(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA, NFRRBO)
சுற்றறிக்கை: 2/2014 நாள்: 05.02.2014
அருமைத் தோழர்களே!
வணக்கம். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து IBA. க்கும் UFBU-வுக்குமிடையே 5 சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நவம்பர் 2013 வரை நடைபெற்றுள்ளன. 18 டிசம்பர் 2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து ஜனவரி 20,21 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.இதனையடுத்து ஜன. 13 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலையீட்டின் பேரில் ஜன. 17 அன்று ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொடக்க கட்ட உயர்வு 9.5 விழுக்காடு என்பதாக ஐபிஏ அறிவித்தது.
மேலும், இருவாரத்துக்கு ஒருமுறை ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடரலாம்; ஜூன் 2014க்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை ஒத்தி வைத்தன.மீண்டும் ஜன.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது 0.5 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.இது ஊழியர், அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக அமைந்தது.இதற்கிடையில், 55 வயது நிறைந்த ஊழியர்களை அல்லது 30 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கலாம் , மாநிலம் முழுவதும் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் ஊழியர் ‘திறன்' அடிப்படையில் ஏற்ற தாழ்வான ஊதிய அமைப்பு விகிதத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நிர்வாகம் சார்பில் எதிர்க் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
சுமூகப்பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றிருந்த தொழிற்சங்கங்களை ஆவேசமடைய வைத்தன. வங்கி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்த, கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் இம்முறை வெறும் 10 விழுக்காடுதான் உயர்வு என்பதை ஏற்க இயலாது என்பதால் யுஎப்பியு கூட்டமைப்பின் 9 சங்கங்களும் பிப்.10ம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கான அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது என அகில இந்திய அளவில் அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. AIRRBEA இதனை நமக்குத் தெரிவித்துள்ளது. எனவே PGBEAவும், PGBOUவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்கின்றன.
தோழர்களே, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
நமது வங்கியும் நமது இயக்கமும்:
பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் குறித்து நமது இரு சங்கங்களும் தொடர்ந்து கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம்.
1. மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது.
2.வெளிப்படைத்தன்மையற்றதாகவும், இறுக்கமானதாகவும் இருக்கிறது.
3.ஊழியர்கள் பணிநெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் இருக்கிறது.
4.வங்கிப்பணிகளில் அவரவர்க்கான விதிகளை வரையறுத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தாமல், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நடத்தைகளில் மட்டுமே ஒழுங்கை பார்க்கிறது.
5.சம்பளப்பிடித்தம் என்றால் அதிவேகமாகச் செயல்படுகிறது. அதே வேளையில் உரிய சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதென்றால் காலம் தாழ்த்துகிறது, தட்டிக் கழிக்கிறது.
6. ஊழியர்களோடும், அலுவலர்களோடும் நட்பு ரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ளாமல், அனைவரையும் எதிரிகளாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்கிறது.
7.ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடிவயிற்றில் பயத்தையும், படபடப்பையும் உருவாக்கி, வங்கிப்பணியில் அவர்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடுவதை குறைக்கிறது.
8.புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை அரவணைத்து அவர்களுக்கு இந்த வங்கியின் மீது பிடிப்பையும் பற்றையும் உருவாக்குவதற்கு பதிலாக அதிகாரம் செலுத்தி இந்த வங்கியை விட்டு வெளியேறும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
இவைகள் குறித்து பலமுறை நிர்வாகத்திடம் பேசியிருக்கிறோம். இவைகளை சரிசெய்வதற்கான யோசனைகளையும், வழிகளையும் நம் தரப்பில் சொல்லியிருக்கிறோம். இந்த நிர்வாகம் சரிசெய்வதாக சொல்கிறது. ஆனால் ஆக்கபூர்வமான, திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது.
'தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும்' என்று நாம் பலவருடங்களாக சொல்லிக்கொண்டே இருக்கிறோம். ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பலரது வாழ்க்கையை சிதைத்து, இந்த வங்கியில் உற்சாகமாக பணிபுரியும் மனோபாவத்தை கெடுத்த மிஸ்டர்.சங்கரநாராயணனை, AIVDயை நிர்வகிக்கும் பொறுப்பிலிருந்து விடுவியுங்கள் என்று எத்தனையோ முறை சொல்லியிருக்கிறோம். நிர்வாகமோ மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கும் அவருக்கு பதவி உயர்வு கொடுத்து பாராட்டியிருக்கிறது.
