5.4.15

Circular 3/2015 dated 5.4.2015

சுற்றறிக்கை எண்: 3/2015    நாள் : 5.4.2015

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

கிராம வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிராக, Joint Forum of Gramin Bank Unions (JFGBU) வின் அறைகூவலை ஏற்று டெல்லிக்கு நமது சங்கத்தின் சார்பில் 22 தோழர்கள் கலந்துகொண்டோம்.

அதே உற்சாகத்தோடும், எழுச்சியோடும் 27.3.2015 அன்று தலைமையலுவலகத்தின் முன்பாக தர்ணாவில் பங்கேற்றோம். இன்றைக்கு இருக்கும் கிளைகளின் விரிவாக்கம், தொலைதூரக் கிளைகள், கிளைகளில் இருக்கும் manpower shortage, ஆண்டு இறுதிக் கணக்கு முடிக்கும் சமயம் எல்லாம் தாண்டி 150க்கும்  மேற்பட்ட தோழர்கள் தர்னாவில் கலந்து கொண்டனர். அதில் சரிபாதியாக 2008க்குப் பிறகு பணிக்குச் சேர்ந்த புதிய தோழர்களும், 20 க்கும் மேற்பட்ட பெண் தோழர்களும் கலந்துகொண்டனர். உணர்வு பூர்வமாகவும், ஈடுபாட்டோடும் அவர்கள் கலந்துகொண்டது மொத்த தர்ணாவுக்கும் சிறப்பு சேர்த்த விஷயம்.

PGBWU தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன்  தர்ணாவுக்கு தலைமை வகித்தார். தோழர்.கிருஷ்ணன் (AIRRBE-TN president), தோழர்.போஸ்பாண்டியன் (VP- PGBOU), தோழர்.தேனீவசந்தன் (CITU).  தோழர்.பாலாஜி பாலகிருஷ்ணன் (WP - PGBWU),  தோழர்.சங்காலிங்கம் (GS-PGBOU), தோழர்.சங்கரசீனிவாசன் (JS-PGBWU), தோழர்.பாலன் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்), தோழர்.முத்துவிஜயன் (EC- AIRRBEA, TN) ஆகியோர் கோரிக்கைகளை விளக்கியும், ஆதரித்தும் பேசினர். போராடாமல் இங்கு வாழ்க்கையில்லை என்பதை உணர்த்தினர். இறுதியாக நிறைவுரையாற்றிய தோழர்.மாதவராஜ் (GS - PGBWU) கிராம வங்கிகளை தனியார் மயமாக்குவதால் ஏற்படும் ஆபத்துக்களை விளக்கினார். நிர்வாகக்குழுவில் இடம்பெறும் தனியார்களுக்கு, லாபத்தை உயர்த்தி அவர்களது டிவிடெண்டுகளை அதிகரிக்கும் எண்ணம் மட்டுமே மேலோங்கும், அதனால் பாதிக்கப்படுவது கிராம வங்கிகளில் பணிபுரிகிற ஊழியர்களும், அலுவலர்களும் என்பதை விளக்கினார். புதிய manpower policyயால் கடுமையான ஆள்குறைப்பு இருக்கும் என எச்சரித்தார். தோழர்.சாமுவேல்ஜோதிக்குமார் (President - PGBOU) நன்றி கூற தர்ணா மீண்டும் உரத்த கோஷங்களோடு நிறைவடைந்தது.

ஏப்ரல் 28ம் தேதி ஒருநாள் அகில இந்திய வேலைநிறுத்தம் செய்ய JFGBU அறைகூவல் விடுத்துள்ளது. நமது வங்கியின் அனைத்துச் சங்கங்களின் ஒத்துழைப்போடு நாம் வேலைநிறுத்தத்தை முழு வெற்றிகரமாக்குவோம்.


தற்காலிக கடைநிலை மெஸஞ்சர்களை 
நிரந்தரமாக்கும் மகத்தான தீர்ப்பு:

தற்காலிக மெஸஞ்சர்களை நிரந்தரமாக்க நாம் 2008ம் ஆண்டில் துவங்கிய போராட்டத்திற்கும், முயற்சிக்கும் 2015ம் ஆண்டில் மகத்தான தீர்ப்பு கிடைத்திருக்கிறது.  தற்காலிக ஊழியர்கள் குறித்து பத்திரிகைகளில் எழுதியதற்காக சஸ்பென்ஷன் செய்யப்பட்ட தோழர்கள் காமராஜ் மற்றும் அண்டோ, தற்காலிக ஊழியர்களுக்கான தொழில்தாவாவை ALC முன்பு முதலில் ஏற்படுத்திய மறைந்த அருமைத் தோழர்.செல்வகுமார் திலகராஜ், லேபர் கோர்ட்டில் சாட்சிகளாக ஆஜராகி உண்மைகளை தயங்காமல் எடுத்துரைத்த தோழர்கள் போஸ் பாண்டியன், சாமுவேல் ஜோதிக்குமார் என இந்த நெடிய பயணத்தில் நமக்கு ஆதரவாகவும், இணைந்தும் நின்ற அனைவரையும் நினைத்துக் கொள்வோம்.

