2.6.17

குற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்!


Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம்  தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.



10.2.2015 அன்று சென்னை லேபர் கோர்ட்டில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டது.

”31.3.2011 தேதியன்று 5 வருடம் வங்கியில் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்கள் அனைவரும், அந்த தேதியிலிருந்தே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். மற்றவர்களுக்கு, வங்கிப்பணியில் நியமனம் செய்வதற்கு, அவர்கள் வங்கியில் எந்த தேதியில் பணிக்குச் சேர்ந்தார்களோ, அந்த தேதி கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.”

இந்தத் தீர்ப்பை அமல்படுத்த முடியாது என்றால், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் முப்பது நாட்களுக்குள் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்திருக்க வேண்டும். அப்போதைய நிர்வாகம் அப்பீலுக்குச் செல்லவில்லை. தீர்ப்பை அமல்படுத்துவதாக சங்கத்திடம் தெரிவித்தது. 23.3.2015 அன்று இந்திய அரசிலிருந்து முறையாக அவார்டு நிர்வாகத்துக்கும், சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு விட்டது.

தீர்ப்பை ஒப்புக்கொள்வதாக அறிவித்த நிர்வாகம் ஆனால் அமல்படுத்தாமல் காலதாமதம் செய்தது. ஸ்பான்ஸர் வங்கியில் அனுமதி பெற வேண்டும் என இழுத்தடித்தது. நாம் எனவே, தற்காலில மெஸஞ்சர்களின் பணி நிரந்தரத்தையும் ஒரு கோரிக்கையாக்கி 15.11.2015 அன்று நிர்வாகத்துக்கு கடிதம் எழுதி ஒருநாள் வேலை நிறுத்தம் அறிவித்தோம்.

மதுரை லேபர் கமிஷனர் தலையிட்டு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். பேச்சுவார்த்தையில் நிர்வாகத்தை கடுமையாக எச்சரித்தார். லேபர் கோர்ட்டு தீர்ப்பை நிர்வாகம் அமல்படுத்தி ஆக வேண்டும், அது சட்டரீதியான அவசியம் கொண்டது என 7.1.2016 நடந்த பேச்சுவார்த்தையில் எழுத்து பூர்வமாகக் குறிப்பிட்டார்.

அதன் பின்னர் தற்காலிக மெஸஞ்சர்கள் யாரெல்லாம் இந்த வங்கியில் 31.3.2011 அன்று ஐந்து வருடம் பணி புரிந்திருக்கிறார்கள் என்பதை record verification  செய்த அறிய செய்ய மண்டல அலுவலகங்கள், தலைமையலுவலகத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் அனுப்பப்பட்டனர். Verification முடிந்ததும் யாரெல்லாம் அவார்டின்படி ஐந்து வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்கள் என்னும் லிஸ்ட் இறுதி செய்யப்படும் என நமக்குத் தெரிவித்தனர். இதனை 30.6.2016 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் எழுத்து பூர்வமாக நிர்வாகம் பதிவு செய்திருக்கிறது.

கிளைகளுக்குச் சென்று verification நடத்தியதில் 53 தற்காலிக மெஸஞ்சர்கள் அவார்டின் படி பணி நிரந்தரம் செய்யத் தகுதி உள்ளவர்கள் என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவார்டின் ஒரு partyயாக இருப்பதால்அது குறித்த தகவல்களை எழுத்துபூர்வமாக நிர்வாகம் நமக்குத் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதத்தில் முதற்கட்டமாக 19 தற்காலிக மெஸஞ்சர்களை பணிநிரந்தரம் செய்யப் போவதாகவும், மற்றவர்களை அடுத்தக் கட்டமாக பணிநிரந்தரம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைவரையும் பணிநிரந்தரம் செய்ய வழிகள் மேற்கொள்ளப்படும் எனவும் சொல்லப்பட்டது.


