சுற்றறிக்கை: 2/2013 நாள்: 23.10.2013
அருமைத் தோழரே!
வணக்கம். டிரான்ஸ்பர்கள் குறித்து சென்ற சர்க்குலரில் குறிப்பிட்டு இருந்தோம். பாதிப்புகளை சரிசெய்ய வேண்டுமென்று நம் இரு சங்கங்களின் சார்பில் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். தொடர்ந்து நிர்வாகம் அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட்டை வெளியிட்டது. ஆனாலும் பாதிப்புகள் இருக்கவேச் செய்கின்றன. நம் உறுப்பினர்களுக்கு ஓரளவுக்கு சாதகமான டிரான்ஸ்பர்கள் வாங்க முடிந்திருந்தாலும், குறிப்பிட்ட சிலருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்பதை முன்வைத்தோம். பொது மாறுதல்களில் அனைவரையும் திருப்தி படுத்த முடியாது என்று நிர்வாகம் சொல்லியது. ஆனால் நிர்வாகம் கையாண்ட குழப்பமான உத்திகளும், நியதிகளுமே டிரான்ஸ்பர்களில் நடந்த குளறுபடிகளுக்கும் காரணம் என்பதை நாம் வலியுறுத்தினோம். ஒரு நிலையான, தொலை நோக்குப் பார்வை நிர்வாகத்திடம் இல்லாததே பாரபட்சங்களுக்கும், பாதிப்புகளுக்கும் காரணமாகிறது என்பதையும் எடுத்துரைத்தோம்.
இப்போது அந்த பாதிப்புகளை சரிசெய்ய வழியில்லை என்பதையும், வருகிற புதிய பணி நியமனங்களையொட்டி 2014ம் ஆண்டு ஏப்ரலில் பாதிப்புகள் அனைத்தும் சரிசெய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்தது. நாம் அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறோம். அதே வேளையில், நிர்வாகம் அவ்வப்போது ஒன்று, இரண்டு என்று டிரான்ஸ்பர்கள் போட்டுக்கொண்டு இருப்பதுவும் நல்லதல்ல, அதுவும் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தோம். புதிய கிளைகள் திறப்பதையொட்டி டிரான்ஸ்பர்கள் போடுவதை தவிர்க்க முடியாது என நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
நமது அற்புதமான தோழர்.சோலை மாணிக்கம் வருகிற நவம்பர் 2013ல் பணி ஓய்வு பெறுகிறார். 30 வருடங்களுக்கும் மேலாக இங்கே தொழிற்சங்க இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு இருந்தவர். தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே அவர் மீது நிர்வாகம் தொடுத்த பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை மீறி இன்று வரை உறுதியாக நிற்பவர். பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கத்தின் முக்கிய பொறுப்புகளிலும், மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய உதவித் தலைவராகவும் இருந்து தன் நாட்களை பெரும்பாலும் தொழிற்சங்கப் பணிகளுக்காகவே அர்ப்பணித்தவர். நமது வங்கியில் தொழிற்சங்க உணர்வையும், உரிமைகளையும் நிலைநாட்டிட அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. காலங்களை நினைவு படுத்தும் விதமாகவும், அவருக்குரிய மரியாதையை செலுத்தும் விதமாகவும் PGBEAவும், PGBOUவும் இணைந்து நவம்பர் 24ம் தேதி அவருக்கு பணி நிறைவு விழா ஒன்றை மிகச் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்திருக்கின்றன. முக்கிய தொழிற்சங்கத் தலைவர்கள், முற்போக்கு இயக்கத்தைச் சார்ந்தவர்கள், வங்கியின் உயரதிகாரிகள் மற்றும் இந்த வங்கியில் பணிபுரியும் நாம் அனைவரும் கலந்துகொள்ளும் ஒரு விசேஷமாக அவ்விழா இருக்க வேண்டும் என கருதுகிறோம். முறையான அழைப்பிதழ்கள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும். வாருங்கள் என முன்கூட்டியே அழைக்கிறோம்.
இந்த விழாவின் போது, மலர் (விளம்பரம் இல்லாமல்) ஒன்று வெளியிடவும் உத்தேசித்திருக்கிறோம். தோழர் சோலைமாணிக்கத்துடன் தாங்கள் இருக்கும் புகைப்படம், அவர் பற்றிய தங்கள் சிந்தனைகளோ, நினைவுக் குறிப்புகளோ, அனுபவமோ அல்லது சுவாரசியமான நிகழ்வுகளோ இருப்பின் எழுதி `தோழர்.மாதவராஜ், பாண்டியன் கிராம வங்கி, சூலக்கரை மேடு, விருதுநகர் மாவட்டம்` என்னும் முகவரிக்கு அனுப்புங்கள். 10.11.2013க்குள் தாங்கள் அனுப்பி வைத்தால், அந்த மலரில் வெளியிட இயலும்.
