21.3.14

Pension : செய்திகளும், உண்மைகளும்!

சில நாட்களாக பென்சன் குறித்த செய்திகள் எங்கும் பரபரப்பாக பேசப்படுகிறது. பென்சன் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டு விட்டதாகவும்,  விரைவில் கிடைத்துவிடும் என்றும் சொன்னார்கள். PGBOA General Secretaryக்கு நிதியமைச்சர் கடிதம் எழுதி இதனை தெரிவித்திருப்பதாக சொன்னார்கள்.

அந்தக் கடிதத்தை வெளியிட்டு, எதோ நாளைக்கே, அவர்களது முயற்சியால் பென்ஷன் கிடைக்க இருப்பது போல ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். நிதியமைச்சரே அவர்களுக்கு கடிதம் எழுதி இருப்பது குறித்து வேண்டுமானால் பெருமை கொள்ளலாம். நிதியமைச்சரோடு நெருக்கமாக இருக்கும் சில தனிநபர்களின் முயற்சியாலும் ஏற்பாட்டிலும் இது நடந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

மற்றபடி, அந்தக் கடிதத்தில் ஒன்றுமில்லை.  காலம் பூராவும் ஊழியர் விரோதமாகவே செயல்பட்டவரும், முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதற்காகவே பிறவி எடுத்தவருமான திரு.ப.சிதம்பரம்  அதில் உண்மைகளை திரித்துக் கூறியிருக்கிறார். உண்மை என்ன ஏது என்று தெரியாமலேயே, அதை ஒரு சங்கம் தூக்கிப் பிடிப்பதும், கொண்டாடுவதும்தான் துயரம்.

நமது சங்கத்தின் செய்திகளையும், சர்க்குலர்களையும், வெப்சைட்டையும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு பென்ஷன் குறித்த உண்மையான அனைத்து தகவல்களும் தெளிவாய் புரியும்.

அந்தக்  கடிதத்தில்,  2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில் வணிக வங்கி ஊழியர்களைப் போன்று, கிராம வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் கொடுப்பதற்கு அரசு கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதை முதலில் குறிப்பிட்டு இருக்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால் மத்திய அரசு அதனை ஒன்றும் சாதரணமாக ஒப்புக்கொள்ளவில்லை. நமது அனைவரின் கடுமையான போராட்டங்களினால் மறைந்த நமது மகத்தான தலைவர் தோழர்.முகர்ஜியிடம், அப்போது நிதியமைச்சராய் இருந்த திரு.பிராணாப் முகர்ஜி அவர்கள் நேரில் ஒப்புக்கொண்டார். கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கும் Office Note  கையெழுத்திட்டதும், அந்த Office Note ஐ அப்படியே நாம் உடனடியாக வெளியிட்டதும் அனைவருக்கும் தெரியும்.

அடுத்ததாக, ஒரு Model Pension Scheme  25.6.2013 அன்று உருவாக்கப்பட்டதை நிதியமைச்சர் தெரிவித்திருக்கிறார்.  அந்த Model Pension Scheme ஐ உருவாக்கும் பொறுப்பை நபார்டுக்கு  ஒப்படைத்து எழுதிய கடிதத்தையும் ,   அதில்  அரசு நிர்ணயித்த  விதிகளையும்  ஏற்கனவே நாம் அப்போதே  சர்க்குலரில் வெளியிட்டு இருந்தோம். மத்திய அரசுக்கும், நபார்டுக்கும் இருந்த முரண்பாடுகள் குறித்தும் தெரியப்படுத்தி இருந்தோம். இறுதியாக அந்த Model Pension Schemeஐ அப்படியே நமது வெப்சைட்டிலும் வெளியிட்டு இருந்தோம்.