பணிநிரந்தரம் செய்ய காலதாமதம் ஆனதால், நாம் போராட்டங்களில் இறங்கினோம். 6.4.2017 அன்று செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதமும், 10.4.2017 முதல் 12.4.2017 வரை தற்காலிக மெஸஞ்சர்கள் குடும்பத்தோடு உண்ணாவிரதமும் நடத்தப்பட்டது.   உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறும், மிக விரைவில் பணிநிரந்தரம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்வதாகவும் சேர்மன் உறுதியளித்ததன் பேரில் 12.4.2017 உண்ணாவிரதம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

நிர்வாகத்தரப்பில் 8.5.2017 அன்று 19 தற்காலிக மெஸஞ்சர்களுக்கு பணிநிரந்தரம் செய்வதற்கான கடிதம் அனுப்பப்பட்டது. கடிதத்தில் கேட்டு இருந்தபடி 19 தற்காலிக மெஸஞ்சர்கள் 15.5.2017 அன்று தலைமையலுவலகம் வந்து தேவையான சர்டிபிகேட்களை கொடுத்தனர். Service agreementலும் கையெழுத்திட்டனர். அவர்களுக்கு உரிய போஸ்டிங் ஒன்றிரண்டு நாட்களில் தெரிவிக்கப்படும் என சேர்மன் நேரில் உறுதிமொழி அளித்தார்.

18. 5.2017 அன்று நமது சங்கத்தை அழைத்து  பணிநிரந்தரத்தை நிறுத்தி வைக்குமாறு நபார்டு சொல்லி இருப்பதாகவும், தான் இனி அதனை தொடர முடியாத நிலையில் இருப்பதையும் வங்கியின் சேர்மன் தெரிவித்தார். இது அகில இந்தியப் பிரச்சினையாக இருப்பதால், அகில இந்திய சங்கத்தை வைத்து முடித்துக்கொள்ளுங்கள் என சேர்மன் சொன்னார்.


லேபர் கோர்ட்டு அவார்டை நிர்வாகம்தான் நிறைவேற்ற வேண்டும், நபார்டு, அரசு தலையிட முடியாது என நாம் தெளிவாக எடுத்துரைத்தும் நிர்வாகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிர்வாகம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, தற்காலிக மெஸஞ்சர்களின் எதிர்காலத்தையும் புறம் தள்ள தயாராகிவிட்டது. தனது நம்பகத்தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. 19.5.2017 அன்றைய நமது வாயிற்கூட்டத்தில் இதனை அழுத்தமாகத் தெரிவித்துவிட்டோம்.

இனி நிர்வாகத்தின் நடவடிக்கைகளை, வாக்குறுதிகளை நம்புவதாக இல்லை. லேபர் கோர்ட் தீர்ப்பின்படி தற்காலிக மெஸஞ்சர்கள் 31.3.2011ம் தேதியிலிருந்து பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். இனி இதில் எந்த வித சமரசமும் கிடையாது.

லேபர் கோர்ட்டுத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றும் அதனால்
12.6.2017 அன்று வேலைநிறுத்தம் செய்ய இருப்பதாகவும்
லேபர் கமிஷனரிடம் முறையிட்டு இருக்கிறோம்.
 லேபர் கோர்ட்டுத் தீர்ப்பை அமல்படுத்தவில்லை என்றால் தொழில்தகராறுச் சட்டம் செக்‌ஷன் 29ன் பிரகாரம் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகிறது.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்,  உடனடியாக கோர்ட்டுத் தீர்ப்பின்படி தற்காலிக மெஸஞ்சர்களை பணிநிரந்தரம் செய்வதே அதற்கு அழகு!

3 comments:

  1. Just position!
    Greetings for the success of the 12.06.17 strike

    ReplyDelete
  2. Just cause and position of Workers Union.
    Greetings for the success of the 12.06.17 Strike

    ReplyDelete
  3. GREETS EVERY SUCCESS OF THE 12.06.2017 STRIKE

    ReplyDelete

Comrades! Please share your views here!