இன்று Work discipline குறித்து PAD/76/2014-15 என்று ஒரு சர்க்குலரை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கிளைகளில் customer service பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த சர்க்குலர் ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம் staff punctuality இல்லாததுதான் என நிர்வாகத்தின் துப்பறியும் புலிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதிலும் நமது தொழிற்சங்கத் தலைவர்கள் வங்கிப்பணி நேரத்தில் தொழிற்சங்கப் பணிகள் செய்வதுதான் முக்கிய காரணம் என நிர்வாகம் முடிவுக்கு வருகிறது.
அப்புறம் என்ன, வங்கி நேரத்தில் வங்கி வேலைகள்தான் பார்க்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்ன என்றால் இதுதான்.
முதலில் கஸ்டமர் சர்வீஸிலிருந்தே நாமும் ஆரம்பிப்போம்.
இன்றைக்கு அதிகரித்துக்கொண்டு இருக்கும் வேலைப்பளுவும், கிளைகளில் வாட்டி வதைக்கும் ஆள் பற்றாக்குறையுமே கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படுவதற்கான அடிப்படை காரணம் என்பதை நேற்று வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்கள் கூட சொல்வார்கள். 2014ம் வருடத்தில் திறக்க வேண்டிய கிளைகளை வேக வேகமாக திறந்து விட்டார்கள். ஆனால் 2014ம் வருடத்திற்கு தேவையான புதிய பணி நியமனம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் 8 பேர், 10 பேர் என்று மொத்த மொத்தமாய் நமது தோழர்கள் பணி நிறைவு பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதனால் எல்லாம் கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படவில்லையாம். நமது தொழிற்சங்கத் தலைவர்களின் தொழிற்சங்கப்பணிகள் மட்டுமே காரணமாம்.
அடிக்காத Key Board, தெரியாத monitor, எண்ணாத counting machine, படம் பிடிக்காத CCTV காமிரா, ஓடாத fan, எரியாத light, விளங்காத generator, அடிக்கடி அசையாமல் நின்றுவிடும் crown software-களோடு மல்லுக்கட்டிக்கொண்டு நமது தோழர்கள் கிளைகளில் பணியாற்றும் அவலத்தை இந்த நிர்வாகம் அறியுமா? இந்த நிலைமையைப் பார்த்து வங்கியில் பணிக்குச் சேர்ந்த புதியவர்கள் தலைதெறிக்க ஓடுவதை இந்த நிர்வாகம் உணருமா? ஆனால் இதனால் எல்லாம் கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படவில்லையாம். நமது தொழிற்சங்கத் தலைவர்களின் தொழிற்சங்கப்பணிகள் மட்டுமே காரணமாம்.
இப்படிப்பட்ட நிர்வாகத்தின் மேற்படி `அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு` சர்க்குலரில் மற்ற வங்கிகளின் போட்டியின் தன்மை நமது வங்கியை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். மற்ற வங்கிகளில் சொந்தமாக ஏ.டி.எம்கள் நிறுவப்பட்டு காலங்கள் பலவாகிவிட்டன. கேரள கிராம வங்கி Net banking-ற்கு உயர்ந்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இங்கோ வாடகைக்குக் கூட ஏ.டி.எம் கிடைக்காமல் நாமும் கஸ்டமர்களும் பரிதாபமாக விழித்துக்கொண்டு இருக்கிறோம்.
இன்னும் பல கிளைகளில் பாஸ் புத்தகங்களில் கை நோக பதிவுகளை நமது தோழர்கள் பதிந்துகொண்டு இருக்கின்றனர். NEFT-பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய இரண்டு நாட்களாகின்றன.
பிசினஸ் கரஸ்பாண்டெட் டுகளுக்கு கொடுக்கப்பட்ட மெஷின்கள் ரூ.110/- ரீ சார்ஜ் செய்தால் வேலை செய்யும். ஆனால் ஆறு மாதங்களாக அவை வேலை செய்யவில்லை. இந்த கதியில் II phase மெஷின் கொடுக்கப் போகிறார்களாம்.
இப்படி தொழிநுட்ப ரீதியாக நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு, customer service என்றும், Competition என்றும் கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம்?
மாறாக, இதற்கெல்லாம் ஊழியர்கள் மீதும், தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் பழி போடுவது என்ன நியாயம்?
Disciplinary Proceedingsல், retirement-ல் staffகளை பாடாய் படுத்துவது, staff benefitகளை காலதாமதம் செய்வது என்று இந்த நிர்வாகம் பல வழியிலும் ஊழியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவைகளை எதிர்த்துத்தான் தொழிற்சங்கமும் அதன் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றனர். we are only reacting! ஆனால் அதை கூட சகித்துக்கொள்ள முடியாமல் இந்த நிர்வாகம், customer service பாதிக்கப்படுகிறது என்னும் பழியை நம் மீது சுமத்தத் துணிந்திருக்கிறது.
நேரம், காலம் இல்லாமல் வேலை பார்க்கும் நம்மீது இப்படியொரு தாக்குதலுக்கு நிர்வாகம் துணிந்து விட்ட போது நாமும் நம் வேலைகளில், விதிகளில் கறாராய் இருப்போம் என முடிவெடுக்க வேண்டி வரும்.
சரியாக 4 மணிக்கு கேஷை முடிப்பது, TXN போட்டு வவுச்சர் வந்தால்தான் பணம் பட்டுவாடா செய்வது, முறையாகத்தான் fundsக்குப் போவது என நம்மை சரிசெய்து கொண்டால்தான் இந்த நிர்வாகத்துக்கு புத்தி வரும்.
பாண்டியன் கிராம வங்கியில் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதில் ஒன்றுபட்டு நின்று நிர்வாகம் நம் மீது சுமத்திய பழியைத் துடைப்போம்!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!