மிஸ்டர் சங்கரநாராணனுக்குப் பதிலாக இப்போது மிஸ்டர் சந்தானக்குமாரை உட்கார வைத்திருக்கிறார்கள். இவரும் சங்கரநாரயணனைப் போன்ற மோசமான பார்வை கொண்டவர்தான். கிளைகளில் performance செய்யாதவர். பல கேஸ்களில் investigating officerஆக இருக்கிறவர். எனவே மிஸ்டர் சந்தானக்குமாருக்கு AIVDயை நிர்வகிப்பதற்கு தார்மீக உரிமை கிடையாது. அவரை மாற்ற வேண்டும் என நாம் கோரிக்கை வைக்கிறோம். வந்தவுடன் அவர் செய்த முதல் பணி, புளியங்குடிக் கிளையில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் தோழர்.முருகதாஸை சஸ்பெண்ட் செய்ததுதான். தோழர்.முருகதாஸ் வேலைபார்த்த நாட்களுக்குரிய ஊதியம் கொடுக்கப்படவில்லை. wages Act, 1936 பிரகாரம் இது தவறு, ஊதியத்தை உடனடியாக கொடுங்கள் எனக் கேட்டோம். அதற்குத்தான் இந்த சஸ்பென்ஷன். சஸ்பென்ஷன் ஆர்டரில் எந்தக் காரணமும் குறிப்பிடப்படவில்லை. ஊழியர் விரோத மனப்பான்மை அப்பட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது.
எனவே நாம் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய காரியங்களில் ஈடுபட வேண்டி இருக்கிறது. அதற்காக நாம் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் ஆரம்பிப்பது என இரு சங்கத்தின் தலைமையும் தீர்மானித்திருக்கின்றன.
1. தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். டிபார்ட்மெண்ட்களின் பொறுப்பு வகிப்பவர்கள் performerகளாகவும், இணக்கமான அணுகுமுறை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும்.
2.NREGS, OAP கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகள் உடனடியாக முழுமைப் படுத்தப்பட வேண்டும்.
3. நிலுவையிலிருக்கும் ஓழுங்கு நடவடிக்கைகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் பாஸிட்டிவான பார்வையோடு முடிக்கப்பட வேண்டும்.
4. எந்தக் காரணம் கொண்டும் ரிடையர் ஆகிறவர்களின் ஓய்வுகாலச் சலுகைகளை நிறுத்தி வைப்பது கூடாது.
5. Graduation pay to newly recruited Office Assistants, Boarding and lodging expenses for officers on par with sponsor Bank, Petrol allowance and House maintanence allowance on par with sponsor bank, enhancement of LTC/LFC ஆகிய பொருளாதாரக் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.
6. அவரவர்க்கான Duties and responsibilities களை வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.
விரைவில் நமது இரு சங்கங்களும் நிர்வாகத்துடன் இந்தக் கோரிக்கைகள் குறித்து பேசுவோம். சாதகமான நிலைமைகளும், முன்னேற்றங்களும் ஏற்படவில்லையென்றால் நாம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இந்தக் கோரிக்கைகள் குறித்து நமது வங்கியில் இருக்கும் சகோதரச் சங்கங்களோடும் பேசி வருகிறோம். அவர்களும் இதுபோன்ற சிந்தனைகளோடு இருக்கிறார்கள் என்பது ஆரோக்கியமான விஷயம்.
தோழர்.முருகதாஸ் சஸ்பென்ஷன் குறித்து பொதுமேலாளரிடமும், வங்கியின் சேர்மனிடமும் பேசியிருக்கிறோம். உடனடியாக அவரை Reinstate செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறோம். ஓரிரு நாட்களில் Reinstate செய்வதாக ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் உற்சாகமான செய்திகளோடு விரைவில் சந்திப்போம்.
தோழமையுடன்
(J.மாதவராஜ்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!