சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த தோழர்கள் ஜீவலிங்கம், பழனியப்பன் இருவரும் reinstate செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று நிர்வாகம் அனுப்பிய reinstatement கடிதம் இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கிறது!
அவர்கள் இருவருக்கும் நமது சங்கங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நடத்திக்கொண்டு இருக்கும் இயக்கத்தின் விளைவே இது. நாம்தான் தொடர்ந்து ‘நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறு ஆய்வு செய்யவேண்டும்’ என கோரிக்கை வைத்து இருந்தோம். நமது சர்க்குலர்களில், ‘வங்கிக்காக உழைத்தவர்களை பயன்படுத்தி, பாராட்டிவிட்டு, பிறகு பழிவாங்குகிறது நிர்வாகம்’ எனக் குறிப்பிட்டு இருந்தோம். நமது ஆர்ப்பாட்டங்களில், இந்த இரு தோழர்களையும் குறிப்பிட்டு, “அவர்களை முதலில் இந்த நிர்வாகம், நபார்டு எல்லாம் பாராட்டியதையும், பிறகு விதிகளை மீறிவிட்டார்கள் என சஸ்பெண்ட் செய்ததையும் விவரித்து கடுமையாக சாடியிருந்தோம்.
நமது சங்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து, சரியாக கவனித்து வருபவர்களுக்கு, நாம் கடந்த சில சர்க்குலர்களில் குறிப்பிட்ட கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தங்கள் புரியும்.
"கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்".
“நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.”
"இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. Negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி,capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது.”
நமது மெமொரெண்டங்களில், இவ்விஷயங்களை தெளிவாக சுட்டிக்காட்டி, நிர்வாகம், நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். சென்ற முறை சேர்மனை சந்தித்தபோது, நமது மெமொரண்டத்தை ஐ.ஓ.பிக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், ஐ.ஓ.பியின் உயரதிகாரிகளோடு அதுகுறித்து விவாதித்ததையும் குறிப்பிட்டார். அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.
இப்போது நல்லது நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். ஒழுங்கு நடவடிக்கைகள் நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் இருக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கைகள் தவறுகளை சரிசெய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர தண்டிப்பதற்காக இருக்கக் கூடாது என்பதே நமது குரலும் கோரிக்கையும்.
நமது இயக்கதின் நோக்கமும் இதுதான். அது நல்ல திசையில் நகர்ந்திருப்பதாகவே கருதுகிறோம்.நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். இது தொடர வேண்டும் என விரும்புகிறோம். அதுவரை நமது இயக்கமும் தொடரும்!
அவர்கள் இருவரும் நமது சங்கத்தில் இல்லையென்றாலும், இந்த நம்பிக்கையான காலம் அவர்களுக்கு நம்மால் வந்தது என்பதுதான் உண்மை.
மீண்டும் வாழ்த்துகிறோம்!
It is such a glorious moment. It is the image of AIREBEA. I feel proud to be an AIRRBEA'n.
ReplyDelete