இவ்விழாவிற்கும், மலர் வெளியிடவும் ஒரு லட்சத்துக்கும் மேலாக செலவாகும். எனவே விருதுநகரில் உள்ள PGBEA சங்கக் கணக்கு 5002-க்கு தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பாக ரூ.300/- அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.
தோழமையுடன்
(J.மாதவராஜ்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது...மிகத் தெளிவான புரிதலுடன் வந்த முந்தைய சுற்றறிக்கைக்கும்...அதன் தொடர்ச்சியாக வெளியாகும் இந்த சுற்றறிக்கைகுமான முரண்பாடுகள் கவலையும்,ஏமாற்றமும் அளிக்கிறது!!!
ReplyDeleteமிகப்பெரும் திட்டமிடலுடனும் டிரான்ஸ்பர்கள் ஏக சித்து வேலைகளோடும் வெளியிடப்பட்டது!!! அதன் மீதான எதிர்ப்பை நமது சங்கங்கள் மிகச் சரியாக பதிவு செய்தது!!! அடுத்த கட்ட நடவடிக்கைகளை இரண்டு செயற்குழுக்களும் கூடி முடிவு செய்து எதிர்ப்பு இயக்கங்களை அறிவிக்கும் என எதிர்பார்த்தால்....அந்தர்பல்டியோடு ஏப்ரல் 2014-ஐ நம்பிக்கையோடு எதிர்கொள்ள இரண்டு சங்கங்களும் முடிவெடுத்தது...அதிர்ச்சியும்,ஏமாற்றமும் அளிக்கிறது.
2011-ல் பணிக்கு சேர்ந்தவர்களில் ஓரிருவருக்கு மட்டும் பணிமாறுதல் வழங்கிவிட்டு...ஏர்வாடி கிளையில் முத்துலெட்சுமி என்ற பெண் தோழர் உட்பட பலரையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது நிர்வாகத்திற்கு வேண்டுமானால் சிறிய விஷயமாய் இருக்கலாம்... ஆனால் நம்மால் இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஏராளமான ஊழியர் பிரச்சனைகள் இருக்கும் போது டிரான்ஸ்பரில் தேங்கி நிற்க முடியுமா? என செயற்குழுக்கள் வினா எழுப்பலாம்... ஆனால் ஒற்றை பணிமாறுதலுக்காக மாபெரும் இயக்கங்களை முன்னெடுத்த வரலாறுகள் நமக்கு உண்டல்லவா?
கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமாறுதல் என்ற ஒன்றே இல்லாத நமது வங்கியில்...அடுத்தவருடம் அதுவும் ஏப்ரல் மாதம் பொது மாறுதல் நடைபெறும் என்பதில் என்ன உத்திரவாதம்? இருதரப்பு ஒப்பந்தங்களின் படி இங்கு டிரான்ஸ்பர்கள் நடைமுறைப் படுத்த படுகிறதா? அல்லது ஏதாவது டிரான்ஸ்பர் பாலிசி இந்த வங்கியில் உண்டா? அல்லது அவைகளை ஏற்படுத்த இரண்டு செயற்குழுக்களும் என்ன முடிவு செய்துள்ளது?இவையெல்லாவற்றிற்கும் மேலாக பாண்டியன் மற்றும் பல்லவன் கிராம வங்கிகள் இணைக்கப்பட்டால் அதுவும் இந்த மார்சிற்குள் நடைபெற்றால் இவர்களின் கதி என்னவாகும்? இவர்களின் பணிமாறுதலுக்கு யார் உறுதியளிக்க முடியும்?
யதார்த்த நிலைமையின் விபரீதங்கள் உணர்ந்து...வருங்கால அசௌகர்யங்களை கணக்கிட்டு துரித முடிவெடுக்க என் சங்கங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்...!!!
Anto sir ur very correct
ReplyDeleteஅன்புத் தோழா... இந்த சார் என்னை தனிமை படுத்துவதாக உணர்கிறேன்... நீங்களும் நானும் ஒன்றே... தோழன் என்று உரிமையோடு அழையுங்கள்...!
Delete