அன்பிற்கினிய தோழர்களே!
வணக்கம்! நமது தொடர் இயக்கங்களின் காரணமாக இந்த சுற்றறிக்கை வெளிவர சற்று காலதாமதமாகி விட்டது.இந்த நீண்ட கால இடைவேளைக்கு முதலில் உங்களிடம் மன்னிப்பும்,இது போன்ற காலதாமதம் இனி வருங்காலத்தில் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம் என்ற உறுதியையும் அளிக்கிறோம்.
உலக நாடுகளின் மூத்த அண்ணன் போலவும்,முதலாளித்துவ சிந்தாந்தத்தின் தலைநகராகவும் விளங்கும் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நாம் அறிந்ததே.அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு இல்லாமல் மருத்துவமனைகளுக்குள் சாதாரண காய்ச்சல்,தலைவலி என்று கூட செல்ல முடியாது.காரணம் அந்த அளவிற்கு அங்கு மருத்துவ செலவினங்கள் அதிகம்.இது நாள் வரை அமெரிககாவில் பணிபுரிவோருக்கான மருத்துவ காப்பீடுகளை அவரவர் வேலை பார்க்கும் நிறுவனங்களே செலுத்தி வந்தது.இப்போது அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு செய்து வருவதால் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில் அவர்களது மருத்துவ காப்பீடுகளும் பணம் இன்மையால் காலாவதியாகி வருகிறது.இதனால் மருத்துவமனைகளில் இறந்த தங்களது தந்தை,தாய் போன்ற உறவுகளின் பிணத்தை பணம் கொடுத்து வாங்கக் கூட வழியற்ற அமெரிக்கர்கள் தங்களது செல்போனின் நுனியில் கண்ணீரை சிந்திவிட்டு மருத்துவமனை நிர்வாகத்தையே புதைக்க சொல்லும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.காரில்லாத அமெரிக்கர்களே இல்லை என கர்வம் பேசிய அமெரிக்க அரசாங்கம் இப்போது தங்குவதற்கு குடிசை கூட இல்லாமல் அமெரிக்கர்களை காரிலே தங்கவைத்து அழகு பார்த்து வருகிறது.
அமெரிக்கர்களின் திட்டமிடபடாத,கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையின் காரணமாகவும்,அளவுக்கதிகமான அடம்பரத்தாலும்,தவறான பொருளாதார கொள்கையின் விளைவாகவும் ஏற்பட்ட இந்த பொருளாதர வீழ்ச்சியின் காரணமாக இன்று அமெரிக்காவை அடியொற்றி நடந்து வந்த அத்துணை உலக நாடுகளிலும் பெரும் பொருளாதர சரிவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் இதிலிருந்தெல்லாம் பாடம் கற்றுக்கொண்டால் கொண்ட கொள்கை என்னாவது?என்ற ரீதியில் மன்மோகன்
’தலைமையிலும்’,சோனியாவின் ’வழிகாட்டுதலிலும்’இயங்கி வரும் நமது அரசாங்கம் ‘மக்கள் நலன்’ ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டு வருகிறது.ஆம்! இவர்களது ’மக்கள் நலன்’இவர்கள் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றவுடன் ஒதுக்கீடு செய்த ’முதல்’பட்ஜெட்டிலே தெளிவாகியுள்ளது.அதாவது.....
ராணுவத்துறைக்கு அவர்கள் ஒதுக்கியிருப்பது ஒரு கோடியே அறுபத்தி ஆறு லட்சத்து அறுநூற்று அறுபத்தி மூன்றாயிரம் கோடி ரூபாய்.(வடிவேலு சொல்வது மாதிரி இப்பவே கண்ணக்கட்டுதா..? பொறுங்கள் இனிமேல் தான் கண்கட்டி வித்தையே இருக்கிறது). இது தவிர உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் துணை ராணுவத்திற்கு ஒதுக்கியிருக்கும் தொகை முப்பத்தி எழாயிரத்தி முன்னூறு கோடி.அதாவது மொத்தமாக ராணுவத்திற்கு நமது மொத்த பட்ஜெட்டில் கால்பாகம் ஒதுக்கியுள்ளார்கள்.
கல்வித்துறைக்கு...? வெறும் நாற்பத்தி நாலாயிரத்தி ஐநூற்றி இருபத்தி எட்டு கோடி.(மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 4.4%).