இதுவரைக்கும் சரியாகச் சென்று கொண்டு இருந்த விவகாரம், அடுத்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீலுக்குச் சென்றதும்தான், முட்டுக்கட்டை போடப்பட்டு நின்றது. மத்திய அரசு 9.7.2013 அன்று  தாங்கள் கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் திட்டம் கொடுக்க கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டு இருப்பதையும், ஒரு மாடல் பென்ஷன் திட்டத்தை இறுதிப்படுத்தி இருப்பதாகவும் அதன்படி அமல்படுத்தலாம் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் affidavit தாக்கல் செய்தது. நாம் அந்த affidavit-ஐ அப்படியே நமது வெப்சைட்டில் வெளியிட்டு இருந்தோம். இதுவும் அனைவருக்கும் தெரியும்.

அதற்கப்புறம் பல தேதிகளில் ஹியரிங் போடப்பட்டும் நமது வழக்கு எடுக்கப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டது. இதைத்தான் நிதியமைச்சர் , அரசு மீது எந்தத் தவறும் இல்லாதது போலவும், அரசு பென்ஷன் திட்டத்தை கோர்ட்டில் ஒப்புக்கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் வழக்கு ஹியரிங்குக்கு வராமலேயே போய்க்கொண்டு இருப்பதாகவும்  அவரது கடிதத்தில் சொல்லி இருக்கிறார்.

பிறகு நிதியமைச்சர் என்ன சொல்கிறார்? கோர்ட்டில் வழக்கை சீக்கிரமாக முடிப்பதற்கு அரசு தரப்பில் instructions  கொடுக்கப்பட்டு விட்டதாகவும், வழக்கை சீக்கிரமாக முடிப்பதற்கு employees union ஒத்துழைக்குமாறும் சொல்லியிருக்கிறார்.  இங்கு அவர் employees union என யாரைக் குறிப்பிடுகிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.  இங்குதான் நிதியமைச்சரின் அப்பட்டமான பொய்யும் புரட்டும் அடங்கியிருக்கிறது. கீழ்க்கண்ட கேள்விகளும் எழுகின்றன.

1. 25.6.2013 பென்ஷன் திட்டத்தை  இறுதிப்படுத்தினால், 9.7.2013 அன்று சுப்ரீம் கோர்ட்டில் ஏன் affidavit தாக்கல் செய்ய வேண்டும்?
2. இறுதி செய்யப்பட்ட பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திவிட்டு அதனை கோர்ட்டில் தெரிவிக்கலாமே?
3. கோர்ட்டில், ஹியரிங்குக்கு வராமல் போனதற்கு நமது சங்கத்திற்கு என்ன விதத்தில் பொறுப்பு  இருக்கிறது?
4. வேண்டுமென்றே  வழக்கை இழுத்தடித்துக் கொண்டு இருப்பது யார்?

தோழர்களே, இங்கு சில உண்மைகளை தெரிந்துகொள்ள வேண்டும்.


மத்திய அரசு லாபமிட்டும் கிராம வங்கிகளுக்கு மட்டும் பென்ஷன் உண்டு என்றும், பென்ஷனுக்கான நிதியில் 30 சதவீதம் ஊழியர்கள் ஏற்க வேண்டும் எனவும் சொல்கிறது. இதனை நாம் ஏற்கவில்லை.

தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஹியரிங்குக்கு வராமல் போவதை சரிசெய்ய நாம் special mention  petition  ஒன்றை 18.2.2014 அன்று தாக்கல் செய்திருந்தோம். அதன் அடிப்படையில்   வழக்கு 25.3.2014ம் தேதி இறுதி விசாரணைக்கு வர இருக்கிறது. எப்படியும் தீர்ப்பு நமக்கு சாதகமாக வர இருக்கிறது.

மேலே குறிப்பிட்ட வழக்கு, இராஜஸ்தான் ஹைகோர்ட் தீர்ப்பினை எதிர்த்து மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த வழக்கு.

இதுபோக, கர்நாடகா ஹைகோர்ட்டில் நமக்கு பென்ஷனும், கம்ப்யூட்டர் இன்கிரிமெண்டும் கொடுக்க வேண்டும் எனவும் ஒரு தீர்ப்பு வெளிவந்தது தோழர்களுக்கு நினைவிலிருக்கும். மத்திய அரசு அதனை எதிர்த்து அப்பீல் சென்றது. அந்த அப்பீலும் கடந்த பிப்ரவரி மாதம் டிஸ்மிஸ் செய்யப்பட்டு விட்டது.

