2013ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மிக ரகசியமாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் ஒரு அநீதியை இழைத்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இரண்டு graduation incrementகள் (ரூ.400 + ரூ.400) குறைக்கப்பட்டு, ரூ.8000/-த்திற்கு பதிலாக ரூ..7200/-ஆக அடிப்படை ஊதியம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த புதிய தோழர்களுக்காக graduation increment வாங்கித்தர கடுமையாக முயற்சித்து வந்தோம்.
கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொருமுறை வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் IBAவுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படும்போதெல்லாம் . மத்திய அரசு கிராம வங்கி ஊழியர்களுக்கும் அந்த இருதரப்பு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதன்படி, 24.7.2010ம் ஆண்டு மத்திய அரசு 9 வது இருதரப்பு ஒப்பந்தப்படி கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்தது. ஆனால் 11.2.2013ம் தேதி நபார்டு திடுமென கிராம வங்கி சேர்மன்களுக்கு தன் இஷ்டத்திற்கு ஒரு கடிதம் எழுதி graduation incrementஐ நிறுத்த ஏற்பாடு செய்தது. நிர்வாகத்திடம் பேசினோம். நபார்டு 11.2.2013 தேதியிட்டா கடிதத்தில். அனைத்து கிராம வங்கிகளுக்கும் ”இவ்விஷயத்தை நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும், நிதியமைச்சகத்திலிருந்து பதில் வரும் வரை கிராம வங்கி நிர்வாகங்கள் காத்திருக்க வேண்டும்’ என எழுதியிருப்பதை காட்டியது. கிரம வங்கி நிர்வாகங்களும் நபார்டை கைகாட்டிவிட்டு தங்களுக்கு இதில் பொறுப்பில்லை என நழுவிக்கொள்ளலாம்.
இது கிராம வங்கி நிர்வாகங்கள், நபார்டு, நிதியமைச்சகம் ஆகிய அனைவரின் குள்ளநரித்தனமான வேலை. இப்படி ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதைக் காரனம் காட்டி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இந்த இரண்டு இன்கிரிமெண்ட்கலை நிறுத்திவிடலாம் என்னும் சூழ்ச்சி இது
PGBEA இவ்விஷயத்தில் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அகில இந்திய சங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நிதியமைச்சகத்தோடு தொடர்பு கொள்ள வைத்தோம். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நபார்டு, நிதியமைச்சகத்திலிருந்து RTI Act மூலம் கேட்டு வாங்கி சேகரித்தோம்.
இறுதியாக , சென்னை ஹைகோர்ட்டு மதுரை கிளையில் PGBEA சார்பில் வழக்குத் தொடர்ந்தோம். நபார்டு எழுதிய கடிதம் செல்லாது எனவும், PGB நிர்வாகம் உடனடியாக 2013ல் வங்கியில் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கும் இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். 25.2.2014ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. PGB, NABARD, Govt of Indiaவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றன. நபார்டு தரப்பில், சொல்வதற்கு எந்தவித காரணமும், முகாந்திரமும் இல்லாததால், இவ்வழக்கு மிக விரைவில் நமக்கு சாதகமாக முடிவாகும்.
அதுவரை புதிதாக பணிக்குச் சேர்ந்த Office Assistantகள் ஓவ்வொரு மாதமும் basic pay ரூ.800 + அதற்குரிய DAவையும் மாதாமாதம் RDயில் போட்டு வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். 2013ல் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கு மட்டுமல்ல, இனி இந்த வங்கியில் பணிக்குச் சேரவிருக்கிற அனைத்து புதிய Office Assistant களுக்கும் இரண்டு graduation incrementகள் உறுதி செய்யப்படுகிறது.
PGBEA எப்போதும் தோழர்களுக்காக துணை நிற்கும். தோழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்!
No comments:
Post a Comment
Comrades! Please share your views here!