10.3.14

Maternity Leave to women employees after 5 years in PGB !


Maternity leave என்பது பெண் ஊழியர்களுக்கு, பேறு காலத்தின் போது ஊதியத்துடன் கொடுக்கப்படும் லீவாகும். இதற்கென தனிச்சட்டம் பிறப்பிக்கப்பட்டு, அரசு ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால்  பாண்டியன் கிராம வங்கியில் 2009ம் ஆண்டில், maternity leave எடுத்த 4 பெண் ஊழியர்கள் / அலுவலர்களுக்கு அப்போதிருந்த நிர்வாகம், அந்த லீவுக்குரிய ஊதியத்தை கொடுக்கவில்லை.

உடனடியாக  PGBEAவும், PGBOUவும் இப்பிரச்சினையை  முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.  நிர்வாகம் அதற்கு ஒப்புக்கொள்ளாதது மட்டுமல்ல, தகாத வார்த்தைகளையும் வெளிப்படுத்தியது. அதனைக் கண்டித்து நாம் சர்க்குலர்கள் வெளியிட்டு, தோழர்களிடையே கடும் பிரச்சாரங்கள் செய்து, ஆர்ப்பாட்டங்களும் நடத்தினோம். நிர்வாகம் பிடிவாதமாக இருந்தது.

நிர்வாகத் தலைமைகள் அதற்குப் பிறகு மாறியபோதும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்தது. நாமும் தொடர்ந்து முயற்சித்து வந்தோம். சமீபத்தில், இந்த நிர்வாகத்தில்  இப்பிரச்சினையை முன்வைத்து பேசினோம். நிர்வாகம் ஒரு  சாதகமான நிலைபாட்டை எடுத்தது. விரைவில் அந்த 4 பெண் ஊழியர்களுக்கும் / அலுவலர்களுக்கும் maternity leave with pay வழங்க முடிவு செய்தது. சென்ற  வாரத்தில் அந்த 4 தோழர்களையும் தலைமையலுவலகத்திற்கு அழைத்து, அவர்களுக்குரிய தொகையை வழங்கியுள்ளது

தொடர்ந்த PGBEA  மற்றும் PGBOUவின் முயற்சியால் இந்த காரியம் சாத்தியமானது. இணக்கமான அணுகுமுறையோடு இப்பிரச்சினையை கையாண்ட நிர்வாகத்தை பாராட்டுகிறோம்.
.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!