலும் அவர்கள் அனைவருமே சொன்னதன் அர்த்தம் " ரொம்ப நல்லா இருந்தது!" என்பதுதான்.  "இதை PGBEAவாலும், PGBOUவாலும்தான் செய்ய முடியும்' என்பதையும் சேர்த்தே சொன்னார்கள்.

தோழர்களே, பென்ஷன் குறித்த புத்தகம் வேண்டுவோர், சங்கத்தலைமையினை தொடர்பு கொள்ளுங்கள். அனுப்பி வைக்கிறோம்.


நிறைவேறிய கோரிக்கைகளும், நிலுவையிலிருக்கும் கோரிக்கைகளும்!

புதிய சேர்மன் பொறுப்பேற்ற பிறகு Halting allowance for holidays, Exservicemen pay fitment ஆகிய இரு கோரிக்கைகளும்ஏற்கனவே நிறைவேற்றப்பட்டன. சென்ற வாரம் நடந்த போர்டு மீட்டிங்கில் அனைவருக்கும் newspaper allowance  கொடுப்பதற்கும் முடிவாகி இருக்கிறது. இவையெல்லாம் நாம் ஏற்கனவே நீண்ட காலமாக முன்வைத்த கோரிக்கைகள். விடாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் விளைவாக இப்போது நிறைவேறி இருக்கின்றன. நிர்வாகத்தின் இணக்கமான அணுகுமுறையை நாம் இந்த நேரத்தில் பாராட்டுகிறோம்.

அதே வேலையில் Leave regularisation of 61 officers and trade union leaders, Recovery from retiring staff, Regularisation of Temporary employees, Fuel expenses Reimbursement, Reimbursement of lodge bill for officers as per sponsor Bank, Enhancement of Staff Housing loan, Enhancement of Staff vehicle loan, Hill and fuel allowance to Perumalmalai branch, Computer operator allowance to 2008 batch Office Assistant Recruitees, Maternity leave with pay to women employees joined in the year 2008, Transfer policy, Revamping of Head Office  என இன்னும் பல கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதையும் நினைவுபடுத்துகிறோம்.


நிர்வாகத்தின் இணக்கமான நடவடிக்கைகள்:

அண்மையில் சேர்மன் தலைமையில் நடந்த நமது வங்கியின் உயரதிகாரிகள் கூட்டம் குறித்து கேள்விப்பட்ட விஷயங்கள் பாஸிட்டிவ்வாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கின்றன. பதவி ஓய்வு பெறுகிற சூழலில், அலுவலர்களிடமிருந்து Recovery செய்வதிலும், ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பதிலும் ஒரு முறையான பாலிசி வேண்டும் என்று விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒழுங்கு படுத்த ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு இணக்கமான, வெளிப்படையான சூழலை ஏற்படுத்த வேண்டும் என சேர்மன் வலியுறுத்தியதாகவும் தெரிய வருகிறது.

நாம் இதனை வரவேற்கிறோம்.  இது ஒரு ஆரோக்கியமான ஆரம்பமாக இருக்க வேண்டும், மேலும் தொடர வேண்டும் என விரும்புகிறோம்.

Officers Transfers:

ஏற்கனவே officers transfers விஷயத்தில் நிர்வாகம் கடைப்பிடித்த காலதாமதத்தை விளக்கியிருந்தோம். செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு போடக்கூடிய டிரான்ஸ்பர் ஆர்டர்களை இப்போதே போட்டு, system generated NPA அந்தந்தக் கிளைகளில் சரியானதும், ரிலீவ் ஆவதாக ஏற்பாடு வேண்டும் என நமது நிலைபாட்டைத் தெளிவுபடுத்தி இருந்தோம். ஆனால் நிர்வாகம் நமது கருத்தை ஏற்றுக்கொள்வதில்லையென முடிவெடுத்திருப்பதாக அறிகிறோம். இது துரதிர்ஷ்டவசமானது என்றே கருதுகிறோம். அலுவலர்கள் மத்தியில் இது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம்.