அது போல இந்த தீர்ப்புக்கு ஆதாரமாக அமைந்திருப்பது 2011ம் ஆண்டு நமது வங்கி நிர்வாகக்குழுவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம். 5 வருடங்கள் பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்யலாம் என்னும் அந்த தீர்மானமே இப்போது தீர்ப்பாக வந்துள்ளது. அதனை நிறைவேற்றிய நிர்வாகக் குழுவிற்கும், அதற்கு உதவிகரமாக இருந்த வங்கியின் உயரதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்.

தீர்ப்பினை ஏற்று, தற்காலிக மெஸஞ்சர்களை நிரந்தரம் செய்ய நிர்வாகம் சாதகமான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறோம். இதுகுறித்து மிக விரைவில் நிர்வாகத்தை சந்தித்து நாம் பேச இருக்கிறோம்.

பென்ஷன்:

பென்ஷனை அமல்படுத்தும் முறையை வழக்குத் தொடுத்த சங்கங்களோடு விவாதித்து இறுதி செய்யவும்,  அதனை 11.3.2015 நீதிமன்றத்தில் அறிவிக்கவும்  உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு 26.11.2014 அன்று ஆணையிட்டது. AIRRBEAவிலிருந்து மத்திய அரசோடு விவாதிப்பதற்கு பலமுறை கடிதங்கள் எழுதப்பட்டன. அசையாமல் இருந்த நிர்வாகம் 2.3.2015 அன்று பென்ஷன் குறித்து ஆராய நபார்டு சேர்மன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்துள்ளது.  அந்த கமிட்டி 24.3.2015 அன்று கூடி பூர்வாங்கமாக சில விஷயங்களை விவாதித்துள்ளது. இன்னும் சில RRBகளிலிருந்து தேவையான விபரங்கள் வரவில்லையென்றும், அவைகளை பெற்று மீண்டும் ஏப்ரல் முதல் வாரத்தில் மீண்டும் கூடி விவாதிப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்தக் கமிட்டி வழக்குத் தொடுத்த சங்கங்களோடு பேசி இறுதி செய்யும்.

தொழிற்சங்கங்களின் மீது நிர்வாகத்தின் தாக்குதல்:

புதிய நிதியாண்டின் முதல் நாளில் Work discipline குறித்து  PAD/76/2014-15  என்று ஒரு சர்க்குலரை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கிளைகளில் customer service பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த சர்க்குலர் ஆரம்பிக்கிறது. அதற்கு காரணம்  staff punctuality  இல்லாததுதான் என நிர்வாகத்தின் துப்பறியும் புலிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அதிலும் நமது தொழிற்சங்கத் தலைவர்கள்  வங்கிப்பணி நேரத்தில் தொழிற்சங்கப் பணிகள் செய்வதுதான் முக்கிய காரணம் என நிர்வாகம் முடிவுக்கு வருகிறது. அப்புறம் என்ன, வங்கி நேரத்தில் வங்கி வேலைகள்தான் பார்க்க வேண்டும் என்றும் இல்லையென்றால் கடும் நடவடிக்கைகள் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது என்ன என்றால் இதுதான்.

முதலில் கஸ்டமர் சர்வீஸிலிருந்தே நாமும் ஆரம்பிப்போம்.இன்றைக்கு அதிகரித்துக்கொண்டு இருக்கும் வேலைப்பளுவும், கிளைகளில் வாட்டி வதைக்கும் ஆள் பற்றாக்குறையுமே கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படுவதற்கான அடிப்படை காரணம் என்பதை நேற்று வங்கியில் பணிக்குச் சேர்ந்தவர்கள் கூட சொல்வார்கள். 2014ம் வருடத்தில் திறக்க வேண்டிய கிளைகளை வேக வேகமாக திறந்து விட்டார்கள். ஆனால் 2014ம் வருடத்திற்கு தேவையான புதிய பணி நியமனம் இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. அதே நேரத்தில் ஒவ்வொரு மாதமும் 8 பேர், 10 பேர் என்று மொத்த மொத்தமாய் நமது தோழர்கள் பணி நிறைவு பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இதனால் எல்லாம் கஸ்டமர் சர்வீஸ் பாதிக்கப்படவில்லையாம். நமது தொழிற்சங்கத் தலைவர்களின்  தொழிற்சங்கப்பணிகள் மட்டுமே காரணமாம்.

