புதிதாக திறக்கப் போகும் கிளைகளுக்கு காரைக்குடி, புதுக்கோட்டை, சிங்கம்புனரி போன்ற கிளைகளிலிருந்து 5 கிளரிக்கல் தோழர்களுக்கு நிர்வாகம் 24.6.2011 அன்று 5 கிளரிக்கல் தோழர்களுக்கு மாறுதல் உத்தரவுகள் பிரப்பித்து இருந்தது.
நமது சர்க்குலரில் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, வங்கியே கடுமையான ஆள் பற்றாக்குறையில் தவித்துக்கொண்டு இருக்க, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கிறது. காரைக்கடி, புதுக்கோட்டை போன்ற கிளைகளில் இனி கிளியரிங் செல்வதற்குக்கூட கிளரிக்கல் இருக்க மாட்டார்கள். நாம் நிர்வாகத்தின் தவறான நடைமுறையைக் கடுமையாக விமர்சனம் செய்தோம். புதிதாக திறக்கப் போகும் கிளைகளுக்காக, ஏற்கனவே இருக்கிற கிளைகளை பாதிப்படையச் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினோம்.
மேலும், தன் இஷ்டத்துக்கு நம் தோழர்களை மாறுதல் செய்து, கடுமையான வேலைப்பளுவை திணிக்கும் போக்கை நாம் அனுமதிக்கமுடியாது என்பதையும் தெளிவுபடுத்தினோ. நிர்வாகம் இப்போது, மாறுதல் உத்தரவுகளை நீக்கிவிட்டு, டெபுடேஷன் ஏற்பாடுகள் செய்வதாக கேள்விப்படுகிறோம்.
புதிய பணிநியமன வேலைகளை துரிதப்டுத்தி, தேவையான மனித சக்தியை வைத்துக்கொண்டு, புதிய கிளைகளை திறப்பதே நல்ல நிர்வாகமாக இருக்க முடியும் என்பதையும் சொல்லிக்கொள்கிறோம்.