Computer Operator allowance to the  probationary period of 2008 batch recruitees:

கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு நமது வங்கியில் 2006ம் வருடத்திலிருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.  2008ல் பணிக்குச் சேர்ந்த office assistantகளுக்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு கொடுக்கவில்லை நிர்வாகம். நாம் அப்போதே நிர்வாகத்துடன் இது குறித்து பேசினோம். probationary periodல் வழங்க வேண்டியதில்லை என்று ஒரு காரணத்தைச் சொல்லியது.  அதே வருடம் பல்லவன் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு அவர்களது probationary periodல் கொடுக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டினோம். RTI  Act  மூலம், பல்லவன் கிராம வங்கியில் office assistantsக்கு probationary periodல் computer operator allowance  கொடுக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்களைப் பெற்று நிர்வாகத்திடம் கொடுத்தோம். அப்போதும் நிர்வாகம் அசையவில்லை.

நமது வங்கியிலேயே, 2006ம் வருடத்திலிருந்து 2012 வருடம் வரை, மெஸஞ்சர்களாயிருந்து எழுத்தர்களாக பதவி உயர்வு பெற்ற அனைவருக்கும் அவர்களது probationary periodல் computer operator allowance வழங்கப்பட்டு இருப்பதை நமது தரப்பு வாதங்களாக முன்வைத்தோம். 2011ல் பணிக்குச் சேர்ந்த புதிய office assistantsக்கு அவர்களது probationary periodல் computer operator allowance கொடுக்கப்பட்டு உள்ளது. அதையும் நிர்வாகத்திடம் சொன்னோம். ஆனால் வருடங்கள் பலவாகியும், நிர்வாகம் இந்தக் கோரிக்கை குறித்து, ‘ஐ.ஓ.பிக்கு எழுதினோம்', ‘ஐ.ஓ.பி மறுத்து விட்டது' என்பதையே சொல்லி வந்தது.

இப்போது நமது தரப்பு நியாயங்களை முன்வைத்து ALC முன்பு ஒரு தொழில் தாவா ஏற்படுத்தி இருக்கிறோம். கடந்த 7.8.2012 அன்று மதுரையில் வைத்து Assistant Labour Commissiner (C) முன்பு பேச்சுவார்த்தை நடந்தது. நிர்வாகத் தரப்பில் General Manager (A) மற்றும் PAD Senior Manager கலந்து கொண்டனர். நமது தரப்பில் தோழர்கள் சோலைமாணிக்கம் மற்றும் மாதவராஜ் கலந்து கொண்டனர். நமது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், வாதங்களுக்கும் பதிலளிக்க நிர்வாகத்திற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. அடுத்த விசாரணை 24.8.2012க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

2008ல் பணிக்குச் சேர்ந்த office assistant தோழர்கள் நம்பிக்கையோடு இருங்கள். உங்களுக்கு நியாயமாக கொடுக்கப்பட வேண்டிய சலுகையை PGBEA  நிச்சயம் பெற்றுத் தரும்.

Over time allowance for 31.3.2012 and 7.4.2012:

இந்த வருடம் 31.3.2012 மற்றும் 7.4.2012 ஆகிய இரு தினங்களும், சனிக்கிழமையாக இருந்த போதும், RBI அறிவுறுத்தலுக்கு ஏற்ப நிர்வாகம் நமது வங்கிக்கும் Full working day என அறிவித்தது. நமது ஊழியர்களும், அலுவலர்களும் அந்த இரு தினங்களுக்கும் முழுநாள் வேலை பார்த்திருக்கின்றனர். மற்ற வங்கிகளில் அதற்கான ஓவர்டைம் அலவன்சு கொடுக்கப்பட்டு விட்டது. நமது வங்கியில் வழக்கம் போல காலதாமதம் செய்யப்படுகிறது. அந்த இரு தினங்களுக்கும் நாம் overtime allowance  கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறோம். இதற்கும் ஐ.ஓ.பியில் கேட்க வேண்டும் என்கிறது நிர்வாகம். ஏற்கனவே நமது வங்கியில் 10.04.1998 அன்று, சனிக்கிழமையன்று முழுநாள் பணி நடந்து, அதற்கு 9.6.1998 அன்று நமது நிர்வாகம் ஓவர்டைம் அலவன்சு கொடுக்க சர்க்குலர் போட்டு இருப்பதை சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தடவையும் ஐ.ஓ.பியிடம் கேட்க வேண்டியதில்லை என நாம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறோம். தொடர்ந்து முயற்சிப்போம். விரைவில் நாம் இந்த ஓவர்டைம் அலவன்சை பெறுவோம்.


