அன்பிற்கினிய தோழர்களே! வணக்கம்.நாம் இந்த வங்கியின் நலன் கருதியும்,மேலும் நமது கோரிக்கைகளை பரீசிலித்து அதை நிறைவேற்றும் பொருட்டு ஒருகால அவகாசத்தை நமது நிர்வாகம் நம்மிடம் கேட்டுக்கொண்டதாலும் நமது போராட்டங்களை ஒத்திவைத்திருந்தோம்.ஆனால் தோழர்களே! இந்த கால இடைவெளியில் நாம் எதிர்பார்த்தது போல் இங்கு எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் இந்த நிர்வாகம் ஏற்படுத்திவிடவில்லை மாறாக இந்த முறை பொது மாறுதல்கள் கூட வழக்கத்திற்கு மாறாக இன்னும் போடப்படாமலே உள்ளது.அதேபோல் RECRUITMENT குறித்தும்,PROMOTION குறித்தும் எந்தவித அக்கறையும் இல்லாமல் வழக்கம்போல் வணிக இலக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவது நமக்கு கவலையளிக்கிறது.இது குறித்து நமது செயற்குழு கூட்டி விவாதித்து விரிவாகவும்,தெளிவாகவும் அடுத்த சுற்றறிக்கையில் தெரிவிப்போம். தோழர்களே! கடந்த ஆகஸ்ட் முப்பதாம் தேதி கொல்கத்தாவில் நமது அகில இந்திய சங்கத்தின் மத்திய கமிட்டி கூடியது.அதில் இன்று கிராம வங்கிகளில் அதிகரித்துள்ள பணிச்சுமை குறித்து ஆழமான விவாதங்கள் ஏற்பட்டது.கிராம வங்கிகளின் மனிதவளமோ எண்பதுகளின் இறுதியில் உள்ளது போலவும்....ஏன்?அதைவிட குறைவாகவும் தான் இப்போதும் பல கிராமவங்கிகளில் உள்ளது.ஆனால் வணிகம் ? பலநூறு மடங்குகள் உயர்ந்துள்ளது.இந்த முரண்பாடுகளால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது நமது தோழர்கள் தான்.இன்று புதிதாக NREGA,OLD AGE PENSION போன்ற அரசுத் திட்டங்களால் நமது பணிச்சுமை வெகுவாக அதிகரித்துள்ளது.இப்படியொரு சூழலில் வெளிவந்துள்ள தோரட் கமிட்டியின் பரந்துரைகளோ கிராமவங்கிகளில் மனிதவளம் SURPLUS-ஆக உள்ளதாக கூறியுள்ளது.ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு தங்களுக்கு இட்ட கட்டளைபடி புள்ளிவிவரங்களை தொகுத்துக் கொண்டு அறிக்கைகள் தாக்கல் செய்வோருக்கு எப்படித் தெரியும் நமது அன்றாட அவலங்கள்? வேலையில்லா திண்டாட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கும் அதேவேளையில் நம் போன்ற பொதுத்துறைகளிலும்,அரசு அலுவலகங்களிலும் காலிப்பணியடங்களும் அதன் விளைவாக பணிச்சுமையும் அதிகரித்து வருகிறது.ஆனால் மனித வளம் குறித்து ஆராய உருவாக்கப் படும் அத்தனை கமிட்டிகளும் ஆள் பற்றாக்குறை அறவே இல்லை என அடித்து சத்தியம் செய்து வருவது....தற்செயலனது அல்ல! அவை தொழிலாளர் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப் பறிப்பதற்கு திட்டமிட்டு நடத்தப்படும் நயவஞ்சக நாடகங்களே! இப்படி ஒரே நேரத்தில் நமக்கு எதிராகவும்,நமது சமூகநலனுக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் சமூக அநீதிகளை மக்களிடம் எடுத்துச் சொல்லும் விதமாகவும்,நம்மோடு அவர்களை ஒன்றிணைத்து இயக்கங்கள் நடத்தவும் நமது அகில இந்திய கமிட்டி முடிவு செய்துள்ளது. அதனால் PENSION,PARITY IN ALLOWANCES AT PAR WITH COMMERCIAL BANKS,NRBI போன்ற நமது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறித்தியும்,தேவைக்கேற்ப உடனடியாக முறையான பணிநியமனமும்,பதவி உயர்வும் செய்திட கோரியும்,வங்கிச் சேவையில்லாத பகுதிகளில் புதிய கிராம வங்கிகள் துவங்கிட கோரியும்,தற்போதைய தற்காலிக பணியாளர்களை பணிநிரந்திரம் செய்துவிட்டு மேலும் வெளிப்பணியாளர் முறையை நிறுத்திட வேண்டும் என்பதை வலியுறித்தியும் கீழ்கண்ட இயக்கங்கள் நடத்துவது என நமது அகில இந்திய சங்கம் முடிவு செய்துள்ளது. *ONE DAY DHARNA BEFORE HEAD OFFICE OF EACH RRB's ON 9th OCTOBER 2009. *MEMORANDUM FROM PANCHAYAT REPRESENTATIVES AT ALL LEVELS ADDRESSED TO FINANCE MINISTER OF CENTRAL GOVT.BY 30th OCTOBER 2009. *DISTRICT LEVEL SEMINAR ON DEMANDS STATED ABOVE IN PRESENCE OF CUSTOMERS BY 30th OCT' 2009. தோழர்களே! மத்திய கமிட்டியின் அறைகூவலுக்கு இணங்க வருகிற 9ஆம் தேதி நமது நிர்வாகம் அலுவலகம் முன்பு நமது கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தர்ணா நடத்த திட்டமிட்டுள்ளோம்.நாம் போராடுவது வெறும் கோரிக்கைகளுக்காக அல்ல மாறாக இது நமது உரிமைகளை வென்றெடுக்கும் உரிமை போராட்டம்.ஆம்!இது நமக்கான போராட்டம்.சம வேலைக்கு சம ஊதியம் என தீர்ப்பான பின்பும் நமது உரிமைகளை முழுமையாக தராமல் தொடர்ந்து கிராம வங்கி ஊழியர்களான நம்மை வஞ்சித்து வருகிறது அதிகார வர்க்கம்.நமது உழைப்புச் சுரண்டலுக்கும்,உரிமை சுரண்டலுக்கும் எதிராக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது. ஆகவே...அடைத்து போன அதிகாரவர்கத்தின் செவிகளை திறக்கவும்,நமது உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும் அனைவரும் வாரீர்! வாரீர்! நமது திசைகளை நமது போராட்டங்களே முடிவு செய்யட்டும்! நம்பிக்கையோடு நமது போராட்டப்பாதையில் முன்னேறுவோம்! வெற்றிபெறுவோம்! என்றும் தோழமையுடன், சோலைமாணிக்கம் |