குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) முடிவை எதிர்த்து வங்கி ஊழியர் அதிகாரிகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎப்பியு) பிப். 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது.இந்த வேலை நிறுத்தத்ஹ்டில் கிராம வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து ஐபிஏ. க்கும் யுஎப்பியு-வுக்குமிடையே 5 சுற்றுப்பேச்சுவார்த்தை கள் நவம்பர் 2013 வரை நடைபெற்றுள்ளன. 18 டிசம்பர் 2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இம் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.இதனையடுத்து ஜன. 13 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலையீட்டின் பேரில் ஜன. 17 அன்று ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொடக்க கட்ட உயர்வு 9.5 விழுக்காடு என்பதாக ஐபிஏ அறிவித்தது.
மேலும், இருவாரத்துக்கு ஒருமுறை ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடரலாம்; ஜூன் 2014க்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டன.மீண்டும் ஜன.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது 0.5 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
இது ஊழியர், அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக அமைந்தது.இதற்கிடையில், 55 வயது நிறைந்த ஊழியர்களை அல்லது 30 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கலாம் , மாநிலம் முழுவதும் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் ஊழியர் ‘திறன்’ அடிப்படையில் ஏற்றத் தாழ்வான ஊதிய அமைப்பு விகிதத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நிர்வாகம் சார்பில் எதிர்க் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
சுமூகப்பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றிருந்த தொழிற்சங்கங்களை ஆவேசமடைய வைத்தன. வங்கி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்த, கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் இம்முறை வெறும் 10 விழுக்காடுதான் உயர்வு என்பதை ஏற்க இயலாது என்பதால் யுஎப்பியு கூட்டமைப்பின் 9 சங்கங்களும் பிப்.10ம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கான அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது என அகில இந்திய அளவில் அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. AIRRBEA இதனை நமக்குத் தெரிவித்துள்ளது. எனவே PGBEAவும், PGBOUவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்கின்றன.
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!