ஆக எப்படியும், நமக்கு பென்ஷன் வருவது உறுதியாய் இருக்கிறது. இந்த நிலையில் இப்படியொரு கடிதத்தை நிதியமைச்சர் எழுதி, எதோ அரசே மனமுவந்து கொடுக்க இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். (தேர்தல் படுத்தும் பாடு!).

முழு விபரங்களை தெரிந்துகொள்ள படியுங்கள்:
1.Parity in Pension! Historic Achievement by AIRRBEA
2.RRB Employees PENSION SCHEME : HIGH LIGHTS
3.Parliament question for pension Scheme in RRBs and Reply of Minister
4.Important Govt. Correspondence Regarding Pension Scheme to RRB Employees!
5.Pension : Govt submitted its Affidavit




20 comments:

  1. One good joke....
    Chief Manager : On account of annual closing of accounts u r hereby ordered to work till 8 pm on 29,30 and 31 March 2014.
    Cashier : I m sorry sir. I cant stay after 5 pm. I m driving auto part time to boost my income.
    Manager : OK friend....if u come to bus stand kindly suggest my idly-dosa shop to ur passengers. I M ALSO RUNNING A PART TIME BUSINESS.

    ReplyDelete
  2. dear union leaders......
    i dont understand why u r taking our 100 rupees every month as subscription in waste ? i always think i should not go to union leades 2 solve my problem becauz they have lot of problems to solve on behalf of us. but sadly, i would like to say that in spite of all these i have to put forward what is happening in my branch. i have one Sr Manager one Asst Manager and myself as staff strength. unfortunately i had to admit my wife in a hospital in ramnad for which i requested leave on 28th march 2014. on that day my branch manager was on leave. i requested my asst manager to help me get leave. he did help me by giving number of regional manager and said it is ur leave. ....so u only have to ask RM about ur leave. I called RM and told my problem. He said ur branch manager had himself gone on leave without my approval, how can i send u on leave considering this annual closing of accounts. i requested him that i needed only one day leave to give some money to my wife's father who was with my wife in the hospital without any money. the RM told me to request the nearest branch for alternate cashier to be deputed to my branch. i want to ask the management that if for everything i have to manage myself then what hell the management is doing????????? after that he told me that he will tell the nearest branch manager to provide alternate cashier. when i asked the nearest branch manager, he coldly said that all his cashiers are busy in transporting 1 crore of rupees to ramnad and so he can not provide. and the RM did not even care to call me back if something was arranged for my leave. is the RM so powerless, toothless, and without any backbone that he cant arrange a alternate cashier for few hours in ramnad region? are the sr managers became so arrogant that they dont even obey RM's orders? My branch's Sr Manager and asst manager are having a very good time because both of them get leave due to 2 supervisory staff. what the hell i did wrong in my previous birth that i m not getting leave to admit my wife in a hospital? my sr manager had gone on 1 week leave to attend a funeral of someone who is not his next of kin and i m requesting just one day leave 2 admit my immediate next of kin...my wife...and even for that i did not get leave. My asst manager is going on leave because he has influence in PAD and ADMIN OFFICE.The important question is why i m not getting leave even in the most genuine case? are clerks slaves ? I request unions to take note of this very seriously or I m sorry to say that i will not support to any union in my life.

    ReplyDelete
    Replies
    1. மனோஹர்!
      இவ்வளவு இக்கட்டான நிலையில் இருந்த தாங்கள் இதனை PGBEAவின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கலாமே. மற்ற யாரும் கூடச் சொல்லவில்லையே. சொல்லியிருந்தால் நிச்சயம் சங்கம் தலையிட்டு இருக்கும். தங்களுக்கு 28ம் தேதி லீவினை ஏற்பாடு செய்திருக்கும்.

