சுற்றறிக்கை எண் : 2/2012 நாள்: 13.1.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
தானே புயலால் கடலூர், பாண்டிச்சேரியைச் சுற்றிய பகுதிகள் கடுமையாய் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இரண்டு வாரங்களாகியும் இன்னும் மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மனித வாழ்க்கை சிதைக்கப்பட்டு இருக்கிறது. ஸ்தம்பித்துப் போன அரசு நிர்வாகம், கால தாமதமாகவே செயல்பட ஆரம்பித்திருக்கிறது. நிவாரணப் பணிகள் துரிதமாக நடத்தப்பட்டு, இயல்பு வாழ்க்கை விரைவில் திரும்ப வேண்டும் .
இராமநாதபுரம் வட்டாரக் கூட்டம்:
சென்ற சர்க்குலரில் நிறைவேற்றப்படாத நமது கோரிக்கைகளை பட்டியலிட்டு இருந்தோம். தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான தாக்குதலைத் தெரியப்படுத்தி இருந்தோம். நிர்வாகம் அவைகளை சரிசெய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தோம். இதுவரை எந்த நல்ல அறிகுறியும் நிர்வாகத் தரப்பில் தென்படவில்லை என்பதே உண்மையாய் இருக்கிறது.
இந்த நிலைமையில், 9. 1.2012 அன்று நமது இரு சங்கங்களின் சார்பில் இராமநாதபுரம் வட்டாரக் கூட்டம் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் புதிய தோழர்கள் கலந்துகொண்டனர். அவர்களது வருகை சங்கத்திற்கு புதிய உற்சாகத்தைத் தருவதாக அமைந்தது. பல்வேறு விஷயங்கள் வட்டாரக் கூட்டத்தில் பகிர்ந்துகொள்ளப்பட்டன. ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் எந்த நல்ல விஷயங்களையும் செய்யாமல், தொடர்ந்து நெருக்கடிகள் மட்டுமே கொடுப்பதை எப்படி சகித்துக்கொள்வது என்பது அனைவரின் மனக்குமுறலாக இருந்தது. எந்த பொருளாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றாமல் நிர்வாகம் காலம் தாழ்த்துவது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதிலும் பணி ஓய்வு பெறுகிறவர்களின் பணத்தைப் பிடுங்குவதில் நிர்வாகம் குறியாக இருப்பது ஆத்திரத்தை உருவாக்கியிருந்தது. நிர்வாகத்துடன் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்போம், இல்லையென்றால் சங்கத்தலைமை விரைவில் கூடி போராட்டமே நமது வழியாக தேர்ந்தெடுக்கும் என தலைமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. நிர்வாகம் இழைக்கிற அநீதிகளுக்கு தீர்ப்பையும் நிர்வாகமே வழங்குமாறுச் சொல்லி ‘எவ்வளவு அடித்தாலும் தாங்கும்' பாரம்பரியம் நம்முடையது அல்ல.
என்ன பாவம் செய்தார்கள் நமது அப்ரைசர்கள்?
சமீபத்தில் நிர்வாகத்திலிருந்து ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. அங்குமிங்குமாக நகைக்கடன்களில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறதாம். அதற்கு அப்ரைசர்கள் காரணமாக இருந்திருக்கிறார்களாம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளை எதிர்கொள்ள அப்ரைசர்களை லட்சக்கணக்கில் வங்கியில் டெபாசிட் போட்டுவைக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். A,B,C,D என கிளைகளின் வணிக அடிப்படையில் தரவாரியாக பிரித்து, 3 லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என ஒவ்வொரு அப்ரைசரும் டெப்பாசிட் போட வேண்டுமாம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தவறுகளுக்கு ஒட்டுமொத்த அப்ரைசர்களையும் சந்தேக லிஸ்ட்டில் வைப்பது போல இருக்கிறது நிர்வாகத்தின் நடவடிக்கை.
இந்த வங்கி எந்த வரைமுறையுமில்லாமல் அப்ரைசர்களை சுரண்டுகிறது. வங்கியின் சார்பில் கொடுக்க வேண்டிய எடை பார்க்கும் மெஷினை அப்ரைசர்களையே வாங்கச் சொன்னதிலிருந்து இந்த அநியாயம் ஆரம்பித்தது. தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களை ஊதியம் கொடுக்க நிர்ப்பந்தித்து, வளர்ந்தது. இன்று லட்சக்கணக்கில் டெப்பாசிட் போட வேண்டிய கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை இது. நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு PGBEAவும், PGBOUவும் தங்களது கண்டனங்களை தெரிவிக்கின்றன.