அடிக்காத Key Board, தெரியாத monitor,  எண்ணாத counting machine, படம் பிடிக்காத CCTV காமிரா, ஓடாத fan, எரியாத light, விளங்காத generator, அவ்வப்போது நகராத crown software-களோடு மல்லுக்கட்டிக்கொண்டு நமது தோழர்கள் கிளைகளில் பணியாற்றும் அவலத்தை இந்த நிர்வாகம் அறியுமா? இந்த நிலைமையைப் பார்த்து வங்கியில் பணிக்குச் சேர்ந்த புதியவர்கள் தலைதெறிக்க ஓடுவதை இந்த நிர்வாகம் உணருமா?

நிர்வாகத்தின்  சர்க்குலரில் மற்ற வங்கிகளின் போட்டியின் தன்மை நமது வங்கியை அச்சுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள். மற்ற வங்கிகளில் சொந்தமாக ஏ.டி.எம்கள் நிறுவப்பட்டு காலங்கள் பலவாகிவிட்டன. கேரள கிராம வங்கி Net banking-ற்கு உயர்ந்து நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இங்கோ வாடகைக்குக் கூட ஏ.டி.எம் கிடைக்காமல் நாமும் கஸ்டமர்களும் பரிதாபமாக விழித்துக்கொண்டு இருக்கிறோம்.

இன்னும் பல கிளைகளில் பாஸ் புத்தகங்களில் கை நோக பதிவுகளை நமது தோழர்கள் பதிந்துகொண்டு இருக்கின்றனர். NEFT-பரிவர்த்தனையில் ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய இரண்டு நாட்களாகின்றன. பிசினஸ் கரஸ்பாண்டெட்டுகளுக்கு கொடுக்கப்பட்ட மெஷின்கள் ரூ.110/- ரீ சார்ஜ் செய்தால் வேலை செய்யும். ஆனால் ஆறு மாதங்களாக அவை வேலை செய்யவில்லை. இந்த கதியில் II phase மெஷின் கொடுக்கப் போகிறார்களாம்.

இப்படி தொழிநுட்ப ரீதியாக நம்மை பின்னுக்குத் தள்ளி வைத்துவிட்டு, customer service என்றும்,  Competition  என்றும் கூப்பாடு போட்டு என்ன பிரயோஜனம்? இத்தனைக்கும் மத்தியில் நாம் பார்க்கும் பணிகளுக்காக நம்மை பாராட்டுவதை விட்டு பழி போடுவது என்ன நியாயம்?

பலவித சிரமங்களுக்கு ஆளான போதும், வங்கியின் நலன் கருதி நாம் பொறுமை காத்தோம். வாடிக்கையாளர்களிடம் நாசூக்காக பேசி பிசினஸை உயர்த்த அரும்பாடு பட்டோம். போதுமான Manpower இல்லாத போதும் கிளைகள் திறக்க ஒத்துழைத்தோம். அதற்குரிய மரியாதை இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்த நிர்வாகத்திற்கு குறைந்தபட்ச மனிதத் தன்மை கூட இல்லையென்பது உறுதியாகிவிட்டது.

Disciplinary Proceedingsல், retirement-ல்  staffகளை பாடாய் படுத்துவது, staff benefit- களை காலதாமதம் செய்வது என்று இந்த நிர்வாகம் பல வழியிலும் ஊழியர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவைகளை எதிர்த்துத்தான் தொழிற்சங்கமும் அதன் தலைவர்களும் தங்கள் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றனர்.  we are only reacting! அதை கூட நிர்வாகத்தால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

கிளை மேலாளர்கள், வட்டார மேலாளர்கள், முதன்மை மேலாளர்கள் எல்லாம் நம்மை கண்காணிக்க வேண்டுமாம். மேலிடத்திற்கு ரிப்போர்ட் செய்ய வேண்டுமாம். என்னவிதமான பார்வை இது? நம்மை அடிமைகள் போலவும், குற்றவாளிகள் போலவும் நடத்தவே இந்த நிர்வாகம் விரும்புகிறது. எனவே நாம் அவர்களுக்கு நிமிர்ந்து நின்று, `நாம் மனிதர்கள், உணர்வும் அறிவும் கொண்ட மனிதர்கள், அநியாயங்களை எதிர்த்து நிற்கிற மகத்தான மனிதர்கள்` என்பதை முகத்தில் அறைகிற மாதிரி சொல்லியாக வேண்டி இருக்கிறது.

