26.6.11

25.6.2011 - Nellai zonal meeting

EA, OU சப் கமிட்டியில் முடிவெடுத்தபடி, 25.6.2011 அன்று திருநெல்வேலியில் வட்டாரக்கூட்டம் நடைபெற்றது. ஜூலை 7  அகில இந்திய  வேலை நிறுத்தத்திற்கான இந்த விளக்கக் கூட்டத்தில் PGBOU  பொதுச்செயலாலர்  தோழர்.சங்கரலிங்கமும், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜூம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

உறுப்பினர் விவாதங்களில், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கு குறித்து தோழர்கள் பேசினர். கடுமையான வேலைப்பளுவிலும், ஆள் பற்றாக்குறையிலும் தினந்தோறும் தாங்கள் படும்   அவலங்களை தோழர்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து பேசிய தோழர். மாதவராஜ், நிர்வாகம், நாம் முன்வைத்த computer increment, News Paper allowance, compliment  போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாத நிர்வாகம், மாறாக,  ஊழியர்கள் படும் கஷ்டங்களை கொஞ்சம்கூட உணர மறுப்பதையும் எடுத்துரைத்தார். ‘எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.” என்பதை சுட்டிக்காட்டினார்.