சுகாதாரத்துறைக்கு....? வெறும் இருபத்தி இரண்டாயிரத்தி அறுநூற்றி நாற்பத்தி ஒரு கோடிகள்(அதாவது மொத்த ஒதுக்கீட்டில் 2.2%)- (நன்றி-குமுதம்).
ராணுவத்திற்கு ஏன் இவ்வளவு என்றால்...? எல்லை பாதுகாப்பு என்று பதில் வரும்.தேசத்தின் எல்லையை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது அவசியம் தான். ஆனால் எல்லைகள் காக்கப் படுவது எல்லைக்குள் வாழும் மக்களுக்காக அல்லவா? வெளியிலிருந்து தீவிரவாதிகள் வந்து நம்மை அழிக்க வேண்டிய அவசியமே இல்லை.அந்த வேலையை நமது அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.ஆம்! இங்கு பட்டினிச் சாவுகளும்,வறட்சியும் வாட்டி வதைக்கும் போது எல்லை தாண்டி ஏன் வரவேண்டும் என அத்துணை தீவிரவாத அமைப்புகளும் ஒன்று கூடி முடிவெடுத்து நமது தேசத்தை தங்களது இலக்கிலிருந்து விடுவித்து விட்டதாக அறிவித்தாலும் ஆச்சர்யம் கொள்வதற்கில்லை.
அத்தியாவசிய உணவுப்பொருள்களின் விலையேற்றத்தால் இன்று நடுத்தர வர்கத்தினர்.... ”நடுத்தெரு” வர்கத்தினராக மாறக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.ஒரு பக்கம் அரிசி,பருப்பு போன்றவற்றின் விலைவாசி உயர்வு மறுபக்கம் விவசாயிகள் தற்கொலை இந்த முரண்பாடு ஏன்..? காரணம்.... இடைத்தரகர்கள்! இடைத்தரகர்களின் நவீன பெயர்....MULTI-COMODITY TRADERS.அதாவது ஆன்-லைன் சந்தையில் அத்தியாவசிய பொருட்களை வைத்து வர்த்தகம் என்னும் பெயரில் செய்யப்படும் பதுக்கல்.டன் கணக்கில் பொருட்களை வாங்கி அதன் விலையை ஏற்றி அதன் அடிப்படை புள்ளிகள் உயர்ந்த உடன் அதை விற்று காசாக்கி பொதுமக்கள் வயிற்றில் அடிப்பது.
நூறு நாட்கள் வெறும் எண்பது ரூபாய் கூலிக்கு வீட்டிற்கு ஒருவருக்கு வேலைதருவதை சாதனையாக சொல்லும் இந்த அரசாங்கத்தின் மந்திரிமார்களோ தினம் ஒன்றிற்கு லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து ”வறுமையில் வாடிவருகிறார்கள்”.விமானத்தில் பொதுவகுப்பில் பிரயாணம் செய்பவர்களே இவர்களுக்கு மாடுகளாக தெரியும் போது நம்மைப் போல் விமானத்தை தரையில் நின்று வேடிக்கை பார்போர் எப்படித் தெரிவோம்?
இப்படி விதவிதமாக யோசித்து வயிற்றில் அடிப்பவர்களுக்கு ஆதரவாக இயங்கிவரும் இந்த அரசாங்கம் தான் ஏறத்தாழ நூற்றாண்டுகளாக சுவிஸ் வங்கிகளில் கடத்தப்பட்டு,பதுக்கப்பட்ட பணத்தை கைப்பற்றி வரப் போகிறார்களாம்!
இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுகிறது என்பார்களோ..?
இப்படியாக உலகமயம்,தாராளமயம்,தனியார்மயம் என வர்த்தகத்தை மட்டுமே மையமாய் கொண்டு செயல்பட்டு வரும் முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கும்,அவர்தம் அடிவருடிகளாக அதிகார பீடத்தில் அமர்ந்திருக்கும் ஆட்சியாளர்களின் மக்கள் விரோத போக்கிற்கும் எதிராக இடதுசாரிகட்சிகளும்,நம்மை போன்ற தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராடி வருவதால் தான் வங்கித்துறை போன்றவைகள் இன்னும் பொதுத்துறையாக நீடிக்கிறது.சர்வதேச நிதிநெருக்கடியிலும்,நமது அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைக்கு இடையிலும் லாபகரமாக இயங்கி வருபவை நமது பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் தான் .....காரணம் அவைகள் பொதுத்துறையாக நீடிப்பதே!