புதிய தோழர்களுக்காக ஒரு பயிற்சி முகாம்:
வங்கியில் புதிதாய் பணிநியமனம் பெற்றிருக்கும் தோழர்களுக்கு இந்த வங்கி, நமது பணி, அதில் வரும் நெருக்கடிகள், எதிர்காலம் குறித்து ஏராளமாய் சந்தேகங்களும், குழப்பங்களும் இருக்கின்றன. பார்க்கும் சமயங்களில் அவர்கள் இதனை நம்மோடு உரையாடுகிறார்கள். இவைகள் குறித்தெல்லாம் அந்தத் தோழர்களோடு விரிவாகவும், விளக்கமாகவும் பேச வேண்டிய அவசியம் இருப்பதை இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் உணர்ந்தன.
அதன் அடிப்படையில் வரும் 26.1.2012 அன்று நமது சங்க அலுவலகத்தில் ஒரு பயிற்சி முகாம் நடத்த இருக்கிறோம். தோழர்கள் போஸ்பாண்டியன், மாதவராஜ், டி.கிருஷ்ணன் ஆகியோரோடு இந்தியன் வங்கி ஊழியர் சங்கத் தலைவர்களில் ஒருவரான தோழர்.எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களும் இந்த பயிற்சிமுகாமில் கலந்துகொள்ள இருக்கிறார். புதிதாக பணிநியமனம் செய்யப்பட்ட தோழர்கள் இந்த நிகழ்வில் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவர்களுக்கு பிரத்யேக அழைப்புக் கடிதங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
தோழர்.முகர்ஜியின் வருகை:
கம்ப்யூட்டர் அலவன்சுக்கான அரசு ஆணை இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என தோழர்.முகர்ஜியிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கிடைத்திருக்கும் நல்ல செய்தி இது.
இந்த மாதம் 19, 20ம் தேதிகளில் ஒரிசா மாநிலம் பூரியில், நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் ஜெனரல் கவுன்சில் நடக்க இருக்கிறது. நம் இரு சங்கங்களின் சார்பில் ஜெனரல் கவுன்சில் மெம்பர்களும், பெண் ஊழியர்களுக்கான மகாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளும் செல்ல இருக்கிறார்கள்.
PGBEAவின் பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கத்தின் மகள் திருமணத்தையொட்டி, நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி தமிழகம் வருகிறார். அதையொட்டி 29.1.2012 மதியம் 2 மணிக்கு பள்ளத்தூரில் ஒரு கரத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. pension, amalgamation குறித்த முன்னேற்றங்களை அவர் நம்மோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறார். அதற்கான அழைப்பிதழ்களும் விரைவில் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
தோழர்களே!
தமிழர் திருநாளான தைப்பொங்கல் வருகிறது.
நம் மனங்களில் உற்சாகமும், எழுச்சியும் பொங்கட்டும்.
அநீதிகளுக்கு எதிரான ஆவேசம் பொங்கட்டும்.
எதிர்காலத்திற்கான நம்பிக்கை பொங்கட்டும்.
வாழ்வில் சந்தோஷம் பொங்கட்டும்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
This comment has been removed by the author.
ReplyDeleteHappy Pongal to all...!
ReplyDeleteNagarajan V,
officer,
Pallavan Grama Bank.
happy pongal.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதானே புயலின் கொடுரம் சுனாமியை விட பலமடங்கு பாதிப்புகளை ஏற்படுத்தியதாய் பத்திரிக்கை சொல்லும் செய்திகள் மிகவும் அதர்ச்சியூட்டுபவையாக/ஏதுமற்றதாய் துடைத்துப்போடப்பட்டிருக்கிற கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வு துளிர்க்க இன்னும் இருபதிலிருந்து, இருபத்தைந்து ஆண்டு காலங்கள் ஆகும் என்கிறார்கள்.அப்படியாகாமல் அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்ற போர்க்கால அடிப்படையில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்,மாற்று வரைவுகளை முன் வைக்க வேண்டும்.
ReplyDeleteமற்றபடி வட்டாரக்கூட்டங்களில் இன்னும் கொஞ்சம் ஆழமாகவும் பேசவைக்கவும் சொல்ல வைக்கவும் வேண்டும் என்பது இந் நேரத்தைய எளிய தோன்றலாய் படுகிறது.நன்றி வணக்கம். அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
யாரது ஜெபா?,,,,அவரது வலைத்தளம் தெரியவில்லையே தோழர்.