      லீவு எடுக்க முடியாத அளவுக்கு இங்கு ஆட் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. இந்நிலைமையை எதிர்த்து PGBEA சுற்றறிக்கைகள் விட்டிருக்கிறது. இயக்கங்களும் நடத்தியிருக்கிறது. அதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

      தாங்கள் சங்கத்தோடு சேர்ந்து இதுபோன்ற ஒரு நிலைமை இனி தங்களுக்கும், இனி யாருக்கும் ஏற்படக்கூடாது என செயல்படுவதுதான் சரியாய் இருக்கும். ஒதுங்கி நிற்பது அல்ல.

      Delete
    2. THANKS FOR UR REPLY,SIR...WHEN A PERSON DO NOT GET SOMETHING WHICH HE GENUINELY NEEDS, HE IS SURROUNDED BY A LOT OF TENSIONS AND WORRIES. I M SORRY TO HAVE SAID SO HARSHLY ON OUR UNION. KINDLY ACCEPT MY HEARTFELT APOLOGIES.

      Delete
  3. I take back my heartfelt apologies. Today is 1st APRIL 2014. april fool day.....but i do not want to be a april fool.Mr pandyan gbea.....i dont know who u r? because this is a website u can write in any name. i want 2 tell u that ur union is waste....and that i discovered today. u told me that if i mentioned my problem to u then my problem would have solved on that day itself. but sadly the reality is not as u said. i know there is a problem of staff shortage..but if a staff has a serious and genuine problem, is not he eligible to get leave? u asked me that had i told to u about this? dear union leader...u had not given us ur phone number in this website to contact u in times of emergency. even now i dont know ur phone number. but u know our branch...our phone number....our names....just to add us to be ur members. this is not fair. coming to the point..... i asked one of our comrade,Mr suresh, who is asst manager in my nearest branch, pamban, to help me get 15 days leave as my wife has 2 undergo a important surgery within 2 days. he, in turn, suggested me 2 contact Mr arul who is also our comrade. he suggested me 2 contact RM and request for leave. the main matter is that No one told me that u just go on leave ...we will manage! is this what we call comrade? our union dont know the meaning of comrade !!!! u go and work in defence......u will know what is comrade. comrade means ur prestige is my prestige....ur honour is my honour....ur pain is my pain....but here COMRADE is just a word for which no one knows the meaning. for ur information,. mr union leader, i got only 2 days leave.....not because of u....but just because of my sr manager...who just came today. union according 2 me is if u have any problem then i will lay down my life just 2 see that u r comfortable. here there is no union in our union. Sad...but today i saw the truth. good bye dear union leader.

    ReplyDelete
  4. Sir,
    Pandian bank Offical Website not open from last 2days...What reason sir.

    ReplyDelete
  5. May be TECHNICAL PROBLEM. Do not lose ur heart, dear candidate, and be in contact with this website, if the official website of the bank is down. The procedure of Annual closing of accounts in our bank will be over in a week and it is expected that the recruitment drive will resume soon after. I request Our Union Leader to be kind enough to clarify through our management and clear the doubts of numerous candidates by publishing expected dates of interviews in our union website.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thank you Sir, When will Office Assistant recruitment start? pls tell how much marks expect?

      Delete
  6. Dear UNION LEADER...are u there on this website....why dont you reply to the candidates ?

    ReplyDelete
    Replies
    1. பாண்டியன் வங்கி எப்பொழுது கிளார்க் ஆட்சேர்ப்பை துவங்குவார்கள்? வங்கிகள் இனணப்பது காரணத்தால் தாமதமா?தயவு செய்து தகவல் தாருங்க்ள்.

      Delete
  7. sir,surely vacancy will fall this time ?or skipping this time...may i know please...?when can i expect if vacancy is there?kindly reply me sir...

    ReplyDelete
    Replies
    1. Within June new clerical joint. Coming may clerical recruitment start

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  8. sir,when assistant recruitment going to start?...............within april or after may....pls reply sir am waiting for ur reply.......

    ReplyDelete
  9. sir,when assistant recruitment going to start?...............within april or after may....pls reply sir am waiting for ur reply.......

    ReplyDelete
  10. Interview for Officers is going to be conducted on May 3 to May 7. 250 candidates are called for interview. For clerical recruitment there was no sign or symptom from management so far. we are going to agitate.

    ReplyDelete

Comrades! Please share your views here!