RRB-களின் இன்றைய நிலை:
196 ஆக இருந்த கிராம வங்கிகளின் எண்ணிக்கை தற்போது ஒரே SPONSOR-வங்கியின் கீழ் இயங்கி வந்த ஒரே மாநிலத்தை சேர்ந்த கிராம வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்ட பிறகு அவை 84-ஆக குறைந்துள்ளது.ஏறத்தாழ தேசமெங்கும் 620 மாவட்டங்களில் 15200 கிளைகளோடு கிராம வங்கிகள் இயங்கி வருகிறது.தற்போது மொத்த டெப்பாஸிட் 1,25,000 கோடியாகவும்,மொத்த கடன் வழங்கியவை 75,000 கோடியாகவும்,இதில் இதர முதலீடுகள் 60,000 கோடியாகவும் உள்ளது.இதில் சராசரியாக கிளை ஒன்றிற்கான வர்த்தகம் 13 கோடி எனவும்,நபர் ஒன்றிற்கான வர்த்தகம் 3 கோடி எனவும் கணக்கிட பட்டுள்ளது.கிராம வங்கிகளின் 2008-09-ஆம் ஆண்டுக்கான மொத்த லாபம் 1870 கோடியாகவும்,நிகர லாபம் 1404 கோடியாகவும் உள்ளது.
மிகக் குறைந்த மனித வளத்தை கொண்டே கிராம வங்கிகள் இத்தகைய வணிக அசாத்தியங்களை சாத்தியங்கள் ஆக்கியுள்ளது.ஆனாலும் FINANCIAL INCLUSION,NREGA,OLD AGE PENSION போன்ற மத்திய/மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்களினால் கிராம வங்கி ஊழியர்களின் பணிச்சூழல் இன்னும் இறுகியுள்ளது.கிராம வங்கிகளின் நிலையோ இப்படி இருக்க... தோரட் கமிட்டியின் பரிந்துரையோ கிராம வங்கி ஊழியர்களின் எண்ணிக்கையை SURPLUS எனக் கூறியிருக்கிறது.இதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
BEFI-TN:
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு ஆகஸ்ட் 15,16,17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.பெண்கள் மாநாட்டுடன் துவங்கிய மாநாடு மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.அம்மாநாட்டின் முடிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய செயற்குழுவில் பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்திலிருந்து தோழர்.சோலைமாணிக்கம் உதவித்தலைவராகவும்,தோழர்கள்.S.காமராஜ்(DGS-PGBEA),M.சுப்ரமணியன்(AGS-PGBEA) ஆகியயோர் செயற்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அதேபோல் பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்கத்திலிருந்து தோழர்.K.பழனிச்சாமி(PRESIDENT-PGBEU) அவர்களும் செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
JOINT FORUM OF RRB-UNIONS:
02.09.2009 அன்று மும்பையில் உள்ள நபார்டு அலுவலகத்தில் நபார்டு சேர்மனை நமது JFGBU-வின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.அதில் நமது அகில இந்திய கூட்டுப் போராட்டக் குழுவின் பிரதான கோரிக்கைகளான பென்ஷன்,வணிக வங்கிகளுக்கு இணையான அலவன்ஸ்கள்,1982-ஆம் ஆண்டு முதல் சேர்க்கப்பட்டுவந்த இறந்தவர்களின் வாரிசு வேலைவாய்ப்பு,உரிய பணி நியமனம்,பதிவிஉயர்வு ஆகிய கோரிக்கைகள் குறித்து பேசினர்.மேலும் இது சம்பந்தமாக அவரிடம் ஒரு கோரிக்கை சாசனமும் வழங்கப்பட்டது.