ReplyDeleteதெரிந்தால் என்மாதிரியான அப்பாவிகளும் படித்து தெரிந்து கொள்ளுவோம்.நன்றி,வணக்கம்.
@விமலன்!
ReplyDeleteஜெபா, பல்லவன் கிராம வங்கியில் அடரி கிளையில் பணிபுரியும் தோழர். இலக்கிய ஆர்வமும், தொடர்ந்த வாசிப்புமிக்க தோழர்.
அவரது வலைப்பக்கம் உங்களுக்குத் தெரியவில்லையா?
அன்பு பாண்டியன் கிராம வங்கி தோழர்களுக்கு
ReplyDeleteஉங்கள் சங்க சுற்றறிக்கையில் கடலூர் பாண்டி மக்களின் துயரத்தைக் குறித்த பதிவோடு பொங்கல் குறித்த பதிவையும் செய்திருப்பது தொழிற்சங்க பிரக்ஞையைக் காட்டுகிறது. பொங்கலுக்கு முன்பாக எழுதிய இந்தக் கவிதையை உங்களோடும் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்..
எஸ் வி வேணுகோபாலன்
ஊர் முழுக்கப் பொங்கும் நாளில்
இரண்டு வீடுகள் தவிர்த்து
மீதி ஊர் முழுக்கக் கொண்டாடுகிறது இந்தப் பொங்கலை
மஞ்சள் கொத்து வாங்கித் திரும்பும்
எதிர் வீட்டுச் சிறுமிகளைப்
பார்த்துப் பெருமூச்சு விடும் இந்த வீட்டின் சிறுசுகள்
வாங்கிய கரும்புகளை கர்வத்தோடு
ஆட்டிக் காட்டிக் கொண்டே நடக்கும் இளவட்டங்களை
ஏறிட்டுப் பார்க்கப் பொறாது இந்தப் பக்கத்து வாலிபக் கூட்டம்
வண்ணக் கலயங்களும் நிறப்பிரிகைக் கோலங்களும்
செம்பஞ்சுக் குழம்பில் சிரித்து மினுக்கும் புது மெருகும்
வாத்திய இசையும், வற்றாத துள்ளலோட்டமும்
பொங்கலோ பொங்கல் என்ற மந்திரச் சொல்லும்
ஆர்ப்பரிக்கிறது ஊர்
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய்
பட்டும் படாது விலகி நின்று
பார்த்துக் கொண்டே இருக்கிறது
சாளரப் பார்வையை, எதிர்த்த வீடு
நழுவிப் போன வசந்தங்களின்
நினைவோடு அண்டை வீடு.
ஒன்பது மணி நேரம் ஓயாதடித்த
சூறைக் காற்றுக்குப் பெயர் 'தானே'!
பிடுங்கிப் போட்டுவிட்டுப் போன முந்திரிக் கொல்லை
மீண்டெழ ஆகக் கூடும் இருபதாண்டுகள்...
புதுவையிலும் கடலூரிலும்
மின்கம்பங்களோடு பறிபோன மின்சாரம்
திரும்ப உயிரூட்டப் பட எடுக்கலாம் மாதங்கள்..
மண்ணுக்குள் கீழிறங்கி நூற்றாண்டுக்
கதைகள் பேசிக் கொண்டிருந்த வேர்களோடு
தூக்கி வீசப்பட்டுவிட்ட மரங்களின் உடல்கள்
கிடக்கின்றன சாலை சாலையாய் மனிதர்களே போல்!
அவை தொலைந்த அதே முகவரியில்
தமது எதிர்காலத்தையும் தொலைத்த மக்கள்
கிடக்கிறார் பேயும் பிசாசும் ஒரு சேர அறைந்ததாய் . .
மாநிலம் முழுக்கக் கொண்டாடுகிறது பொங்கல்
இரண்டு ஊர்களைத் தவிர்த்தல்ல,
உள்ளோடும் உணர்வோடும்
உறவோடும் உணர்ச்சிகளோடும்
ஒரு தாய்ப் பிள்ளைகளான நேயத்தோடும்
அரவணைக்கும் கைகளோடு
ஆனந்தப் பொங்கலை...
- எஸ் வி வேணுகோபாலன்
*************
I AM C TAMIZHARASAN, OFFICER, PALLAVAN GRAMA BANK, RO,VILLUPURAM
ReplyDeleteYour site is very useful.
I LIKE IT VERY MUCH.
BEST WISHES.
..tamil.........