Pay during Maternity Leave:

2008ல் பணிக்குச் சேர்ந்த பெண் தோழர்கள் ஒரிருவருக்கு நமது இரு சங்கங்களும் கடுமையாகப் போராடிய பிறகு maternity leave வழங்கப்பட்டது நினைவிலிருக்கும். ஆனால் அந்தத் தோழர்களுக்கு அதற்குண்டான ஊதியம் மூன்று மாதங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. மேலும் Probationary periodம் extend  செய்யப்பட்டு இருக்கிறது. இது நமது சர்வீஸ் விதிகளுக்கும், Maternity Benefit Actக்கும் புறம்பானது. இதனால் அவர்களது இன்கிரிமெண்ட் தேதி தள்ளிப் போய் இருக்கிறது. சீனியாரிட்டியில் அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். நிர்வாகம் உடனடியாக அந்தத் தோழர்களுக்கு maternity leave periodக்குரிய salary கொடுக்க வேண்டும். இன்கிரிமெண்ட் தேதி, சீனியாரிட்டி யாவையும் சரிசெய்ய வேண்டும்.


Hill / Fuel allowance for Perumalmalai Branch:

கொடைக்கானலில் திறக்கப்பட்டுள்ள நமது வங்கியின் பெருமாள்மலை என்னும் கிளை கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் இருக்கிறது. 9 வது இருதரப்பு ஒப்பந்தப்படி 1500 அடிக்கு மேல் வங்கிக்கிளை இருந்தால், அந்தக் கிளையில் பணி புரிகிறவர்களுக்கு அடிப்படைச் சம்பளத்தில் 6 சதவீதம் அல்லது ரூ.510/- (எது குறைவோ) ஒவ்வொரு மாதமும் அலவன்சாக வழங்கப்பட வேண்டும். நாம் இரண்டு மாதங்களுக்கு முன்பு சேர்மனிடம் நடந்த பேச்சுவார்த்தையில் இதனை முன்வைத்தோம். சேர்மன் உடனடியாக ஒப்புக்கொண்டார். ஆனால் இன்று வரை அந்த அலவன்சு கொடுக்கப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை அந்தக் கிளையில் பணிபுரிகிறவர்கள் பெற்றுத் தர வேண்டுமாம். இது நமது வேலையல்ல. அதற்கான ஆதாரங்களைப் பெறுவதும், உடனடியாக வழங்க வேண்டியதும் நிர்வாகத்தின் பணியே.


BEFI - TN  மாநாடு:

வருகிற ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் சென்னையில் Bank Employees Federation of Indiaவின் தமிழ் மாநில மாநாடு நடக்க இருக்கிறது. வங்கி ஊழியரின் ஒற்றுமைக்கான போராட்டத்தையும், போராட்டத்திற்கான ஒற்றுமையையும் இலட்சியமாகக் கொண்டு வரும் ஒரு அமைப்பின் மாநில மாநாடு இது. இந்திய வங்கி ஊழியர் இயக்கத்தில் பிரச்சினைகளை சமரசமற்று பார்க்கவும், போராடவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இருக்கும் ஒரு மகத்தான அமைப்பின் மாநாடு இது. நமது சங்கங்களை வழி நடத்தும், ஆதரவளிக்கும் ஒரு இயக்கத்தின் முக்கிய நிகழ்வு இது. PGBEAவிலிருந்து 10 பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும். PGBOUவிலிருந்து சிறப்புப் பிரதிநிதிகளாக இருவர் கலந்து கொள்ளவும் அழைப்பு வந்திருக்கிறது. நமது தோழர்கள் செல்கின்றனர்.


தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                 (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                          பொதுச்செயலாளர் - PGBOU

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!