வங்கிப் பணிகளில் நாம் ஈடுபடவில்லை என்றால், `No work No pay'அமல் செய்யப்படுமாம். ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுமாம். ஆனால் அதற்கு அர்த்தம் அதுவல்ல. தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே. இந்த மிரட்டல்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதற்கு எதிராக திரண்டு நிற்கும் எங்கள் ஒற்றுமையும், உறுதியும் இந்த நிர்வாகத்துக்கு ரொம்பப் புதிதாக இருக்கப் போகிறது.

பணிகளை ஒழுங்கமைத்துக் கொள்ளத் தெரியாத, பார்க்க வேண்டிய நேரத்தில் வேலை பார்க்காத, இரவில் உட்கார்ந்து பணிபுரியும் ஒரு சிலரே இந்த நிர்வாகத்தின் உண்மையான விசுவாசமான ஊழியர்களாக இருக்கட்டும். அவர்களை வைத்து இந்த நிர்வாகம் Customer service செய்து கொள்ளட்டும்.

பொறுத்ததெல்லாம் போதும், பொங்கி எழுவோம்.

நம்மீது வீண் பழி சுமத்தவும், தாக்குதல் நடத்தவும் நிர்வாகம் துணிந்து விட்ட போது நாமும் நம் வேலைகளில், விதிகளில் கறாராய் இருப்போம்.

ஆம் தோழர்களே, இனி நாம் கீழ்க்கண்டவாறு விதிப்படி வேலைகளை மேற்கொள்வோம்.

1. ரூ.275/- தினச் சம்பளம் பெறும் தற்காலிக கடைநிலை ஊழியர்களைத் தவிர மற்ற எந்த அவுட்சோர்சிங்கையும் கிளைப் பணிகளை செய்ய அனுமதிக்காமல் நாமே முடிந்தவரை செய்வோம்.
2. சரியாக 4 மணிக்கு கேஷை முடிப்போம்.
3. TXN போட்டு வவுச்சர் வந்தால் மட்டுமே பணம் பட்டுவாடா செய்வோம்.
4. தேவையான அனைத்து particulars இருந்தால் மட்டுமே account open பண்ணுவோம்.  Master அடிப்போம்.
5. ரூபாய் 50000/-க்கு மேல் டெபாசிட் பெறுவதற்கு PAN-ஐ வலியுறுத்துவோம்.
6. நிரந்தர ஊழியர்களோடு மட்டுமே Fundsக்குப் போவோம். தேவையான ஆட்கள் இல்லையென்றால் Regional Officeக்குச் சொல்லி முறைப்படி ஏற்பாடு செய்யச் சொல்வோம்.
7. எழுத்து பூர்வமான உத்தரவுகளை மட்டுமே மதிப்போம்.

இந்த விதிகளை நாம் வரும் வெள்ளிக்கிழமை 10.4.2015 முதல் அமல்படுத்துவோம். கிளைகளை கண்காணிக்கவும், தோழர்களுக்கு ஆலோசனை செய்யவும் மாவட்ட வாரியாக கமிட்டிகள் அறிவித்து தோழர்களுக்கு தெரிவிக்கப்படும்.

இனி சமரசத்திற்கு இடமில்லை. சில தீர்க்கமான முடிவுகளோடு நாம் போராட்ட களத்தில் இறங்குவோம்.

இனி நிர்வாகத்தின் தவறுகளை நாம் இங்கு சரி செய்வோம். குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வோம்.

பாண்டியன் கிராம வங்கியில் இயங்கும் அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதில் ஒன்றுபட்டு நின்று நிர்வாகம் நம் மீது சுமத்திய பழியைத் துடைப்போம்! தாக்குதல்களை முறியடிப்போம்!!

விரைவில் சந்திப்போம்.

தோழமையுடன்


(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்

3 comments:

  1. i think except tamilnadu and kerala all the states have completed their recruitment...

    ReplyDelete
  2. sir please update us about this year scale 1 and OA recruitment...

    ReplyDelete

Comrades! Please share your views here!