8.3.14

AIRRBEA முயற்சியால் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்!

கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும்  வங்கித்துறையில் கம்ப்யூட்டரை புகுத்தியதையொட்டி, 1992ல் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில் அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என்று கையெழுத்தாகியிருந்தது.

இந்த ஒப்பந்தத்தை கிராம வங்கியில் ஊதிய உயர்வு அமல்படுத்துகிறபோது, கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க மறுத்து ஆணை வெளியிட்டது மத்திய அரசு. அந்த ஒப்பந்தப்படித்தான், நமக்கு பென்ஷனும் வங்கப்படவில்லை. இதனை எதிர்த்து  நமது அகில இந்திய சங்கம் AIRRBEA தான் போராடியது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கர்நாடகா ஹை கோர்ட்டில் தொடுத்த வழக்கில்  ‘பென்ஷன் நமக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில்தான் ’கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும்’ என்கிற தீர்ப்பும் அடங்கியிருந்தது..

இதனை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்திருந்தது.  கடந்த பிப்ரவரி மாதத்தில் , மத்திய அரசுவின் அப்பீல் நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் எழுந்திருப்பதால், மத்திய அரசின் நிதியமைச்சகம் நபார்டுக்கு ஒரு கடிதம் எழுதி, கிராம வங்கிகளுக்கு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்டை prospective effectஆக (இப்போதிலிருந்து)  கொடுப்பது குறித்து சில விபரங்களைக் கேட்டு இருக்கிறது. நபார்டு, அந்த விபரங்களை ஸ்பான்ஸர் வங்கிகளுக்கு கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. அந்தக் கடிதத்தின் நகலை சென்ற சனிக்கிழமை (1.3.2014) நமது அகில இந்திய சங்கம் நமக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்களுடன் பேசி, சாதகமான பதிலைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, நாம் நமது வங்கியின் சேர்மன், பொது மேலாளார் ஆகியோரோடு உடனடியாக பேசினோம். ‘அப்படி விபரங்கள் கேட்டு கடிதம் இன்னும் தங்களுக்கு வரவில்லை. வந்தால் நிச்சயம் சாதகமான பதிலை எழுதுகிறோம்’ என நம்பிக்கை தெரிவித்தார்கள். தொடர்ந்து followup  செய்வோம்.  விரைவில் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் அனைத்து கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.

இதே நேரத்தில், நமது பாண்டியன் கிராம வங்கியில் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்டிற்கு நாம் எடுத்துள்ள முயற்சிகளையும் தோழர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 1992லிருந்து கம்ப்யுட்டர் இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என PGBEA , லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தியது. இருதரப்பிலும் நடந்த வாதங்களுக்குப் பிறகு, அந்தப் பேச்சுவார்த்தை failure ஆனது. அந்த ரிப்போர்ட் தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு டிரியூப்னலுக்கு அந்த வழக்கு refer செய்யப்பட்டது. அங்கு நடந்த விசாரனைகளுக்குப் பிறகு 2004ம் ஆண்டு,, பாண்டியன் கிராம வன்கியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் retrospective effect ஆக (1992லிருந்தே) கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வெளியானது. நமது பாண்டியன் கிராம வங்கி  நிர்வாகம் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீலுக்குச் சென்றது. கோர்ட்டில் 15 லட்சம் mount கட்டச் சொன்னார்கள். நமது நிர்வாகம் 15 லட்சம் mount தொகை கட்டி வழக்கு நடத்திக்கொண்டு இருக்கிறது. அதிலும் நமக்கு சாதகமான தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில்  நினைவு படுத்திக் கொள்கிறோம்.

ஆக, கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் பெற்றுத்தருவதற்கான அனைத்து வழிகளிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டது AIRRBEAவும், PGBEAவும் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

Comrades! Please share your views here!