AIRRBEA-வின் செயல்பாடுகளும்,இயக்கங்களும்:
27.07.2009 அன்று டெல்லியில் மத்திய அரசின் நிதித்துறை இணைச் செயலாளர் திரு.தருண் பஜாஜ்,நிதித்துறை இணை அமைச்சர் திரு.நமோ நாராயண மீனா,தொழிலாளர் இணை அமைச்சர் திரு.ஹரீஷ் ராவத்,மனித வளத்துறை அமைச்சர் திருமதி.D.புரந்தரேஸ்வரி ஆகியோரைச் சந்தித்து நமது நீண்ட நாள் கோரிக்கைகளான PENSION,NRBI மற்றும் NREGA-க்கான நிதி,பணி ஆள்,அதற்கான சேவை கட்டணம் குறித்தும்,SERVICE RULE மற்றும் PROMOTION RULE மற்ற வங்கித்துறையில் உள்ளது போல் ஏற்படுத்த கோரியும் விவாதிக்கப்பட்டது.
நமது நீண்ட நாள் கோரிக்கையான NEGOTIATION FORUM என்ற கோரிக்கை ஒருவழியாக JOINT CONSULTATIVE COUNCIL என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அது இன்னும் முறையாக செயல்பட ஆரம்பிக்கவில்லை.
புதுவை பாரதியார் கிராம வங்கியில் புதிதாக நியமிக்கப்பட்ட இளம் தோழர்களை கொண்டு நமது AIRRBEA-வின் கீழ் புதிய ஊழியர் சங்கம் ஒன்றை துவங்கியுள்ளோம்.அதன் துவக்க விழா புதுவையில் உள்ள SALT & PEPPER HALL-லில் வைத்து தோழர்.K.கிருஷ்ணன்(BEFI-TN GENERAL SECRETARY) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதில் தோழர்.சோலைமாணிக்கம்(GENERAL SECRETARY-AIRRBEA-TN),தோழர்.காமராஜ்(DGS-PGBEA),தோழர்.அண்டோ கால்பட்(PGBEA),தோழர்.சுரேஷ்(GENERAL SECRETARY-PGBEU),தோழர்.முருகன்(COMMITTEE MEMBER, BEFI-TN) மற்றும் தோழர்.ஜோசப் ஆண்டனி(COMMITTEE MEMBER-BEFI-TN) ஆகியோர் கலந்து கொண்டனர்.
30.08.2009 அன்று கொல்கத்தாவில் AIRRBEA-வின் மத்திய கமிட்டி கூடியது.
அதில்....
பென்ஷன்,வணிக வங்கிக்கு இணையான இதர சலுகைகள்,கிராம வங்கிகளை SPONSOR வங்கியின் பிடியிலிருந்து விடுவித்து மாநில அளவிலான கிராம வங்கிகளை ஏற்படுத்தி அதை ஒரே தேசிய கிராமபுற வங்கியாக மாற்றுவது போன்ற நமது நீண்ட நாள் கோரிக்கைகளோடு....
*தேவைக்கேற்ப உடனடியாக முறையான பணிநியமனமும்,பதவி உயர்வும் செய்திட வேண்டும்.
*வங்கிச் சேவையில்லாத பகுதிகளில் புதிய கிராம வங்கிகள் துவங்கிட வேண்டும்
*தற்போதைய தற்காலிக பணியாளர்களை பணிநிரந்திரம் செய்துவிட்டு மேலும் வெளிப்பணியாளர் முறையை நிறுத்திட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளையும் சேர்த்து அதை மக்களிடம் எடுத்துச் செல்லும் விதமாக கீழ்கண்ட இயக்கங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது
*ONE DAY DHARNA BEFORE HEAD OFFICE OF EACH RRB's ON 9th OCTOBER 2009.
*MEMORANDUM FROM PANCHAYAT REPRESENTATIVES AT ALL LEVELS ADDRESSED TO FINANCE MINISTER OF CENTRAL GOVT.BY 30th OCTOBER 2009.
*DISTRICT LEVEL SEMINAR ON DEMANDS STATED ABOVE IN PRESENCE OF CUSTOMERS BY 30th OCT' 2009.
தோழர்களே!
இன்னும் நமது கோரிக்கைகள் பல நிறைவேற்றப்படாமலே உள்ளது.நமது அகில இந்திய சங்கம் அதற்கான தொடர் இயக்கங்களை அறிவித்து உள்ளது.நாம் ஒவ்வொரு கட்டத்திலும் நமது கோரிக்கைகளை நீண்ட போராட்டங்களுக்கு பிறகு வென்றடுத்துள்ளோம் என்பதை நமக்கு நாமே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது.ஏனென்றால் நாம் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.வாருங்கள்! நம்பிக்கையோடு பயணம் செய்வோம் நமக்கான விடியலை நோக்கி........!