30.6.11

கருத்தரங்கம் - 11 Nov 2009




பாண்டியன் கிராம வங்கி: கருத்தரங்கம்

First Published : 11 Nov 2009 10:52:49 AM IST


ராமநாதபுரம், நவ. 10:   பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில், "கிராம வங்கிகள் கிராம மக்களுக்கே' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
  இக்கருத்தரங்குக்கு, வங்கி அதிகாரிகள் சங்க மாவட்டச் செயலர் பி. குசலவன் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் செயலர் கே. கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வங்கி ஊழியர்கள் சங்க மாவட்டச் செயலர் ஏ. சுந்தரவடிவேலு வரவேற்றார்.
  கருத்தரங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி துவக்கி வைத்துப் பேசினார்.
  ஊழியர் சங்கத் தலைவர் ஜெ. மாதவராஜ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தஞ்சை கோட்டச் செயலர் அறிவுக்கடல், ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் க. சௌந்தரபாண்டி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலர் ஹெச். ஜான் சௌந்தர்ராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலர் குருவேல் ஆகியோர், வங்கிகளில் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஏற்படும் சிரமங்கள் குறித்துப் பேசினர்.
  இதில், பாண்டியன் கிராம வங்கி இளையான்குடி கிளையின் மேலாளர் சௌந்தர நாகேஸ்வரன், தொலைத் தொடர்புத்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் வி. பிரேம்குமார், இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் அதன் செயலர் பி. முத்துப்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் கணேசமூர்த்தி உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
  அருளானந்தம் நன்றி கூறினார்.